Friday, 28 July 2023

 


சிறு கதை 020/2023 செவ்ஞ்சலி                                          29-07-2023


உதகை அரசினர் கலை கல்லூரி . நான் பி .எஸ் .சி 2-ம் ஆண்டு படித்து 

கொண்டு இருந்தேன் . காந்தி ஜயந்தியை முன்னிட்டு பேச்சு போட்டி 

நடந்த்தது . அதில் நான் காந்தி மீது சில விமர்சனகளை வைத்தேன் . 

பேசி விட்டு செல்லும் போது " நான் ஸ்ரீநிவாசன் . எகனாமிக்ஸ் புரொஃபசர்.

என்னை என் டிபார்ட்மெண்டில் வந்து பார் ..." என சொன்னார்.

அதுவே சீனியுடன் ஆன முதல் சந்திப்பு .

பின்னர் ....

நாங்கள் நண்பர்களாக ஆனோம் . அவரும் சிகெரேட் குடிப்பார் . நானும் 

குடிப்பேன் . இருவர் பிராண்ட்-ம்  . ஒன்றே . " கோல்ட் ஃபிளேக் ". தினமும் 

கல்லூரி முடிந்து திரும்பும் போது செரிங்க் க்ராஸில் உள்ள விலாசமான

டீ கடையில் உட்கார்ந்து பேசுவோம் . ஒரு ஆங்கில பேராசிரியர்  மற்றும் 

ஒரு சரித்திர பேராசிரியர் வருவார்கள் . அடுத்து ஒரு அரசு ஊழியரும்

வருவார். 

                                                           டீ ...
                                                 
                                                           தம் ...

                                                           பேச்சு ...
                                                    
                                                           விவாதம் ...

முக்கியமாக எங்கள் விவாத்தில்  இந்திய அரசியல் , பொருளாதாரம் 

குறிப்பாக சமூக பிரச்சனைகளை பேசுவோம் . என் நண்பன் ஒருவனும் 

இதில் கலந்து கொள்வான் . அவனை தவிர மற்றவர்கள் எல்லாம் " தோழர்கள் "

ஆனோம் .

ஆம் ...!

புரட்சிகர இயக்கம் ...!!

சீனி ஊட்டி நகர செயலாளர் . அவர் நிறைய படிப்பார் . எழுதுவார் .

" மன ஓசை " -யில் " சுரேஷ் " என்ற பேரில் எழுதுவார் . விடுமுறை நாட்களை 

அவரது ரூமில் தான் காலம் கழிப்போம் . இல்லை என்றால் தாவர இயல் 

பூங்கா செல்வோம் . அவசர நிலை இருந்த போது அவர் போலீஸ்

 விசாரணைக்கு  ஆள்  ஆனவர் . 

நாங்கள் சேர்ந்தே இருப்போம் . உறவு வலு அடைந்து மிக நெருக்கம் ஆனோம் .

இந்த சமயத்தில் அவர் சென்னைக்கு மாற்ற பட்டார் . பிரிவு சோகத்தை 

தந்தது . அவரது செயலாளர் பொறுப்பு எனக்கு வந்தது .அது ஒரு காலம் .

வார வாரம் ஒரு சிறிய ஹாலில் " சமூக அறிவியல் மேடை " என்று ஒரு 

அமைப்பை ஏற்படுத்தி விவாதங்கள் செய்வோம் . ஊட்டியில் இருந்த 

முற்போக்கு மற்றும் அறிவுஜீவிகள் பங்கு பெறுவர் .

சீனி ...ஒரு நல்ல சினிமா ரசிகர். அவருக்கு " மிர்னல்சென் " படங்கள் 

ரொம்ப பிடிக்கும் . நாங்கள் சேர்ந்து பல தமிழ் படங்கள் பார்த்து உள்ளோம் .

வருடங்கள் ஓடின.....

சென்னையில் நான் இருந்தேன் . அப்போது சீனிக்கு திருமணம் . அங்கு 

பல தோழர்களை சந்திக்கும் வாய்பு கிடைத்தது . சீனி அவர் பக்கதிலேயே 

இருக்க சொன்னார். ஆம். நான் தான் மாப்பிள்ளை தோழன் . 

பிறகு ...

என்ன என்னவோ மாற்றங்கள் .

பலர் போல் நானும் அமைப்பிலிருந்து வெளியேறினேன் . சீனுவும் 

வெளியே வாந்தர். 

நான் ஊட்டி வந்து விட்டேன். வாழ்க்கை ஓடியது . பல வருடங்கள் .

பின்பு ஒரு நாள் என் ஊட்டி தோழர் என் முகவரி கிடைத்து ஒரு கடிதம் 

அனுப்பினார் .

