என் குப்பைகள் ...! 26-08-2023 சிறுகதை 028/2023
யாருக்கும் எதற்கும் பயன்படாதது குப்பை தானே ...? என் குப்பைகள்
அசாதாரணம் ஆனவை . மிகுந்த அக்கறை-யுடன் , கற்பனை-யுடன்
என்னை முழுமையாக ஈடுபடுத்தி எழுதபட்ட சினிமா திரைக்கதை-வசனம்
கொண்ட சினிமா ஸ்க்ரீப்டுகள் தான் அவை .
சுமார் 20 வருடங்களுக்கு முன் ....
நான் ஊட்டியில் இருந்தேன் . எனக்கு நான் சினிமா எடுக்க வேண்டும் என்
ஆசை பிறந்தது. நான் யார் இடமும் ஸ்கிரிப்ட் எழுத கற்று கொள்ள வில்லை.
எல்லாம் என் சுய முயற்சி மட்டுமே. ஆம் . Self -Taught....! நான் ஸ்கிரிப்ட் எழுத
7 நாட்களுக்கு மேல் எடுத்து கொண்டது இல்லை. ஆனால் நான் கடைசியாக
எழுதிய " உஷ் ...!" மட்டும் 28 நாட்கள் ஆனது. எனது ஸ்க்ரீப்டுகளில் மிக
கவனம் எடுத்து ஒரு சிறந்த ஸ்கிரிப்டை உண்டாக்கினேன் . எனவே நான்
சினிமாவில் கால் பதிக்க " உஷ் "-ஐ தேர்வு செய்தேன் .எப்படியும் சினிமா
டைரக்டர் ஆவது என சென்னை வந்தேன்.
அம்மம்மா ...!
அப்பப்பா ....! !
நான் எடுத்த முயற்சிகளுக்கு அளவே இல்லை. Bad LUCK .
குப்பை 01 : லப் -டப் : நாயகன் ஹோமியோபதி மாணவன் . நாயகி
அல்லோபதி மாணவி. நாயகன் நாயகியை காதலிக்கிறான் .
ஆனால் நாயகி அவன் காதலை மட்டும் அல்ல அவனையே
தூக்கி எறிகிறாள் . மனம் நொந்த நாயகன் நாயகியின்
ஆஸ்பத்ரியில் மாறு வேடம் போட்டு ஒரு நடிகையின்
குழந்தைக்கு( Blue Baby ) இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக
செய்து முடிக்கிறான் . சட்ட விரோதமாக தான் செய்த தவறை
நாயகி வீட்டில் பிரஸ் மீட் ஏற்பாடு செய்து காதலிக்கு மாரல்
பனிஷ்மெண்ட் கொடுக்கிறான் . பின் சரண் அடைகிறான் .
வழக்கு வரும்.....!
வாழ்க்கை தொடரும் ...!!
குப்பை 02 : வித்யா விஜ்யம்
துர்கா , லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி நாரதரின்
கலகத்தால் பூமியில் சாதாரண பெண்ணாக பிறக்குகிறார்கள் .
அவர்களுக்கு அவர்கள் யார் என்று தெரியாது . வாழ்வில் பெரும்
சோதனைகளை சந்தித்து பைத்தியம் பிடித்து மன நல மருத்துவ
மனையில் சந்திக்கின்றன்ர். அவர்களுக்கு அமனுஷியசக்தி
கிடையாது .
. அவர்கள் ஒரு பத்திரிகை நிருபர் ( நாரதர் ) உதவி
பெற்று ஒரு பெண் இயக்கத்தை துவங்குகீறார்கள் .
NO to 33....!
We நீட் 50 ....!! :
என சென்னை வீதியில் இயக்கம் துவங்க படம் முடிவடைகிறது.
