Monday, 30 January 2017

MANAVARGALE...!




      

                     மாணவர்களே ...!
         புதிய கட்சியை துவக்குங்கள் ...!
           
சத்யன்      சத்திய பூ     இதழ் ௦7   பூ 3  3௦-௦1-2௦17

காலம் கூவிகிறது . காலம் அழைக்கின்றது. வந்துவிட்டது நல்ல தருணம். களத்தில் இறங்க இதுவே சமயம்.
ஆம். ஆம். ஆம்.
மாணவர்களே ......
ஜல்லிக்கட்டு போராட்டம் உங்களை ஒன்று குவித்தது. வரலாறு காணாத ஒற்றுமையை காண்பித்தீர்கள். உங்களது சக்தியை நீங்கள் இப்போது உணர்ந்து இருப்பீர்கள். உங்களது உறுதியை உலகிற்கு காட்டி விட்டீர்கள். உங்களது போராட்டம் நூறு சதவிதம் வெற்றியே பெற்றது. வெற்றி பெற்ற தருணத்தில் அரசின்
அடக்குமுறையை சந்தித்து விட்டிர்கள். அரசு தொடர்ந்து நீங்கள் கூடாத வண்ணம் மெரீனாவில் 144தடை உத்திரவை பிறப்பித்து விட்டது. மாணவர்கள் என்றால் எந்த அரசுக்கும் பயம்தான். நீங்கள் மெரீனாவில் கூடி ஒரு புதிய அரசியல் கட்சியை துவங்க இருந்ததாகவும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கூட்டத்தை தவிர்த்து விட்டதாகவும் இன்று செய்தி தாளில் படித்தேன். தடை போட்டால் என்ன ? கவலை படாதீர்கள்.தடை ஒரு நாள் நீங்கும். இல்லைஎன்றால் வேறு இடம் உள்ளது. உங்களது முடிவில் உறுதியாக இருங்கள். காலம் பார்த்து ஒரு அரசியல் கட்சியை துவக்குங்கள். தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சியை உங்களால் தான் நடைமுறை படுத்த முடியும்.
அது மட்டுமல்ல....
உங்களது கட்சிக்கு திட்டம் ...அறிக்கை அவசியம். நீங்கள் உறுதியுடன் போராடினால் இந்த பூமியை சொர்கமாக மற்ற முடியும். முதலில் உங்களது நீண்ட கால திட்டமாக இந்தியாவை ஒரு உண்மையான சோசியலிச குடியரசாக மாற்றுவது என்று தீர்மனாம் செயுங்கள். இதுவே உங்களது இலக்கு.
அடுத்து குறுகிய கால திட்டம் .
இதில் 3 அம்சங்களை முடிவெடுங்கள் . மிக முக்கியம் இது. இதற்காகவே நீங்கள் படிபடியாக போராட வேண்டும்.
1.     கல்வி :   இன்று கல்வி எனபது சாதாரண மக்களுக்கு எட்டமால் உயரே உள்ளது. பணம் ...பணம் மட்டுமே
கல்வி பெற தகுதியாக உள்ளது. இதை மாற்ற வேண்டும். எல்லோருக்கும் உயர் மட்ட கல்வி வரை கல்வி இலவசமாக இருக்கவேண்டும். தேவையெனில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் தேச உடமை ஆக்குங்கள் .
ஆம் !
அனைவர்க்கும் உயர்மட்டம் வரை இலவசக்கல்வி !!
2.     மருத்துவம் : இந்த நாட்டில் உயர் நவீன மருத்துவ வசதி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான். அரசு மருத்துவமனைகள் வெறும் பணம் பறிக்கும், குப்பை தொட்டி போல் நோய் பரப்பும் இடங்களாக உள்ளது. இந்த நிலை மாற நிச்சயம் வேண்டும். மக்களுக்கு இலவச நவீன மருத்துவ வசதி நிச்சயம் அவசியம். ஆம். அனைத்து பெரும் மருத்துவ மனைகளும் தேச உடமை ஆக வேண்டும்.
அனைவர்க்கும் இலவச நவீன மருத்துவ வசதி !!

