Saturday, 27 May 2023

இந்தியாவின் திறம்மிகுந்த அழியா 108 உண்மைகள்

 

                                                     புதியியதோர் உலகு செய்வோம் ...!


                                                                           001/108

அன்பார்ந்த வாசகர்களே ...l

வாரம் தோறும் நான் இங்கு இந்தியாவின் திறம்மிகுந்த அழியா 

108 உண்மைகளில் வாரம் ஒரு உண்மை என பதிவு செய்ய போகிறேன் .

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்வீர் ...!!!

இந்தியாவின் பழம் பெருமை பேச அல்ல இந்த பதிவு . உண்மையை 

எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். நம் பண்டைய 

இந்தியாவில் விஞ்ஞானம் எவ்வாறு இருந்தது என்பதை தெரிந்து 

கொள்ளவே இந்த உண்மைகள் ....


                                                          உண்மை 001/108


                                                       108-ன் முக்கியத்துவம் ...!!!


'108' இது அரசு ஆம்புலன்ஸ் பற்றி அல்ல .

உண்மை என்பது ஒன்று தான் . அதை கற்றவர் , ஞானிகள் வேறு வேறு

 விதமாக சொல்கிறார்கள் .இந்திய அறிவு இதை முற்றிலும் எதிர்

 ஒலிக்கிறது . முடிவாக ஆக்கல் -படைத்தல் என்பது கடவுள் மூலமாக 

வெளிபடுகிறது .( நாத்திகர்கள் இப்போதிற்கு இது பற்றி கவலை 

கொள்ள வேண்டியது இல்லை). ( உணமை 108ம்  முடிந்ததும் பதில் 

சொல்லுவேன் )


மொத்த படைப்பும் பால்வெளிகள் , கிரகங்கள் , நட்சதிரங்கள், மனித 

இனம் மற்றும் பிற உயிர் இனங்கள் உருவாக்கபட்டு , பாதுகாக்கபட்டு

தெய்வீக கோட்பாட்டில் இணைகின்றன .

பிரபஞ்ச படைப்பில் ஒரு ரிதம் , ஒரு நல்ல அமைப்பாக , ஒழுங்கு,

கட்டுபாடு உள்ளதாக உள்ளது .பண்டைய இந்தியர் இதை அறிந்து 

இருந்தனர். 


                  ரிதம் என்பது 108யை காரணியாக கொண்டு உள்ளது ...! 

இந்த மாய '108' பழம் பெறும் இந்தியர்களுக்கு மிகவும் முக்கியதுவம் 

உடையதாக இருந்தது. அது புனிதம் ஆனது. ஆன்மீக நிகல்ச்சிகளில் 

'108'கு அதிக முக்கியதுவம் அளிக்கபட்டது .

                  ஜப மாலையில் '108' மணிகள் உள்ளன .கடவுளுக்கு பூஜை 

நடத்தும்  போது ஆண் அல்லது பெண் தேவதைக்கு திரும்ப திரும்ப 

பாராயணம் செய்ய '108' முறைகள் உள்ளன .கடவுளை நாம் அடைய 

'108' முறைகள் உள்ளன. 

               வானவியலில் நமது ரிஷிகள் பல விஞ்ஞான உனமைகளை 

கண்டு பிடித்து உள்ளனர் ....!!!


                          # பூமிக்கும் சந்திரன்க்கும் இடை பட்ட தூரம் 

                             சந்திரன்னின் விட்டத்தை (Diameter) 108ல் 

                            பெறுக்கும் போது கிடைக்கிறது ...!

                          # பூமிக்கும் சூரியனுக்கும் இடை பட்ட தூரம் 

                             பூமியின் விட்டத்தை 108 ல்  பெறுக்கினால் கிடைக்க 

                             கூடியது ...!!

                          # சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தை விட 

                              108 மடங்கு உள்ளது .

இந்த கணக்கு எடுப்பு நவீன கால தூரங்களை ஒப்பிட்டு பார்க்கும் 

போது ஏறக்குறைய மிக சரியாக உள்ளது.


ஆயூர் வேதா :   இது நமது உடலில் '108' " மர்மா " புள்ளிகள் உள்ளதாக 

கூறுகிறது .இந்த 'மர்மா ' புள்ளிகள் தான் நமது உணர்வு மற்றும் சதையை 

சேர்த்து உயிர் அளிக்கிறது .


