Wednesday, 8 February 2017





                 வாசகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் !

                   சத்யன்     சத்திய பூ     இதழ் 07    பூ 04      09-02-2017

அன்பான வாசகர்களே .....

                        வணக்கம்.
                        ஒரு கை ஓசை எழுப்பாது.
                        இரு கைகள் சேர்ந்தால் தான் கைதட்டல் ஒலி பிறக்கும்

                        ஆம்.
                        நான் மட்டுமே எழுதிக்கொண்டு போனால் பயனில்லை.
                        உங்களது கருத்து மிக மிக முக்கியம்.
                        உங்கள் கருத்துக்கள், விமரசினங்கள் தான் எனக்கு
                        உந்து சக்தி.

                        நீங்கள் என் கருத்தை ஏற்றெட்டுக்கொள்ள வேண்டும் என்பது
                        என் நிபந்தனை அல்ல.
                        நீங்கள் என் கருத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதே
                        எனக்கு முக்கியம். உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால்
                        அதையும் பதிவு செய்யுங்கள். நாம் அன்பாய் விவாதிப்போம்.

                        நான் தொடர்ந்து எழுதுவதா அல்ல நிறுத்தி கொள்வதா என்பது 
                        உங்கள் கருத்தில் தான் உள்ளது.

                        எனது சத்திய பூ வலைப்பதிவை வாசிக்கும் ஒவ்வரு    தனிநபraயையும்
                        பணிவாக வேண்டுகிறேன். தயவு செய்து உங்களது கருத்துக்களை
                        பதிவு செயுங்கள். எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்குங்கள்.
                        Sathyan13.blogspot.in

                        உங்களது கருத்துக்கள் எதுவாக இருப்பினும் பதிவு செய்யுங்கள்.
                        எனக்கு உந்து சக்தி கொடுங்கள்.
                        என்னை தொடர்ந்து எழுத வையுங்கள்.
                        என் அன்பு வாசகர்களே ...!
                        உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
                        எதுவாக இருப்பினும் சுமுகமாக விவாதிப்போம் !
                        நன்றி. வாழ்த்துக்கள்.
                        சத்யன்        09-02-2017

Tuesday, 7 February 2017




                             சிந்திப்பவன் மட்டுமே மனிதன் !!!

               

சத்திய பூ இதழ் 05 பூ 04ல் உழைப்பா ? சிந்தனையா ?? என கேள்வி எழுப்பி
மிருகத்திடம் இருந்து மனிதன் வேறுபடுவது சிந்தனையால் மட்டுமே என
நேற்று எழுதினேன் . சிந்தனை , அறிவு, பகுத்தறிவு , ஆறாம் அறிவு, மனம்,
புத்தி இவை அனைத்தும் மனிதனுக்கு மட்டுமே உரித்தானவை. இது தான்
மனிதனை மனிதர்களாக  வைக்கும் அடிப்படை, பிரதான, தீர்மானகரமான சக்தி .
இதை மார்க்சியவாதிகள் சுலபமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உழைப்பு தான்
மனிதனை மிருகத்திடம் இருந்து வேறுபடுத்துவது என மீண்டும் மீண்டும் மார்க்ஸ்
ஏங்கல்ஸ் ஆகியோரின் மேற்கோளை காட்டுவார்கள். மார்க்சிசம் தோன்றி 200 ஆண்டுகள்
ஆகிவிட்டன. ரஷ்ய புரட்சி முடிந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. ரஷ்ய , சீன புரட்சிகள்
தோல்வியை சந்தித்து பல பத்தாண்டுகள் முடிந்து விட்டன.
மார்க்ஸ் கூறுவது போல " எதையும் சந்தேகி" என்பது மார்க்க்சிசத்திற்கும் பொருந்தும்.
மாறுதல் என்பதில் மாறுதல் இல்லை.
ஆம். மார்க்க்சிசமும் மாற வேண்டிய சூழ்நிலையில் தான் இன்று உள்ளது.
இதை பற்றி பிறகு பேசுவோம்.