ஐயோ...!    ஐயோ...! !

அம்மா ...! அப்பா ...!!

என்னால் தாங்க முடியவில்லை ...!

என் சீனி இருதய   கோளாறு காரணமாக 2 வருடங்களுக்கு முன்பே 

இறந்து விட்டார் என எழுதி இருந்தார்.

என்னால் தாங்க முடியவில்லை .

நான் அழுக ஆரம்பித்தேன் . கொலுங்க கொலுங்க அழுதேன் .

விக்கி விக்கி அழுதேன் . சுமார் 10 நாட்கள் நான் அழுதே தீர்த்தேன் .

மிக பெரிய இழப்பு ...!

தோழர் சீனுவுக்கு வீர வணக்கம் ...!!


பி. கு   :   பொருளாதார பேராசிரியர் சீனிவாசனுக்கு இந்த கதை 

                 அர்ப்பணம் .

R . சத்ய நாராயணன்      சத்யன்     ஸ்ரீ விவேக்    சின்ன சேவகன்     

                                            29-07-2023




சிறுகதை 019/2023    குற்றப்பத்திரிகை 

                                29-07-2023 

பெறுநர் :      பாரத பிரதமர் 


                                                                      பொருள்    :   குற்றப்பத்திரிகை 

                                                                      நகல்           :   இந்திய குடியரசு தலைவர் 

                                                                                           :   உச்ச நீதி மன்ற தலைமை 
                                                        
                                                                                               நீதிபதி 

                            குற்றங்கள்        :

                             நீங்கள் கீழ் கண்ட குற்றங்களை செய்து இருப்பது  உறுதி 
          
                             படுத்த பட்டுள்ளது. நீங்கள் உங்கள் மன்னிபையோ அல்லது 

                             அல்லது உண்மை பதிலையோ 2024-ம் தேர்தலுக்கு முன் 
   
                             விளக்கம் அளிக்கும்படி கேட்டு கொள்ளபடுகீர்கள் .

1.   நீங்கள் கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை .

2.   ரூபாய் 15 லட்சம் என்ன ஆனது ...?

3.   பண மதிப்பு இழப்பு மூலம் மக்களுக்கு தொந்தரவு கொடுத்தீர்கள்.

4.   கடுங்குளிரிலும் போராடிய விவசாயிகளை சம்ப்ரயாதம் பொருட்டு 

     கூட நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை .

5.   விவசாயிகளை புறக்கனித்தீர்கள் . மனிதாபமானம் இல்லை .

6.   பெரும் கார்ப்பரேட் நிறுவனர்கள் கோடி கணக்கில் வங்கி இடமிருந்து 

      கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் தேச துரோகம் செய்தவர்கள் மீது 

      எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

7.   இந்தியா சமய சார்பற்ற நாடு . அதாவது அரசு கொள்கைகளில் 

      செயல்களில் மத சார்பு கூடாது . இந்துகளுக்கு பிடிக்காத வண்ணம் 

      நீங்கள் இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்றிவிடுவீர்களோ என ஒரு 

      அச்சத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள் . மதம் தனிப்பட்ட விஷயம் . உரிமை .

8.   எதிர் கட்சி மற்றும் உங்களுக்கு பிடிக்காதவர் மீது சோதனை ,

      அமுலாக்க பிரிவு , வருமான வரி என்று எதையாவது சொல்லி 

      ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டீர்கள் .

9.   உங்கள் கட்சியில் 33 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது . அதை 

     கண்டும் காணததும் போல் இருக்கீர்கள் .

10.  பாலியில் வன்கொடுமை ( மல்யுத்த வீராங்கனைகள் ) செய்த 

       எம் .பி பூஷனை இது வரை கைது செய்யாமல் உள்ளீர்கள் .

11.  மணிப்பூர் கலவரத்தின் போது அங்கு சென்று அமைதி ஏற்படுத்தாமல் 

      கர்நாடக தேர்தல் பரப்புரைக்கு வந்தீர்கள் . மணிப்பூரில் பெண்கள் மீது 

      கொடூர தாக்குதல் செய்து உள்ளது இன்று உலகிற்கே வெட்டவெளிச்சம் .

      இன்னும் மௌனம் சாதிப்பது ஏன் ...?

12. பண வீக்கம் , விலைவாசி  போன்ற பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் 

      மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தராமால் உள்ளீர்கள் .

13. மேற்கண்ட குற்றங்களுக்கு உடனே பதில் சொல்லுங்கள். அல்லது 

      விளக்கம் அளியுங்கள்.