3.     இட ஒதிக்கீடு : நாடு விடுதலை அடைந்து 7௦ ஆண்டுகள் ஓடி விட்டன. சமுதாயத்தின் ஏற்ற இரக்கம் குறைந்த பாடில்லை. ஏழை ஏழையாகவே உள்ளான். அவன் எந்த ஜாதியை சேர்ந்த போதும் ஏழை மட்டும் ஏழையாகவே உள்ளான். இது நிச்சயம் மாற வேண்டும். எனவே பொருளாதார அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏழைக்கு முதலிடம் தர வேண்டும். இதை அடைவது நமது லட்சியமாக இருக்க வேண்டும். இதற்கு பல சாதிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும். ஆனால் மாணவர் ஒற்றுமை எதையும் வெல்லும். எனவே உடனடியாக நமது நாட்டில் பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு வரவேண்டும்.
ஆம்.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு !!!

மாணவர்களே ...!
நீங்கள் புரட்சிகர மாணவர்கள் ...!
மேலே சொன்ன அடிப்படையில் புதிய கட்சியை துவக்குங்கள் ! ஒற்றுமையுடன் இருங்கள் !! தேவைப்படும் போது போராடுங்கள் !!!
வெற்றி நிச்சயம் !!!!
இந்தியாவை மாற்றுங்கள் !!!!!
தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றுங்கள் !!!!!
உங்களால் முடியும்.
உங்களால் மட்டுமே முடியும்.
வாழ்க மாணவர் சமுதாயம் !
வாழ்க மாணவர் ஒற்றுமை !!
ஜயது பாரதம் !! !!
ஜயது மனுக்குலம் !! !! !!

சத்யன்                       30-01-2017                       


Sunday, 29 January 2017

DESA PATRU...!






                                               தேச பற்று ...!

                                                
  
        சத்யன்        சத்திய பூ        இதழ் 06    பூ 03     30-01-2017

ஆடின காலும் பாடின  வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்கள் .
ஆம். அது உண்மையே.
எழுதின கையும் சும்மா இருக்காது. ஆம். எழுதி எழுதி பழக்கப்பட்ட கை
சும்மா இருக்காது. மீண்டும் மீண்டும் எழுத தூண்டும். என்ன எழுதுவது
என்பது பிரச்சனை அல்ல. எதை முதலில் சொல்வது எதை பின் சொல்வது
என்பது தான் பிரச்சனை.
நான் முதலில் இந்திய பிரச்சனை பற்றி எழுதினேன். ஒரு புதிய இந்தியன்
உருவாக வேண்டும் என கூறினேன். (பார்க்க எனது பழைய வலை பூக்கள்...)
அவனை எப்படி உருவாக்க முடியும் என்பதை சொல்ல வில்லை. அனால்
இன்று எல்லாவற்றிக்கும் முதன்மையானது பற்றி பேச போகிறேன்.
ஆம்.
ஆம்.
முதலில் தேவை "தேச பற்று...!".
தேச பற்று என்றால் என்ன ?
கிரிக்கெட் மேட்சில் இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பதோடு நின்றுவிடும் போக்கு
அல்ல. தேச பற்று என்பது விரிந்த, விசலமான பார்வை. ஒரு ஒருமித்த உணர்வு.
தேச வரைப்படத்தை வைத்து வழிபடுவது அல்ல. அல்லது பாரத மாதாவின் புகைப்படத்தை
வைத்து வழிபடுவது அல்ல.
பின் தேச பற்று என்றால்  என்ன ?
விடை காண்போம் !!
தேசம் என்றால் மக்கள். மக்கள் இல்லமால் தேசம் என்பது இல்லை.
எனவே தேச பற்று என்பது இந்திய மக்களின் மீது பற்று !
பற்று என்றால் என்ன ?
மக்களின் நலனில் அக்கறை கொள்வது. மக்கள் முன்னேற வேண்டும் என நினைப்பது.
மக்களின் நலன்களுக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என யோசிப்பது. இது மட்டுமல்ல.
தேவை என்றால் மக்களின் நலனுக்காக போராடுவது.
ஆம்.
ஆம்.
மக்களின் நலனுக்காக தன்னலமின்றி போராடுவது...
ஆம். இதுவே தேச பற்று. இன்றைய இளைஞர்களிடம் அரிதாகவே காணமுடிகிறது.
இளைஞர்களுக்கு தேச பற்று ஊட்ட ஒரு அமைப்பும் இல்லை. அவர்களுக்கு தலைமை தாங்க
எந்த சக்தியும் இல்லை. இதுவே நாட்டின் மிக பெரிய பிரச்சனை.
எனவே தேச பற்று மிக்க அமைப்புகள் ஒன்று பட வேண்டும். வெறும் குறுங்குழுவாதாம்
பேச கூடாது. மக்களின் நலனில் அக்கறை இருந்தால் மக்களுக்காக ஒன்று பட வேண்டும்.
தியாக உணர்வுடன் தலைமை தங்க வேண்டும்.
எனவே மக்களுக்கு இன்றியமையாத தேவை தேச பற்று.
ஆம். தேச பற்று மட்டுமே நம்மை நாமே காத்துக்கொள்ள உதவும்.
எனவே நாட்டின் பாட்டாளிகள், விவசாயிகள், கூலி விவசாயிகள் மற்றும் மாணவர்கள்
இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் நேசிக்க வேண்டும்.
வேறு வார்த்தையினால் அல்ல.
செயலில் காட்டவேண்டும் !
எனவே தேச பற்றுடன் இருப்போம் !!
மக்கள் நலனே நம் நலன் !!!
இந்தியா வாழ்க !
இந்தியர்கள் வாழ்க !!
ஜயது பாரதம் !
ஜயது மனுக்குலம் !!
 