இப்பொழுது மனிதனை மிருகத்திடம் இருந்து வேறுபடுத்துவது சிந்தனை தான்
என்பதற்கு 2 சாட்சிகள் தரப்போகிறேன். என் கருத்துக்கு வலு சேர்ப்பதே இதன்
நோக்கம்.

சாட்சி 01 : மார்க்ஸ் இறந்த பொது அவரது தோழன் ஏங்கல்ஸ் பின்வருமாறு தன்
           இரங்கலை தெரியப்படுத்தினர்.
           மார்க்ஸ் சிந்தனை செய்வதை நிறுத்தி கொண்டார் !
           அப்படியானால் இதற்கு என்ன அர்த்தம் ?
           சிந்தனை செய்வது தான் உயிரோடு இருப்பதற்கு அறிகுறி !
           எனவே உயிர் பிரிவதை ஏங்கல்ஸ் மிக சரியாக ...ஆம் மிக
           சரியாக "சிந்தனையா செய்வதை நிறுத்திக்கொண்டார்" என கூறுவது
           மனிதன் உயிரோடு இருப்பதற்கு அடையாளம் சிந்திப்பதே என்பதை
           நாம் புரிந்து கொள்ளலாம்.
சாட்சி 02 : ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் உழைக்காமல் இருந்து விடலாம்.
           இருக்க முடியும். ஆனால் ஒரு நொடி கூட அவனால் சிந்திக்காமல்
           இருக்க முடியாது. இதுவே உயிரின் விஞ்ஞானம்.
           இதற்கு சான்றாக நவீன மருத்துவத்தில் மிக பலமான சாட்சி அல்லது
           நிரூபணம் உள்ளது.
           ஆம் !
           நான் மூளைச்சாவு பற்றி தான் பேசுகிறேன். மனித மூளை சிந்திப்பதை
           விட்டதும் அவன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள்
           அறிவிக்கின்றனர். "இறந்து" போன நபரின் மற்ற இதயம், கண் , சிறுநீரகம்
           மற்றும் நுரையீரல் ஆகியவை "உயிரோடு" இருப்பதாக கருதி அதை மற்ற
           தேவை படும் நோயளிக்கு "தானம்" தருகின்றனர். இது குறித்து நாம் அடிக்கடி  
           பத்திரிகைகளில் படிக்கிறோம். இதன் பொருள் என்ன ?
           மனிதன் சிந்திப்பதை  நிறுத்தினால்...
           அவன் ஜடம் !
           அவன் பிணம் !!
           உயிர் இல்லை !!! ( பிற உறுப்புக்கள் உயிரோடு இருந்தும் )
           அப்படியானால் மனித உயிர் என்பது என்ன ?
           இதற்கு தீர்மானகரமான பதில்....
           சிந்தனை. சிந்தனை. சிந்தனை.
           ஆம் !
           சிந்தனை மட்டுமே பிரதானம்.
           சிந்திப்பவன் மட்டுமே மனிதன்.
 எனவே சந்தேகத்திற்கு இடமில்லாமல் மிருகத்திடம் இருந்து மனிதனை
 வேறுபடுத்துவது சிந்தனை மட்டுமே !
          



                       சத்யன்     சத்திய பூ    இதழ் 06    பூ 04    08-02-2017

Monday, 6 February 2017





                              உழைப்பா ? சிந்தனையா ?

              சத்யன்      சத்திய பூ     இதழ் 05   பூ 04    07-02-2017

மிக முக்கியமான கேள்வி ?
மனிதனுக்கும் விலங்குக்கும் என்ன வேறுபாடு ?
புன்னகை. ஆடல் . பாடல். என சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இவை அனைத்தும் தவறு. இவை மனிதனாக மனிதன் (குரங்கு)
மரியா பின் ஏற்பட்ட விளைவுகள்.
அடிப்படையில் மனிதனை விலங்கிடம் இருந்து பிரிப்பது எது ?