ஸ்ரீ சக்ரம் :    இந்த இயந்தரத்தில் 54 முக்கோண புள்ளிகள் மேல் நோக்கி 

உள்ளது . (சிவம் ). மேலும் 54 முக்கோணங்கள் கீழ் நோக்கி உள்ளது . (சக்தி ).

                                       சிவம் + சக்தி =   108 ( 54 + 54)

ஜோதிட கலை ( இது வேறு . வானவியல் வேறு ).

இதில் 27 சந்திர அடையாளங்களும் (நட்சதிரங்கள் )ஒவ்வொன்றும் 

4 ' பாதங்களை '  கொண்டு உள்ளது. மொத்தத்தில் 108 வகையான 

மனிதர்களை பகுக்கிறது . இந்த ஜோதிடதில் 12 வீடுகள் , 9 கிரகங்கள் 

உள்ளது .

                                             12 x 9 = 108


தந்த்ரா : சராசரியாக ஒருவரின் மூச்சு ஒரு நாளைக்கு 21,600 ஆக 

உள்ளது.                      

                       108 உள்ளே (சூரிய சக்தி ) ...108....வெளியே ( சந்திர சக்தி )...

                                         108 x 100 =  10800       

                                         108 x 200 =  21,600


நாட்டிய சாஸ்திரம் :  108 "கர்ணா "-களை பற்றி கூறுகிறது . அதாவது 

நாட்டியத்தில் கை மற்றும் கால் இணைந்து 108 முத்திரைகளை 

தருகிறது . ஆம். 108 வகையான அபிநயம் உண்டு.


சமஸ்க்ரிதம் :   சிவம் 54 .....சக்தி 54 ..ஆக 54 x 2 = 108 ( அக்ஷரம் )

பிரம்மா :   இவரது ஒரு நாள் 43,20,000 வருடங்கள் ( 4 யுகங்கள் ).

                             இதற்கு 108 ஒரு காரணி (Factor)


'108' குறிப்பது என்ன ?

                      1 + 0 + 8 = 108

                      1 - கடவுளை குறிக்கும் 

                      0 - காலி அல்லது முழுமையான ஆன்மீக பயற்சி 

                      8.- இது முடிவெலி ( பால் வெளி )-இடம் . மேலும் 8 

                           திக்கும் செல்லும் பால் வெளி ( SPACE)

கணக்கு :   1 x 1 = 1

                       2 X 2 = 4 

                       3 X 3 = 27

                      ஆக 1X4X7  =  108


                      108 ...! 108...!! 108...!!!

                     இது ஒரு ஆன்மீக எண் .

                     படைபிற்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர்பு .

                     இது தான் காஸ்மிக் ரிதம் ...!

                     உங்களை 108 முறை வணங்குகிறேன் ...!!


பண்டைய இந்தியாவில் வானவியலக்கு நமது ரிஷிகள் பங்கு ஏராளம் .


                  *   வேதங்கள் மற்றும் வானவியல் நூல்கள் பூமியை உருண்டை 

                       எனவே கூறுகிறது .

                   *   கிரகணங்கள் ஏற்படுவது ஏன் ? பூமியின் விட்டம் ,

                         சுற்று அளவு , ஒளியின் வேகம் குறித்து மிக சரியாக 

                        கூறி உள்ளார்கள் .

                     *  சூரிய மண்டலத்தின் மையம் சூரியன் தான் என மிக 

                         தெளிவாக கூறி உள்ளனர்.

                      * நியூடன்க்கு முன்பே புவி ஈர்ப்பு சக்தியை பயன் 

                         படுத்தி உள்ளனர் .

                       * கேல்குலஸ் (Calculas), திரிகோணமிதி , அட்வான்ஸ்டு மேத்ஸ் ,

                          புரிந்து வைத்து இருந்தனர் .

இதனுடன் நான் நிறுத்தி கொள்கிறேன் . படியுங்கள் . உங்கள் கருத்துகளை

 பதிவு செய்வீர் ...!!!


                                                   சுபம் 


                                             அடுத்த வாரம் :   உண்மை 002/108

                                             பூமியின் வடிவத்தை  கண்டு பிடிதத்து யார் ..?


                       என்றும் அன்புடன் , நேசத்துடன் ,

                       R. சத்ய நாராயணன்       ஸ்ரீ விவேக்                   28-05-2023


                       E-Mail :     contactsrivivek@gmail.com

மீண்டும் புதிய துவக்கம் ...!

 


                                                 நூல் 001/ 2023                   பக்கம் 001 


                                                  சாமியோவ் சாமி ...!

