தாயே ...!
சிறுகதை 042/2023 14-10-2023
"ம்மா ....! "
"ம்ம் ...சொல்லு ...."
" அம்மா இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஓடி விட்டன .."
" ஆமாம் "
" ஆனால் இன்றும் வறுமையும் , வேலை இல்லா திண்டாட்டமும்
இருக்கிறதே ...? "
" ஆமாம் "
" மக்களுக்கு விடிவே வராதா ...?"
" தாயே உங்களால் இதை செய்து முடிக்க முடியுமா ...?"
" எதை ...? "
"புரட்சியை ....! "
" மம் ...நான் மட்டும் அல்ல எந்த தெய்வம்-மும் செய்ய முடியாது .."
" ஏன் ...?"
" தெய்வங்கள் நாத்திகவாதிகள் ...மனித விஷ்யங்களில் தலை
இட மாட்டார்கள் ..."
" பின் யார் தான் செய்வார்கள் ...?"
" மக்கள் தான் செய்ய முடியும் ...! "
" தாயே ...இங்கு மக்களுக்காக வேலை செய்பவர்கள் ஒன்று பட்டு
இல்லையே ...?"
" தெரியும் "
" பின் எப்படி செய்ய முடியும் ...?"
" 1917-ல் ருஸ்சியாவிலும் , 1949-ல் சீனாவிலும் எப்படி நடந்த்தது ...?"
" அவை தோல்வியில் முடிந்து விட்டதே ...? யார் காரணம் ...?"
"நீ மார்க்ஸியம் படித்தவன் தானே ? நீயே கண்டுபிடி ..."
" தாயே ...நக்ஸல்பாரி இயக்கம் தவறுதலாக நாடு முழுக்க
இயங்கி ...பின்.....காரணம் இல்லாமல் 40/45 குழுக்களாக பிரிந்து
விட்டனரே ...?"
" ஆம். ஏன் பிரிந்தார்கள் ...?"
" இங்கு உள்ள முதலாளி தேசிய முதலாளியா ...? அல்லது தரகு முதலாளியா
அல்லது பாராளுமன்றத்தை பயன் படுத்தி கொள்ளலாமா என சின்ன
கரணங்களுக்குகாகவே பிரிந்து விட்டனர் ..."
" ஒரு நிமிடம் ...தண்ணீர்..வாட்டர் ,பாணி எல்லாம் ஒன்று தானே ...?
அதே போல் முதலாளி-யும் ஒன்று தான் . அவன் தான் பாட்டாளி
வர்க எதிரி ...."
" தாயே என்ன சொல்கிறீர்கள் ? பாராளுமன்றதில் பங்கு எடுத்தாலும்
அர்பணிப்பு இல்லமால் போகுமா ...?"
" என்ன சொல்கிறீர்கள் ...?"
" உங்களுக்கு தொழிலாளி -விவசாய ஆட்சி வேண்டுமா ...? அல்லது
உங்கள் கட்சி ஆட்சி வேண்டுமா ...?"
"புரியவில்லை "
" ஏன் ருஸ்சியாவிலும் , சீனாவிலும் என்ன நடந்ததது ...? ஏன் பொது
உடமை கட்சி உலகம் முழுக்க பரவ வில்லை ..."
" சொல்லுங்கள் தாயே ...!"
" கட்சியின் சர்வாதிகாரமே காரணம் ..."
" கட்சி இல்லமால் புரட்சி நடக்குமா ...?"
" நான் அப்படி சொல்ல வில்லை . கட்சி 100% ஜனநாயக தன்மை
கொண்டு இருக்க வேண்டும். எல்லா தரப்பு மக்களின் பிரச்சனைகளை
புரிந்து வைத்து இருக்க வேண்டும். "
" தாயே ...என்ன செய்ய சொல்கிறீர்கள் ...?"
" அவர்களை ஒன்று இணைக்க வேண்டும் ..."
" நீ என்ன எழுதினாய் ...?
1. ஏகாதிபத்திய எதிர்ப்பு
2. முதலாளித்துவா எதிர்ப்பு
3. நில உடமை எதிர்ப்பு
4. பாட்டாளி வர்க நல்வாழ்வு
5. உலக சகோதரத்துவம்
இந்த 5 அம்சங்களை ஏற்று கொள்பவர்கள் ஒன்று இணைய வேண்டும் "
" புரட்சியாளர்கள் தனி தனி குழுக்களாக உள்ளனர் . நான் தனிமனிதன்
நான் என்ன செய்ய முடியும் ...?"
"நில்லு ..நீ புரட்சிகாரனாக இருந்தவன் தானே ...?"
" ஆம் .தாயே ...! "
"பிறகு என்ன தயக்கம் ..? எல்லா குழுக்களுக்கும் இந்த 5-அம்ச
திட்டத்தை அனுப்பி வை ..."
" தாயே ...நான் சில குழுக்களுக்கு அனுப்பி வைத்தேன் . யாரும்
கண்டு கொள்ளவில்லை ...! "
" எனக்கு தெரியும் "
" தாயே ...!"
குறுங்க்குழுவாதமும் , வறட்டுவாதமும் அவர்களிடம் என்றுமே உள்ளது .
இதை எதிர்த்து போராடினால் மட்டுமே ஒன்று பட்ட கட்சி உருவாகும் "
" அம்மா ...! எனக்கு நம்பிக்கை போய்விட்டது..."
"உன்னால் முடிந்த வரை போராடு ...பயனை எதிர்பார்க்காதே ...!
வீண் கவலை வேண்டாம் ..."
"செய் அல்லது செத்து மடி என்று காந்தி சொல்லவில்லையா ...? உன்
இறுதி மூச்சு உள்ளவரை உண்மைக்காக போராடு ...! "
"தாயே நான்னா ...?"
" ஆம். உன்னால் முடியும் ...!"
"தாயே ...நான் என்ன செய்ய வேண்டும் ...?"
" லெனின் என்ன சொன்னார் ? உன் மனதிற்கு உண்மை என தோன்றும்
கருத்திற்காக ....உன் மனம் சொல்லும் படி நட என்றார் அல்லவா ..?"
" தாயே ...! நான் உங்களுடன் பேச வேண்டும் என்றால் நான் என்ன
செய்ய வேண்டும்...? "
"ம்ம் ....உனக்கு உள்ளே இருக்கும் உள்ளுணர்வு நான் தான் .
" தாயே ...ஸரஸ்வதியே ....!
போற்றி போற்றி ...!!
மிக்க நன்றி ...!!!
முடிந்தவரை போராடுவேன் ...!
பி. கு . : இதுவும் "சரியலிச " கதை /உரையாடல்
R.சத்திய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
14-10-2023