காலம் காலமாக இந்த கேள்வி உள்ளது.
பதில் காண்பதற்கு முன் மனிதனுக்கும், விலங்கிற்கும் உள்ள ஒற்றுமையை
பார்ப்போம் . 4 விஷயங்கள் மனிதனுக்கும் விலங்கிற்கும் பொதுவாக உள்ளது.
1. உணவு மற்றும் மலம்
ஆம். மனிதனும் சரி, விளங்கும் சரி தாம் உயிர் வாழ உணவை உட்கொள்ள வேண்டும்.
மேலும் அது ஜீரணமாகி பின் மலம் கழிக்க வேண்டும்.
இது தான் முதல் ஒற்றுமை.
2. உறக்கம்
ஆம். மனிதனானாலும் சரி, விலங்கு ஆனாலும் சரி திங்கமும் கட்டாயம்
உறங்க வேண்டும். ஆம். இதுவும் பொதுவே.
3 இனப்பெருக்கம்
மனிதனும் சரி, விலங்கும் சரி தம் இனத்தை பெருக்க உடலுறவு கொள்வதும்
பொதுவே.
4. பயம்
ஆம். விலங்கு எப்போதும் தனது பாதுகாப்பு கருதி ஒருவித பய உணர்வுடனே
வாழ்கிறது. மனிதனும் தனக்கு பாதுகாப்பு தேடி இன்று வரை பய படுகிறான் .
மேலும் இயற்கை சக்தி கண்டு மனிதன் இன்றுவரை ஒருவித பய உணர்ச்சியில்
தான் உள்ளான்.
பயமும் மனிதனுக்கும், விலங்கிற்கும் பொதுவான ஒரு குணமே.

அப்படியானால் மனிதனை விலங்குகள் இடத்திலிருந்து வேறுபடுத்துவது
எது ? எது ?? எது ???
இந்த கேள்விக்கு விடை காண்பது சற்று கடினமான விஷயம்.
ஆனால் உபநிஷிதம் (வேதாந்தம்) தெள்ள தெளிவாக விடையை கூறுகிறது.
அதற்கு முன் மார்க்சிசம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
உழைப்பு ...உழைப்பு மட்டுமே மனிதன் விலங்குகள் இடமிருந்து வேறுபட
அடிப்படை காரணம் என கூறுகிறது.
இது மேலோட்டமாக பார்த்தால் மிகவும் சரி என்றே தோன்றும்.
ஏங்கல்ஸ் இதுகுறித்து விரிவாக புத்தகம் எழுதி உள்ளார். அதில் இருப்பது
ஒண்டு மட்டுமே.
ஆம். உழைப்பு ! உழைப்பு !! உழைப்பு !!!
இங்கு தான் நான் ஒரு கேள்வி எழுப்புகிறேன் .
மனிதனை (குரங்கை) உழைக்க சொல்லி தூண்டியது எது ?
இந்த கேள்வி மிக மிக முக்கியம்.
ஆம். மனிதனை உழைக்க சொல்லி தூண்டியது சிந்தனையே !
திட்டமிட்ட உழைப்பிற்கு சிந்தனை என்பதே முன்நிபந்தனை.
விலங்குகள் கூட தம் உணவிற்காக ஒரு குறிப்பிட்ட அளவு உழைக்கின்றன.
ஆம். வேட்டை ஆடுகின்றன.
ஆனால் மனிதன் மட்டுமே ஒரு சமூக விலங்காக திட்டம் போட்டு
உற்பத்தியில் ஈடுபடுகிறான்.
இதற்கு அடிப்படை தேவை சிந்தனை !
ஆம்.
சிந்தனை ! சிந்தனை !! சிந்தனை !!!
எனவே மனிதனை விலங்கிடம் இருந்து வேறுபடுத்துவது சிந்தனையே !
மார்க்ஸ் உழைப்பை உயர்த்திப்பிடிக்க கூறினார்:
      பிறக்கும் ஒவ்வரு குழந்தையும் 2 கைகளுடன்
      பிறக்கின்றன !
ஆம். உழைப்பதற்காகவே 2 கைகள் .....
ஆனால் நான் சொல்கிறேன் :
     பிறகும் ஒவ்வரு குழந்தையும் 2 கைகள் மற்றும் 
     ஒரு மூளையுடன் பிறக்கின்றன.
ஆம். ஆம். ஆம். உறுதியாக நம்மால் சொல்ல முடியும்.
விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்துவது சிந்தனையே !
மனிதன் சமூக விலங்காக இருந்தாலும் அவனது திட்டமிட்ட உழைப்பிற்கு
காரணம் சிந்தனை மட்டுமே.
     எனவே உங்களது நெஞ்சில் பதிவு செய்யுங்கள்.
     உங்களது மூளையில் பதிவு செய்யுங்கள் .
     மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு
     சிந்தனையே !
     சிந்தனையே !!
     சிந்தனையே !!!