தேச பற்று ...!

Saturday, 28 January 2017





         

                                         SPECIAL POO (TAMIL BLOG) !


  DEAR READERS.....

                             NAMESTHE.
                             THANK YOU VERY MUCH FOR READING MY
                             TAMIL BLOGS.

                             I KINDLY RREQUEST YOU TO CONTINUE TO DO SO.

                             PLEASE.....
                             READ !
                             SHARE !!
                             COMMENT !!!

                             SP(READ) !!!!

                             SATHYAN                        29-01-2017



             அந்தோ பரிதாபம் ! விவசாயிகளின் நிலை !!
        சத்யன்        சத்திய பூ      பூ 03    இதழ் 05     29-01-2017

நேற்று எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
சாராயம் விற்பவன் சக்கரவர்த்தியாக வாழ்கிறான்.
நமக்கு சாப்பாடு போடும் உழவன் சாகிறான் !
ஆம் ! இது முற்றிலும் உண்மை. சமீப காலமாக இந்தியா முழுவதும்
விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது.
       2015ல் மட்டும் ....
       சிறு விவசாயிகள்    8007
       கூலி விவசாயிகள்   4595
இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். மேலும் புள்ளிவிவரம்
வேண்டுவோர் நேற்றய இந்தியன் எக்ஸ்பிரஸ் (28-01-2017) பார்க்க.
கொடுமை ! கொடுமாயிலுக்கு கொடுமை !!
ஒன்று வறட்சியால் அறுவடை பாதிப்பு. பயிர் கருகி போகிறது. சில இடங்களில்
அதிக மழை ...பயிர்கள் அழுகி போகின்றன. விவசாயிகளுக்கு அரசு வழங்கும்
கடன்கள் முற்றிலும் பெரும் விவசாய்களுக்கே போய்  சேருகிறது. சிறு விவசாயிகள்,
கூலி விவசாயிகள் நிலை சொல்லி மாளாது. எந்த அரசிய கட்சியும் இந்த பிரச்னையை
முக்கியமாக கருதவில்லை.
       உச்ச நீதி மன்றம் இதை அவசர வழக்காக கருதி ஒரு உத்திரவு பிறப்பித்து உள்ளது.
எல்லா மணிலா அரசுகளும், மத்திய அரசும், யூனியன் பிரதேசங்களும் மற்றும் ரேசெர்வே வங்கியும்
இந்த விவசாய பிரச்சனை குறித்தும், அது குறித்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகள்
குறித்தும் 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இரு தினங்களுக்கு முன்
உத்திரவு பிறப்பித்து உள்ளது.
ஆம். வரவேற்கப்படவேண்டிய உத்திரவு.
மேலும் உடனடியாக விவசாயிகளை பாதுகாக்க ஒரு தேசிய கொள்கை திட்டமிடப் வேண்டும்
என வலியுறுத்தி உள்ளது.
       சட்டம் இயற்றும் பாராளுமன்றம் என்ன செய்து கொண்டு இருக்கிறது ? விவசாயிகள்
நாட்டின் உயிர்நாடி. இப்போது அது சாவை நோக்கி துடித்து கொண்டு இருக்கிறது. உச்ச
நீதி மன்றம் சட்டம் இயற்றுபவர்களுக்கு " தேசிய கொள்கை திட்டம்" விவசாயிகளை பாதுகாக்க

அவசியம் என்று வலியுறுத்தி உள்ளது.

