மலைக்கு பெண்கள் செல்லலாமா ?
நேற்று நடந்த உச்ச நீதி மன்ற வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தெளிவு பட குறி உள்ளார்.
எப்படி ஆணுக்கு சாமி கும்பிட உரிமை உள்ளதோ அதே உரிமை பெண்ணுக்கும் உள்ளது என்று.
கோவில் எனபது பொது இடம் இதில் ஆண் பெண் என்ற பெத்தான் கிடையாது . அரசியல் சட்டப்படி
பார்த்தாலும் பெண்ணுக்கு சபரி மலை செல்ல முழு உரிமை உள்ளது.
தேவஸ்தானம் பழமை , பாரம்பரியம் என கூறி பெண்களை தடை செய்வித்தல் அர்த்தம் இல்லை
என கூறினார்.
வரவேற்கப்படவேண்டிய விஷயம்...!
பழங்காலத்தில் பெண்கள் மாத விடாய் காலத்தில் வந்தால் ரத்த வாடைக்கு வன விலங்குகள்
ஈர்க்க படலாம் என்பதால் இந்த பழக்கத்தை கொண்டு வந்து இருக்கலாம் . ஆனால் இது தேவை
அற்றது.
சிறுநீர், மலம் போல மாத விடாய் ரத்த போக்கும் ஒரு கழிவு தான் !!!
இதை நன்கு உணர வேண்டும்.
ஆண் (கழிவுகளுடன் ) சபரி மலை செல்லும் போது பெண்கள் (கழிவுகளுடன் ) ஏன் செல்ல
கூடாது ?
கடவுள் படைப்பில் பெண்ணும் ஒரு அங்கம் .
கடவுள் படைப்பில் பெண் இழிவானவள் அல்லவே அல்ல.
ஆம் ...!
ஆணும் பெண்ணும் சரிசமம் ...!!
எனவே சபரி மலைக்கு பெண்கள் செல்லலாம் என தீர்ப்பு வந்தால்
100% அதை வர வேர்க்க வேண்டும்.
இன்றும் இந்த வழக்கு விசாரணை உண்டு.
ஐயப்பனின் தந்தை சிவன் அர்த்தநாதீஸ்வர கோலம் போட்டது எதற்காக ?
சிவனும் சக்தியும் ஒன்றே ...!
ஆம் ...!!
ஆணும் பெண்ணும் ஒன்றே....!!!
மறக்காமல் மனதில் நிறுத்துங்கள் :
ஆணும் பெண்ணும் சரிசமம் ...!! !!
உண்மையுடன் ,
R .சத்திய நாராயணன் ஸ்ரீ விவேக் 19-07-2018