Sunday, 5 February 2017




                                               வேதம்

             சத்யன்       சத்திய பூ    இதழ் 04   பூ 04     06-02-2017

வேதம்  என்றால் என்ன ?
வேதத்தை பற்றி பேசினாலே பிற்போக்கு தனம் என ஒரு கருத்து
நிலவுகிறது. மறுபுறம் வேதம் எல்லாவற்றையும் உள்ளடக்கியது என ஒரு
சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர்களும் வேதத்தை புரிந்துகொண்டவர்கள் அல்ல.
வேதம் என்றால் என்ன ?
அறிவு ....ஞானம் !
அவ்வளவு தான். எனவே அறிவை பற்றி, ஞானத்தை பற்றி பேசினால் அதுவே
வேதம்.
வேதம் மொத்தம் 4.
ரிக் ....யஜுர் ...சாம ...அதர்வண வேதங்கள்.
இவற்றை பற்றி ஆராய்வது இப்போது எனக்கு நோக்கமல்ல.
வேதம் என்றால் அறிவு என்பதை மட்டுமே பதிவு செய்ய விரும்புகிறேன்.
அடுத்து வேதாந்தம் என்றல் என்ன ?
வேதத்தின் அந்தம் அதாவது முடிவு வேதாந்தம் எனப்படும்.
இதுவே சமஸ்க்ரிதத்தில் உபநிஷிதம் என்று அழைக்கப்படுகிறது.
மொத்தம் 108 உபநிஷிதம் உள்ளன. அதில் 18 மிகவும் பிரபலமானவை.
வேதம் படிக்கிறோமோ இல்லையோ வேதாந்தம் அதாவது உபநிஷிதம்
கட்டயாம் ஒவ்வரு இந்துவும் அல்ல ஒவ்வரு மனிதனும் படிக்கச் வேண்டியது
அவசியம். இங்கு ஒரு கருத்தை வலியுறுத்த விருபுகிறேன். ஈசுவசிய உபநிஷிதம்
கூறும் ஒரு வாக்கியத்தை பார்ப்போம்.
       ஈசுவசியம் இதம் சர்வம் !
ஆம் ! ஈஸ்வரன் என்பவன் இங்கும் எங்கும் சர்வ வியாபியாக உள்ளான்.
ஆம். கடவுளை உலகிற்கு வெளியே சொர்க்கத்தில் தேட முடியாது. கடவுள்
இந்த அரிய படைப்பினுள்ளேயே இருக்கிறார்.
      கடவுள் = கடந்து + உள்ளவர்
      கடவுள் = உள்ளே + கடந்தவர்

ஆம். கடவுள் எல்லா இடங்களிலும் கடந்து உள்ளார். அது மட்டுமல்ல மனிதனின் 
மனதில் உள்ளே கடந்தவர்.
      எனவே கடவுளை எங்கும் தேட வேண்டியதில்லை.
       நீங்களும் கடவுள் !
       நானும் கடவுள் !!



குறிப்பு :  வேதாந்தம், புராணம், இதிகாசம் போன்றவற்றை பிறகு பார்க்கலாம்.
          வேதாந்தத்தின் சாரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு
          கடல். நேரம் வரும் பொழுது கடலில் குதிப்போம் ! முத்துக்களை
          எடுப்போம் !!

Saturday, 4 February 2017




                                   மால் கலாச்சாரம் ???