குப்பை 03 : த்ரிஷா : ஒரு சாதரண நாயகன் மனநோய் பிடித்து சினிமா
கவர்ச்சி நடிகையை காதல் செய்கிறான் . எவ்வளவோ முயற்சி
எடுக்கிறான் . எல்லாம் படு தோல்வி. சென்னை வந்தும் த்ரிஷாவை
பார்க்க முயற்சி செய்கிறான் . ஆனால் முடியவில்லை . இந்த
நேரத்தில் ஒரு விபத்து நடக்கிறது . அவன் சுயஉணர்வு
இழக்கிறான். அவன் டைரி விபத்து நடந்த த்ரிஷாவின் கார்
பக்கத்தில் கிடைக்கிறது . நாயகனுக்கு மனநோய் சரியாகி
போகிறது . அவன் தன் சொந்த ஊருக்கு ஊட்டி செல்கிறான் .
த்ரிஷா அவன் டைரியை படிக்கிறாள் .
2 நாட்களுக்கு பின்...
நாயகன் வீட்டிற்கு த்ரிஷா வருகிறாள் .
இருவரும் சேருகின்றனர் .
நகைச்சுவை உணர்வு உள்ள படம் .
குப்பை 04 : சுமை : இதுவும் நகைச்சுவை படம் . யாஷ்பால் கமிட்டி
பல வருடங்களுக்கு முன் ஒரு அறிக்கை தந்தது . அதன் படி
5-ம் வகுப்பு வரை மாணவர்கள் புத்தக சுமை சுமக்க வேண்டாம் .
வீட்டு பாடமும் கொடுக்க வேண்டாம் என பரிந்துரை செய்து
உள்ளது . நாயகனின் மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது
முதுகில் எழும்பு முறிவு ஏற்படுகிறது . அவனை சுமை இன்றி
பள்ளிக்கு அனுப்ப நாயகன் எடுக்கும் முயற்சிகள் தான்
சினிமாவின் கதை .
கடைசியில் ஒரு கழுதை வாங்கி பள்ளிக்கு தன் மகனை
அனுப்புவது தான் முடிவு.
இதிலும் நகைச்சுவை உணர்வு அதிகம் .
குப்பை 05 : "உஷ் ...!" : எனது மாஸ்டர் பீஸ் . 28 நாட்கள் எடுத்து கொண்டேன் .
நாயகன் ஒரு போலீஸ் ஆபிசர் . நாயகி ஒரு பத்திரிகை நிருபர்.
பட்ட பகலில் 2 கொலைகள் நடக்கின்றது . போலீஸ் நாயகியை
சந்தேகம் கொள்கின்றனர். நாயகன் அவளுடன் பழகி
உண்மையை வெளி கொண்டு வர முயற்சிக்கிறான் .
நாயகிக்கு கொலைகாரன் யார் என்று தெரிகிறது . அவள்
சாட்சியங்களை அழிக்கிறாள் . கொலைகரனே கொலையை
துப்பு துலக்க வருவது ஸ்கிரிப்டின் உச்சம் .
ஆம் .
நாயகன் தான் கொலையாளி , அது அவனுக்கு தெரியாது .
நாயகி அவனை காதலிக்கிறாள் . அவனை வேறு துறைக்கு
மாற்றி அவனை கல்யாணம் செய்கிறாள் .
அவள் ரசிகர்களுக்கு சொல்வது தான் " உஷ் ...!"
சரி .
5 குப்பைகள் பற்றி எழுதி விட்டேன் .
இத்தனைக்கும் எல்லாம் பதிவு செய்து உள்ளேன் ...!
என்ன பிரயோஜனம் ...?
20 ஆண்டுகளுக்கு மேலாக தூசி படிந்து என் ஆவண
குப்பைகளில் தூங்குகின்றன ....
எனக்கு தூக்கம் வராதது தான் மிச்சம் .....! ! ! ! !
பி. கு. : நான் 5 அல்லது 6 ஆண்டுகளாக சினிமா முயற்சி
. விட்டு விட்டேன் .
ச்சீ ...ச்சீ ....இந்த பழம் புளிக்கும் ...! ! ! ! !
R. சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் சத்யன் சின்ன சேவகன்
26-08-2023