                                                கும்பிடுறேன் சாமியோவ் ...!!

வணக்கம் .

எமக்கு தொழில் எழுதுவது.

நான் பெரிய ஏழுத்தாளன்  அல்ல . தமிலில் 3 நூல்களும் ஆங்கிலதில் ஒன்றும்

பதித்து உள்ளேன் .

எனக்கு உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறய விஷயங்கள் உண்டு .

என் வாழ்க்கை ....

என் சோதனைகள் ...

என் வேதனைகள் ...

என் அனுபவங்கள் ...!    என சொல்லி கொண்டே போகலாம் . இவை பிறர்க்கு 

நல்ல பாடமாக இருக்கும் .

                                                  புரட்சி ...!!!

இந்த வார்த்தை என்னுடன் சம்பந்த பட்ட ஒன்று. 

ஆம்.

இளம்  வயதில் 1980 -களில் புரட்சிக்காரன் ஆனேன் . மத்திய அரசின் தொலை 

பேசி இலக்காவில் பணி ஆற்றினேன் . பின்பு அதை விட்டு விட்டு ( தியாகம் 

என்ற பேரில் நான் அதை விட்டது மாபெரும் தவறு என்று இப்போது

 உணர்கிறேன் ) முழு நேர புரட்சிக்காரனாக ஆனேன் .

எல்லாம் சில வருடங்கள் ...

                                          அதற்குள் பல அனுபவங்கள்....

                                           பல சோதனைகள் ....

                                           பல வேதனைகள் ....

பின் ...புரட்சிகர கட்சியை விட்டு வெளியே வந்தேன் .மார்க்ஸிய- லெனினிய 

கோட்பாடுகளை பின்பற்றியவன் நான் .

தற்போதும் மார்க்ஸியத்தில் ஈடுபாடு உண்டு. ஆனால் விமர்சனங்கள் உண்டு .

இந்த தொடரை எங்கே துவங்கி எங்கே தொடர்ந்து எங்கே முடிப்பேன் என்பது 

எல்லாம் நான் முடிவு செய்ய வில்லை .

என் மனம் போன போக்கில் எழுதுகிறேன் .....

சுய சரிதம் எழுதலாம் என நினைத்தேன் . ஆனால் மாற்றி கொண்டு விட்டேன் .

வாசகர்களுடன் ஓர் இணைபிரியா உறவை ஏற்படுத்த விரும்புகிறேன் .

எனவே வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதுவாகவே 

அமையும் .

அன்பர்களே ...!

நண்பர்களே ...!!

தோழர்களே ...!!!

நீங்கள் எதை பற்றி வேண்டுமானால் கேள்விகள் கேட்கலாம் .

பதில் சொல்ல நான் கடமை பட்டவன் .எனக்கு தெரிந்த வரை உண்மையை 

மட்டுமே சொல்லுவேன் .

எனது அறிமுக உரைக்கு ஒரு முற்று புள்ளி.

மீண்டும் சந்திப்போம்,,,,!!! !!!


உங்கள் நண்பன் - தோழன் 

R. சத்ய நாராயணன்                                                     ஸ்ரீ விவேக் 


                                                          28--05-2023


என் இமெயில் முகவரி  :   contactsrivivek@gmail.com   

Blogs                                        :    sathyan13.blogspot.com

                                                      srivivek108.blogspot.com


                                                     படியுங்கள் ....!

                                                     கேளுங்கள் ....!!

                                                     நன்றி . நன்றி .நன்றி ...!!! 


பின் குறிப்பு  :   srivivek108.blogspot.com    -ல் 


                                              இந்தியாவின் அழியா 

                                              மஹாபெரும் 

                                              திறம் மிகுந்த 

                                              108 

                                              உண்மைகள் ...!

குறித்து எழுத போகிறேன் . படியுங்கள் ...! பதில் போடுங்கள் ...!! நன்றி...!!!

Sunday, 14 May 2023

   வணக்கம். 


     நான் மீண்டும் எழுத முயற்சிக்கிறேன். 

      வாசகர்களின் கருத்துக்களுக்கு
      நிச்சயமாக மதிப்பு தரப்படும். 
நேர்மாறான முரண்பாடும் கணக்கு
எடுத்துக்கொள்ளப்படும். 

     அடுத்த வாரம் சந்திப்போம். 

     ஆர் சத்திய நாராயணன்
     Sri Vivek

      நன்றி. 

       14-05-2023