            சத்யன்      சத்திய பூ     இதழ் 03   பூ 04    05-02-2017

உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளில் புதிதாக மால் கலாச்சாரம்
பரவி வருகிறது.
சென்னை உட்பட பல இந்திய நகரங்களில் மால்கள் பல முளைத்து உள்ளன.
இந்த மால்கள் யாருக்காக ??
நிச்சயமாக மக்களுக்கு ஆனது அல்ல. உலகமயமாதல்...தாராளமயமாக்கம்
எல்லாம் சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினருக்கே.
ஆம் !
ஐ.டி ஊழியர்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்க பட்டவை.
ஐ.டி ஊழியர்களை கசக்கி பிழிந்து நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது.
அவர்களின் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது.
ஆம் !
இந்த நிலயையில் நகரகங்ளின் மால்கள் யாருக்காக ?
இந்த சிறுபான்மை ஊழியர்களுக்காகவே !
சினிமா டிக்கெட் ரூபாய் 150 முதல் ரூபாய்  500 வரை !
ஒரு கப் காபி ரூபாய் 150...!
ஒரு பாப்கார்ன் ரூபாய் 150...!
ஐஸ் கிரீம் ரூபாய் 200...!

இது மட்டுமல்ல.
மால்களில் உடைகள் 10,000....20,000 என்ற விலையையில் விற்கப்படுகின்றன.
சாதாரண மக்கள் மால்களுக்கு செல்ல முடியுமா ???
நிச்சயம் இல்லை.
மால்கள் மக்களின் காசை படு வேகமாக, சாமர்த்தியமாக சுரண்டுகின்றன.
இந்த பெரும் மால் கலாச்சாரம் நமது கலாச்சாரம் அல்ல.
அந்நிய கலாச்சாரமே !
இதை அரசும் கட்டுப்படுத்தவில்லை.
எந்த அரசியல் கட்சியும் இதை எதிர்த்து ஒரு சிறுஅறிக்கை கூட வெளியிடவில்லை.
எனவே....
மக்கள் தான் இதற்கு முடிவு கட்டவேண்டும்.
அந்நிய கலாச்சாரத்தை அடியோடு வேரறுக்க வேண்டும்.
எனவே....உரக்க முழங்குவோம் ...
மால் கலாச்சாரம் ஒழிக !
மால் சுரண்டல் ஒழிக !!


மால்...மால் குல்மால் !!!

Friday, 3 February 2017



                                             ஐ.டி ஊழியர்களுக்கு
                               
                          உடனடி தேவை ஒரு தொழிற்சங்கம் !

