Tuesday, 7 February 2017




                             சிந்திப்பவன் மட்டுமே மனிதன் !!!

               

சத்திய பூ இதழ் 05 பூ 04ல் உழைப்பா ? சிந்தனையா ?? என கேள்வி எழுப்பி
மிருகத்திடம் இருந்து மனிதன் வேறுபடுவது சிந்தனையால் மட்டுமே என
நேற்று எழுதினேன் . சிந்தனை , அறிவு, பகுத்தறிவு , ஆறாம் அறிவு, மனம்,
புத்தி இவை அனைத்தும் மனிதனுக்கு மட்டுமே உரித்தானவை. இது தான்
மனிதனை மனிதர்களாக  வைக்கும் அடிப்படை, பிரதான, தீர்மானகரமான சக்தி .
இதை மார்க்சியவாதிகள் சுலபமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உழைப்பு தான்
மனிதனை மிருகத்திடம் இருந்து வேறுபடுத்துவது என மீண்டும் மீண்டும் மார்க்ஸ்
ஏங்கல்ஸ் ஆகியோரின் மேற்கோளை காட்டுவார்கள். மார்க்சிசம் தோன்றி 200 ஆண்டுகள்
ஆகிவிட்டன. ரஷ்ய புரட்சி முடிந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. ரஷ்ய , சீன புரட்சிகள்
தோல்வியை சந்தித்து பல பத்தாண்டுகள் முடிந்து விட்டன.
மார்க்ஸ் கூறுவது போல " எதையும் சந்தேகி" என்பது மார்க்க்சிசத்திற்கும் பொருந்தும்.
மாறுதல் என்பதில் மாறுதல் இல்லை.
ஆம். மார்க்க்சிசமும் மாற வேண்டிய சூழ்நிலையில் தான் இன்று உள்ளது.
இதை பற்றி பிறகு பேசுவோம்.

இப்பொழுது மனிதனை மிருகத்திடம் இருந்து வேறுபடுத்துவது சிந்தனை தான்
என்பதற்கு 2 சாட்சிகள் தரப்போகிறேன். என் கருத்துக்கு வலு சேர்ப்பதே இதன்
நோக்கம்.

சாட்சி 01 : மார்க்ஸ் இறந்த பொது அவரது தோழன் ஏங்கல்ஸ் பின்வருமாறு தன்
           இரங்கலை தெரியப்படுத்தினர்.
           மார்க்ஸ் சிந்தனை செய்வதை நிறுத்தி கொண்டார் !
           அப்படியானால் இதற்கு என்ன அர்த்தம் ?
           சிந்தனை செய்வது தான் உயிரோடு இருப்பதற்கு அறிகுறி !
           எனவே உயிர் பிரிவதை ஏங்கல்ஸ் மிக சரியாக ...ஆம் மிக
           சரியாக "சிந்தனையா செய்வதை நிறுத்திக்கொண்டார்" என கூறுவது
           மனிதன் உயிரோடு இருப்பதற்கு அடையாளம் சிந்திப்பதே என்பதை
           நாம் புரிந்து கொள்ளலாம்.
சாட்சி 02 : ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் உழைக்காமல் இருந்து விடலாம்.
           இருக்க முடியும். ஆனால் ஒரு நொடி கூட அவனால் சிந்திக்காமல்
           இருக்க முடியாது. இதுவே உயிரின் விஞ்ஞானம்.
           இதற்கு சான்றாக நவீன மருத்துவத்தில் மிக பலமான சாட்சி அல்லது
           நிரூபணம் உள்ளது.
           ஆம் !
           நான் மூளைச்சாவு பற்றி தான் பேசுகிறேன். மனித மூளை சிந்திப்பதை
           விட்டதும் அவன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள்
           அறிவிக்கின்றனர். "இறந்து" போன நபரின் மற்ற இதயம், கண் , சிறுநீரகம்
           மற்றும் நுரையீரல் ஆகியவை "உயிரோடு" இருப்பதாக கருதி அதை மற்ற
           தேவை படும் நோயளிக்கு "தானம்" தருகின்றனர். இது குறித்து நாம் அடிக்கடி  
           பத்திரிகைகளில் படிக்கிறோம். இதன் பொருள் என்ன ?
           மனிதன் சிந்திப்பதை  நிறுத்தினால்...
           அவன் ஜடம் !
           அவன் பிணம் !!
           உயிர் இல்லை !!! ( பிற உறுப்புக்கள் உயிரோடு இருந்தும் )
           அப்படியானால் மனித உயிர் என்பது என்ன ?
           இதற்கு தீர்மானகரமான பதில்....
           சிந்தனை. சிந்தனை. சிந்தனை.
           ஆம் !
           சிந்தனை மட்டுமே பிரதானம்.
           சிந்திப்பவன் மட்டுமே மனிதன்.
 எனவே சந்தேகத்திற்கு இடமில்லாமல் மிருகத்திடம் இருந்து மனிதனை
 வேறுபடுத்துவது சிந்தனை மட்டுமே !
          



                       சத்யன்     சத்திய பூ    இதழ் 06    பூ 04    08-02-2017

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!