Wednesday, 25 January 2017
JAI HIND !
ஜெய் ஹிந்த் !
சத்யன் சத்திய பூ பூ 03 இதழ் 02
இன்று குடியரசு தினம்.
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
நாம் அனைவரும் குடியரசு தினத்தை உணர்வு பூர்வமாக
கொண்டாடுகிறோம். இங்கு நான் ஒரு பதிவு செய்ய விரும்புகிறேன். நமது நாடு “ஜனநாயக சோசியலிச குடியரசு” என்று அரசியல் சாசனம் கூறுகிறது. உண்மையில் நமது நாடு ஜனநாயக நாடு தானா என்ற கேள்வி பிறக்கிறது. இல்லை. இல்லவே இல்லை. எங்கும் அங்கும் இங்கும் பணம் தான். பணம் தான் நாயகாமாக உள்ளது. பணக்காரர்கள் மேலும் பணகரர்களாக ஆகவும் ஏழைகள் மேலும் ஏழையாகவும் மாறிக்கொண்டு வருகின்றனர். எனவே “ஜனநாயகம்” என்பது இல்லை.
ஆம். பணநாயகம் தான் !
அடுத்து சோசிலிச குடியரசா என பார்போம். உண்மையான சோசியலிச குடியரசிற்கும் நமது நாட்டிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உக்க வேறுபாடு உள்ளது. நான் இரண்டே இரண்டு அம்சங்கள் பற்றி மட்டும் கறிப்பிட விரும்புகிறேன்.
முதலாவதாக உண்மையான சோசிலிச நாட்டில் அனைத்து மக்களுக்கும் உயர்ந்த நவீன மருத்துவ வசதி என்பது இலவசமாகவே இருக்கும். நமது நாட்டில் அப்படியா உள்ளது ? இல்லை எல்லாம் பணம் ! பணம் !!
அடுத்து கல்வி ! உண்மையான சோசியலிச நாட்டில் கல்வி என்பது அனைத்து மக்களுக்கும் உயர் மட்டம் வரை இலவசமாகவே இருக்கும். ஆனால் நம் நாட்டில் இதுவா நிலைமை ? கல்வி என்பது இங்கு பெரும் வியாபாரமாக உள்ளது.
எனவே நம் மக்களுக்கு இலவச நவீன மருத்தவ வசதியும்,
இலவச கல்வியும் கிடைத்தால் மட்டுமே நமது நாடு உண்மையான “ஜனநாயக சோசிலிச குடியரசு” ஆக மாறும்.
எனவே ....
குடியரசு தினத்தை கொண்டாடுவோம் ! உணர்வுபூர்வமாக !
இதுவே சோசியலிச குடியரசுனால் ....
கூத்தாடி கொண்டாடுவோம் ! உணர்ச்சி பெருக்குடன் !!
ஜெய் ஹிந்த் !
ஜயது பாரதம் !!
ஜயது மனுக்குலம் !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!