      தூங்கி கொண்டுஇருக்கும் பாராளுமன்றம் விழித்து கொள்ளட்டும் !
      உடனே இறந்த விவசாய்களின் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் !
      அறுவடைக்கு தத்தளிக்கும் விவசாயிகளுக்கு நிவாரண/உதவி தொகை வழங்க வேண்டும் !!
      தேசிய விவசாய கொள்கை திட்டம் உடனே நிறைவேற்ற  வேண்டும் !!!
      இல்லையென்றால் ....
      மக்கள் விழித்து கொள்ளட்டும்.
      மாணவர்கள் விழித்து கொள்ளட்டும்.
      நாட்டின் உயிர்நாடி விவசாய்களுக்காக போராடுங்கள் !

Friday, 27 January 2017




      
    

வரவேற்கப்பட வேண்டிய தடை !
   பெப்சி-கோலாவிற்கு தடை !!
சத்யன்     சத்திய பூ      பூ 3  இதழ் 04   28-01-2017

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தை ஒரு உலுக்கு உலுக்கியது . போராட்டத்தில் பல நல்ல அம்சங்கள் நிறைந்து இருந்தன. மாணவர்கள் போராட்டம் கற்று கொடுத்தவை ஏராளம். ஆனால் மிக முக்கியமான ஒரு உப-விளைவு உண்டு.
ஆம் !
அதுதான் அந்நிய குளிர்பானங்கள் மீது வெறுப்பும் அவற்றை பகிஷ்கரிபதும் தான்.
பெப்சியும் கோலாவும் தமிழகத்தில் தமது சுரண்டலை ஏகபோகமாக நடத்தி வருகின்றன. இதை இந்த போராட்டம் எதிர்த்து மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நாம் என்ன குடிக்க வேண்டும் என தீர்மானிப்பது நமது உரிமை. நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதும் நமது உரிமை.
சிற்றுண்டிக்கு நாம் சுண்டல்,பொரி, வடை, பஜ்ஜி, முறுக்கு
கடலை உருண்டை, பக்கோடா ஓமபொடி, மிக்சர் என சாப்பிட்டு வந்தோம். தற்போது குழந்தைகள் ஜன்க் உணவுவகைகளை சாப்பிடும் பழக்கம் வந்துள்ளது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல. பிசா, பர்கர்கள் என அந்நிய சிற்றுண்டியை சாப்பிடும் போக்கு உள்ளது. சிறுவர்களில் பலருக்கு உடல் பருமன் வருவதற்கு (Obesity) வருவதற்கு அந்நிய உணவு வகைகளே karanam endru  பல மருத்தவ ஆய்வுகள் வந்த்விடன. அதே போல் நாம் குடிக்க நமது நாட்டு பானங்கள் உள்ளன. பொவண்டோ, மோர், இளநீர் , பத நீர், பாதம் பால், பழச்சாறு ஆகியவற்றை குடிக்கலாம். குடிக்க வேண்டும். அதே போல் சிற்றுண்டியில் சமோசா, பாணி பூரி,பேல் பூரி, பப்ஸ் ஆகியவற்றை ஏற்று கொள்ளாலாம்.
எனவே மக்கள் நமது கலாச்சாரத்தை விட்டுகொடுக்க கூடாது. இது பற்றிய விழிப்புணர்வை ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு அளித்துள்ளது.
தமிழ் நாடு வணிகர் சங்கம் மற்றும் தமிழ் நாடு வியாபாரிகள் சம்மேளனம் மார்ச் முதல் தேதி முதல் தமிழகம் முழுக்க பெப்சி-கோலா விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
தமிழன் விழித்து கொண்டான் !
இந்த தடை நூறு சதவிதம் வரவேற்க படவேண்டும் !
இந்த தடை சற்று விரிவாக இருக்கவேண்டும் என்பதே என் கருத்து. இந்தியாவில் பிசா மற்றும் பர்கர் விற்பனை தடையும் வரவேண்டும். KFC க்கு இங்கு என்ன வேலை ?
மக்கள் yocika வேண்டும். நாம் நம் கலாச்சாரத்தை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது.
எனவே தேச பற்றுடன் இருப்போம் !
தேச கலாச்சாரத்தை உயர்த்தி பிடிப்போம் !!
பெப்சி-கோலா தடையை மனமுவந்து வரவேற்போம் !!!
ஜெய் ஹிந்த் !
ஜயது பாரதம் !!
ஜயது மனுக்குலம் !!!
28-01-2017
NOTE:     OUR SNACKS AND DRINKS ARE MUCH MORE HEALTHIER, TASTY
                AND MUCH CHEAPER!
                WHY SHOULD WE FOLLOW FOREIGN CULTURE?
                LET US HAIL INDIAN CULTURE!
                LET US HAIL TAMIL CULTURE!!