              சத்யன்    சத்திய பூ      இதழ் 02  பூ 04     04-02-2017

உலகமே கிராமம் !
உலகமயமாக்கம் !!
தாராளமயமாக்கம் !!!
எங்கே செல்கிறது உலகம் ?
பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் உச்சிக்கு சென்று விட்டது.
பெரும் பண முதலை நிறுவனங்கள் ஒரு புதிய யுக்தியை கையில்
எடுத்துள்ளன.
ஆம் !
நல்ல சம்பளம் என ஆசைகாட்டி இளைஞர்களை வேலைக்கு சேர்கின்றன
ஐ.டி நிறுவனங்கள்.
சம்பளம் என்னவோ அதிகம் தான். ஆனால் சுரண்டல் என்பது உச்சத்திற்கு
சென்று விட்டது. அப்பட்டமான சுரண்டல்.
8 மணி நேர வேலை !
8 மணி நேர ஓய்வு !!
8 மாய் நேர உறக்கம் !!!
இதற்காக தங்கள் ரத்தம் சிந்தி போராடினார்கள் தொழிலாளர்கள் !
நூற்றாண்டுக்கு மேல் ஆகி விட்டது. செங்கொடி பிறந்தது.
ஆனால் இப்போது முளைத்திருக்கும் காளான் ஐ.டி இதுவரை
தொழிலாளர்கள் போராடி பெற்ற சலுகைகள் அனைத்தையும் காற்றில்
பறக்கவிட்டுவிட்டன.
கழுதைக்கு முன்னே ஒரு குச்சியில் கேரட் கட்டிவிட்டு கழுதை  மீது
ஏறிக்கொண்டு கழுதையை ஏமாற்றி முன் செல்லும் சுயநலவாதி போல் தான்
ஐ.டி நிறுவன அதிகாரிகளின் சுரண்டல்  வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
கேரட் நல்ல சம்பளம் !
கழுதை ஐ.டி ஊழியர்.
ஆம் !
சம்பளம்  மட்டும் போதுமா ?
8 மணி நேர வேலை என்பது என்ன ஆச்சு ?
தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை ஊழியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.
சில சமயம் இடைவிடாமல் 24 மணி நேரம் கூட உழைக்க சொல்கின்றது இந்த
கடைந்து எடுத்த அந்நிய நிறுவனங்கள். வாரத்தில் 2 நாள் விடுமுறை என்பதும்
காற்றில் பறக்க விட படுகிறது.
தொழிலாளி என்ன மனுஷனா ? இல்லை மாடா ??
ஓய்வு இன்றி கண் விழித்து உழைத்து தங்களது உடல்நிலையை கெடுத்து
கொண்டு இருகுகின்றனர் ஐ.டி தொழிலாளர்கள்.
இப்படி வேலைப்பார்த்தால் 10 அல்லது 15 வருடத்தில் நிச்சயமாக அவர்கள்
பல்வேறு நோய்க்கு ஆளாக நேரிடும்.
பணம் மட்டும் வாழ்க்கையல்ல.!
உடல் ஆரோக்கியம் அதைவிட மேலானது !!
இதை யாரும் மறுக்க முடியாது .
ஆனால் இவர்களுக்கு என்று  எந்த தொழிற்சங்கமமும் இல்லை.
இந்த பேச்சு எடுத்தாலே வேலை நீக்கம் தான்.
இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்.
தொழிற்சங்கம் அவசியம் தேவை. ஐ.டி ஊழியர்களுக்கு தெரியாதது
இல்லை.
பணத்திற்காக உயிரை விட முடியாது.
100 ஆண்டுகளுக்கு முன் போராடி வாங்கிய சலுகைகள், உரிமைகள்
ஆகியவற்றை நாம் இழக்க முடியாது .இழக்க கூடாது .
எனவே ...
ஐ.டி தொழிலார்களே ....!
உங்கள் ரத்தம் உறிஞ்ச படுகிறது.
உங்கள் ஆரோக்கியம் செத்துக்கொண்டு இருக்கிறது..
உடனே தொழிற்சங்கம் ஆரம்பிக்க முயலுங்கள்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !
போராடுங்கள் !!
போராட்டம் இன்றி வாழ்கை இல்லை.
உடனே ...
தொழிற்சங்கம் கட்டுங்கள் !
ஐ.டி தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் !!
வெற்றி நமதே !!!
உழைப்போம் 8 மணி நேரம் !
ஓய்வு எடுப்போம் 8 மணி நேரம் !!
உறங்குவோம் 8 மணிநேரம் !!!
இது நமது உரிமை.
இது நமது உரிமை.
இதில் கை வைக்க அனுமதிக்க கூடாது.
எனவே ...
உலக ஐ.டி தொழிலாளர்களே ஒன்று படுங்கள் !
WORKERS OF ALL COUNTRIES UNITE !!!

 

Thaliapu Illatha Kavithai...!





  

             தலைப்பு இல்லாத கவிதை
        சத்யன்  சத்திய பூ  இதழ் ௦1 பூ ௦4
                             03-02-2017
கவிதை என்றால் தலைப்பு இருக்கும் .
தலைப்பே இல்லாமல் ஒரு கவிதையா ?
அது என்ன அது ?
வாழ்கை ஒரு கவிதை.
காலம் ஒரு கவிதை.
காதல் ஒரு கவிதை.
அன்பு ஒரு கவிதை.
காதலுக்கு தலைப்பு இருகிறதா ?
அன்புக்கு தலைப்பு இருகிறதா ??

