தலைப்பு இல்லாத கவிதை
சத்யன் சத்திய பூ
இதழ் ௦1 பூ ௦4
03-02-2017
கவிதை
என்றால் தலைப்பு இருக்கும் .
தலைப்பே
இல்லாமல் ஒரு கவிதையா ?
அது என்ன
அது ?
வாழ்கை
ஒரு கவிதை.
காலம்
ஒரு கவிதை.
காதல்
ஒரு கவிதை.
அன்பு
ஒரு கவிதை.
காதலுக்கு
தலைப்பு இருகிறதா ?
அன்புக்கு
தலைப்பு இருகிறதா ??
கவிதையில்
கருத்துகள் இருக்கும்.
கவிதையில்
உருவகம் இருக்கும்.
கவிதையில்
நளினம் இருக்கும்.
கவிதையில்
எழுத்துகள் இருக்கும்.
கவிதைக்கு
தலைப்பும் இருக்கும் !
ஆனால்
....
நான் எழுதும் இந்த
கவிதைக்கு
தலைப்பு
இல்லை! இல்லவே இல்லை !!
ஏன் ???
இது
கவிதையல்ல. வாழ்வியல்!
வாழ்வின்
தேடல்.
மானிட
சரித்திரத்தின் அனுபவம்.
தத்துவ
ஞானங்களின் சாரம்.
தர்கங்களின்
முடிவு.
புரட்சியாளர்களின்
சாரம்.
ஆன்மிகவாதிகளின்
அடித்தளம்.
ஆம் !
அன்பு
மட்டுமே நிதர்சனமான உண்மை.
அன்பே
வாழ்வின் சாரம்.
அன்பே
வாழ்வின் லட்சியம்.
அன்பே
வாழ்வின் எல்லை.
அன்பு !
அன்பு !!
அதன்
மறுபெயர் என்ன ?
கடவுள்
!!!
அவன்
எங்கே இருக்கிறான் ?
இந்த
பிரபஞ்சதிலா ?
சூரிய ஒளியிலா ? இரவின் வெளிச்சத்திலா ??
பனிதுளியிலா
? புல் வெளியிலா ??
தாயின்
மார்பக முலையிலா ???
மனிதன்
கட்டிய கோயிலில்லா ???
எங்கே ?
எங்கே ??
அன்பு
எங்கே ? கடவுள் எங்கே ??
அன்பும்
கடவுளும் சமம்.
அன்பும்
கடவுளும் வாழ்வு.
அன்பும்
கடவுளும் கவிதை.
ஆனால்
....
அன்பும்
கடவுளும் கவிதையெனில் ...
தலைப்பு
என்ன ?
தலைப்பை
எழுதபோவது யார் ?
கார்ல்
மார்க்ஸ்சோ-மகாத்மா காந்தியோ
எழுத
முடியாது.
அரவிந்தரோ-பெரியாரோ
எழுத
முடியாது.
ஆத்திகனோ-நாத்திகனோ
எழுத
முடியாது.
கடவுளை
வெளியே தேடாதே !
தலைப்பை
அகராதியில் தேடாதே !!
அகராதியில்
வார்த்தைகள் இருக்கும்.
கவித்துவம்
இருக்காது.
வாழ்க்கை
கவிதையின் தலைப்பை
ஒரேஒரு
இடத்தில தான் தேட வேண்டும்.
தேடும்
இடத்திலேயே எழுத வேண்டும் !
அது......
உன் மனம்
! உன் அகம் !!
அங்கே
தலைப்பு எழுது .
நீயே உன்
கைப்பட எழுது.
அகபுரட்சி
இன்றி யுக புரட்சி இல்லை.
இது
மட்டுமே நிரந்தர உண்மை.
வாய்மையே
வெல்லும் !
சத்யம்
ஏவ ஜெயதே !!

No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!