கவிதையில் கருத்துகள் இருக்கும்.
கவிதையில் உருவகம் இருக்கும்.
கவிதையில் நளினம் இருக்கும்.
கவிதையில் எழுத்துகள் இருக்கும்.
கவிதைக்கு தலைப்பும் இருக்கும் !
ஆனால் ....
நான்  எழுதும்  இந்த கவிதைக்கு
தலைப்பு இல்லை! இல்லவே இல்லை !!
ஏன் ???
இது கவிதையல்ல. வாழ்வியல்!
வாழ்வின் தேடல்.
மானிட சரித்திரத்தின் அனுபவம்.
தத்துவ ஞானங்களின் சாரம்.
தர்கங்களின் முடிவு.
புரட்சியாளர்களின் சாரம்.
ஆன்மிகவாதிகளின் அடித்தளம்.
ஆம் !
அன்பு மட்டுமே நிதர்சனமான உண்மை.
அன்பே வாழ்வின் சாரம்.
அன்பே வாழ்வின் லட்சியம்.
அன்பே வாழ்வின் எல்லை.
அன்பு ! அன்பு !!
அதன் மறுபெயர் என்ன ?
கடவுள் !!!
அவன் எங்கே இருக்கிறான் ?
இந்த பிரபஞ்சதிலா ?
சூரிய ஒளியிலா ? இரவின் வெளிச்சத்திலா ??
பனிதுளியிலா ? புல் வெளியிலா ??
தாயின் மார்பக முலையிலா ???
மனிதன் கட்டிய கோயிலில்லா ???
எங்கே ? எங்கே ??
அன்பு எங்கே ? கடவுள் எங்கே ??

அன்பும் கடவுளும் சமம்.
அன்பும் கடவுளும் வாழ்வு.
அன்பும் கடவுளும் கவிதை.
ஆனால் ....
அன்பும் கடவுளும் கவிதையெனில் ...
தலைப்பு என்ன ?
தலைப்பை எழுதபோவது யார் ?
கார்ல் மார்க்ஸ்சோ-மகாத்மா காந்தியோ
எழுத முடியாது.
அரவிந்தரோ-பெரியாரோ
எழுத முடியாது.
ஆத்திகனோ-நாத்திகனோ
எழுத முடியாது.
கடவுளை வெளியே தேடாதே !
தலைப்பை அகராதியில் தேடாதே !!
அகராதியில் வார்த்தைகள் இருக்கும்.
கவித்துவம் இருக்காது.

வாழ்க்கை கவிதையின் தலைப்பை
ஒரேஒரு இடத்தில தான் தேட வேண்டும்.
தேடும் இடத்திலேயே எழுத வேண்டும் !
அது......
உன் மனம் !  உன் அகம் !!
அங்கே தலைப்பு எழுது .
நீயே உன் கைப்பட எழுது.
அகபுரட்சி இன்றி யுக புரட்சி இல்லை.
இது மட்டுமே நிரந்தர உண்மை.
வாய்மையே வெல்லும் !
சத்யம் ஏவ ஜெயதே !!

Monday, 30 January 2017

MANAVARGALE...!




      

                     மாணவர்களே ...!
         புதிய கட்சியை துவக்குங்கள் ...!
           
சத்யன்      சத்திய பூ     இதழ் ௦7   பூ 3  3௦-௦1-2௦17

காலம் கூவிகிறது . காலம் அழைக்கின்றது. வந்துவிட்டது நல்ல தருணம். களத்தில் இறங்க இதுவே சமயம்.
ஆம். ஆம். ஆம்.
மாணவர்களே ......
ஜல்லிக்கட்டு போராட்டம் உங்களை ஒன்று குவித்தது. வரலாறு காணாத ஒற்றுமையை காண்பித்தீர்கள். உங்களது சக்தியை நீங்கள் இப்போது உணர்ந்து இருப்பீர்கள். உங்களது உறுதியை உலகிற்கு காட்டி விட்டீர்கள். உங்களது போராட்டம் நூறு சதவிதம் வெற்றியே பெற்றது. வெற்றி பெற்ற தருணத்தில் அரசின்
அடக்குமுறையை சந்தித்து விட்டிர்கள். அரசு தொடர்ந்து நீங்கள் கூடாத வண்ணம் மெரீனாவில் 144தடை உத்திரவை பிறப்பித்து விட்டது. மாணவர்கள் என்றால் எந்த அரசுக்கும் பயம்தான். நீங்கள் மெரீனாவில் கூடி ஒரு புதிய அரசியல் கட்சியை துவங்க இருந்ததாகவும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கூட்டத்தை தவிர்த்து விட்டதாகவும் இன்று செய்தி தாளில் படித்தேன். தடை போட்டால் என்ன ? கவலை படாதீர்கள்.தடை ஒரு நாள் நீங்கும். இல்லைஎன்றால் வேறு இடம் உள்ளது. உங்களது முடிவில் உறுதியாக இருங்கள். காலம் பார்த்து ஒரு அரசியல் கட்சியை துவக்குங்கள். தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சியை உங்களால் தான் நடைமுறை படுத்த முடியும்.
அது மட்டுமல்ல....
உங்களது கட்சிக்கு திட்டம் ...அறிக்கை அவசியம். நீங்கள் உறுதியுடன் போராடினால் இந்த பூமியை சொர்கமாக மற்ற முடியும். முதலில் உங்களது நீண்ட கால திட்டமாக இந்தியாவை ஒரு உண்மையான சோசியலிச குடியரசாக மாற்றுவது என்று தீர்மனாம் செயுங்கள். இதுவே உங்களது இலக்கு.
அடுத்து குறுகிய கால திட்டம் .
இதில் 3 அம்சங்களை முடிவெடுங்கள் . மிக முக்கியம் இது. இதற்காகவே நீங்கள் படிபடியாக போராட வேண்டும்.
1.     கல்வி :   இன்று கல்வி எனபது சாதாரண மக்களுக்கு எட்டமால் உயரே உள்ளது. பணம் ...பணம் மட்டுமே
கல்வி பெற தகுதியாக உள்ளது. இதை மாற்ற வேண்டும். எல்லோருக்கும் உயர் மட்ட கல்வி வரை கல்வி இலவசமாக இருக்கவேண்டும். தேவையெனில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் தேச உடமை ஆக்குங்கள் .
ஆம் !
அனைவர்க்கும் உயர்மட்டம் வரை இலவசக்கல்வி !!
2.     மருத்துவம் : இந்த நாட்டில் உயர் நவீன மருத்துவ வசதி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான். அரசு மருத்துவமனைகள் வெறும் பணம் பறிக்கும், குப்பை தொட்டி போல் நோய் பரப்பும் இடங்களாக உள்ளது. இந்த நிலை மாற நிச்சயம் வேண்டும். மக்களுக்கு இலவச நவீன மருத்துவ வசதி நிச்சயம் அவசியம். ஆம். அனைத்து பெரும் மருத்துவ மனைகளும் தேச உடமை ஆக வேண்டும்.
அனைவர்க்கும் இலவச நவீன மருத்துவ வசதி !!

3.     இட ஒதிக்கீடு : நாடு விடுதலை அடைந்து 7௦ ஆண்டுகள் ஓடி விட்டன. சமுதாயத்தின் ஏற்ற இரக்கம் குறைந்த பாடில்லை. ஏழை ஏழையாகவே உள்ளான். அவன் எந்த ஜாதியை சேர்ந்த போதும் ஏழை மட்டும் ஏழையாகவே உள்ளான். இது நிச்சயம் மாற வேண்டும். எனவே பொருளாதார அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏழைக்கு முதலிடம் தர வேண்டும். இதை அடைவது நமது லட்சியமாக இருக்க வேண்டும். இதற்கு பல சாதிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும். ஆனால் மாணவர் ஒற்றுமை எதையும் வெல்லும். எனவே உடனடியாக நமது நாட்டில் பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு வரவேண்டும்.
ஆம்.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு !!!

மாணவர்களே ...!
நீங்கள் புரட்சிகர மாணவர்கள் ...!
மேலே சொன்ன அடிப்படையில் புதிய கட்சியை துவக்குங்கள் ! ஒற்றுமையுடன் இருங்கள் !! தேவைப்படும் போது போராடுங்கள் !!!
வெற்றி நிச்சயம் !!!!
இந்தியாவை மாற்றுங்கள் !!!!!
தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றுங்கள் !!!!!
உங்களால் முடியும்.
உங்களால் மட்டுமே முடியும்.
வாழ்க மாணவர் சமுதாயம் !
வாழ்க மாணவர் ஒற்றுமை !!
ஜயது பாரதம் !! !!
ஜயது மனுக்குலம் !! !! !!

சத்யன்                       30-01-2017