14.  2024-குள் உங்கள் விளக்கம் அளியுங்கள் . தவறும் பட்சத்தில் 

      மக்கள் முடிவு எடுப்பார்கள்.

                            இது மக்களின் எச்சரிக்கை ...!

                            பதவி விலகுங்கள் ...!!

                           ஆம் ...!!!

                                                                                                  இப்படிக்கு ,

                                                                                        இந்திய மக்கள் மாமன்றம் .

                                                                                                  29-07-2023 

R. சத்ய நாராயணன்     சத்யன்     ஸ்ரீ விவேக்     சின்ன சேவகன்   22-07-2023

                              

Friday, 21 July 2023

      காதல் ஒரு தொடர்கதை ...!      

  22-07-2023           சிறுகதை 018/2023


                                                        அத்யாயம் - 00


ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

எனக்கு காதலிக்க ஆசை ...!

நான் காதலியை தேடி கொண்டு இருக்கிறேன் .


                  நான் முதல் முதலாக அவளை பார்த்தேன் . உருண்டை முகம் .

நெற்றியில் வண்ண பொட்டு . இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பு. 4 

வருடங்களாக அவளை காதலித்தேன். அது அவளுக்கும் தெரியும் . பின் 

அவளிடம் பேச ஆசை பட்டேன் . ஒருமுறை பேசியும் உள்ளேன். " ஐ லவ் யு "

என்று நான் சொல்ல அவள் " இப்போது இது தேவையா ..? " என சொன்னாள் .

நான் வெளியூர் சென்று திரும்பிய உடன் ஒரு கல்யாண பத்திரிகை வந்து 

இருந்தது . பிரித்து படித்தேன் .

                 ஆம்., அவளுக்கு தான் கல்யாணம் ...!                     ( தொடரும் )


                                                  அத்யாயம் - 01 


ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

சில வருடங்கள்  அவள் தோழியை காதலித்தேன். அழகு . அதிபுத்திசாலி .

வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தாள் . எனக்கோ வேலை இல்லை .

அவள் தான் சம்பாதிக்கிறாள் என்று ...கல்யாணம் செய்துகொள்ள 

அவளிடம் சொல்ல போனேன் . நெஞ்சில் தைரியம் இருந்த்து . அவள் 

" ஹலோ " என்று குஷியாக வரவேற்றாள் . நன்கு பேசினாள் . எனக்கு 

கடைசியில் " நான் உங்களை கல்யாணம் செய்ய விரும்புகிறேன் "

என்று சொல்ல முடியவில்லை . நான் "பை " சொல்லிவிட்டு கிளம்பினேன் .

என் தைரியம் அவ்வளவு தான் ...!                                          ( தொடரும் )


                                                     அத்யாயம் -02 

ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

நான் வெளியூரில் இருந்தேன் . என் பக்கத்து வீட்டில் அவள் இருந்தாள் ..

தினமும் காலையில் 6.40க்கு கோலம் போடுவாள் . நான் வாசலில் 

உட்கார்ந்து "சைட் " அடிப்பேன் . துணை " தம் "...! அவள் ஒரு நல்ல 

பாடகி . அவள் வீட்டு ஜன்னல் என் வீட்டு ஜன்னல் எதிரே இருந்தது .

அவள் என்னை பார்க்கிறாள் என்று எனக்கு நன்கு தெரியும் . சினிமா 

பாடல்களை சத்தமாக பாடுவாள் . குரல் அருமை. ஒரு முறை "

 தனிமையில் இனிமை காண முடியுமா ? " என்று பாடினாள் . என் 

நெஞ்சம் முழுக்க அவள் தான் . எனக்கு இட மாற்றம் . என்னால் 

அவளுடன் பேச முடியவில்லை. ஒரு நீண்ட ....காதல் கடிதம் எழுதி 

என் ஆசையை தெரிவித்து பதிலுக்காக காத்து இருந்தேன் .

                             பதில் இல்லை ...!                                                (தொடரும் )


                                         அத்யாயாம் -03

ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

அவளை பார்த்தேன் . பார்த்த உடனே "கிளீன் பௌலட் ".வித விதமாக 

சுடிதார் போட்டு கல்லூரி செல்வாள் .சில சமயம் சேலையும் கட்டுவாள் .

உடைக்கு "மேச்சாக " வண்ண வண்ண பொட்டு வைப்பாள் . நான் 

தினமும் காலை மாலை ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து அவளை ரசிப்பேன் .

நாட்கள் செல்ல செல்ல அவள் மீது காதல் ஆழமானது . ஒரு நாள் 

மன உறுதியுடன் நேரே அவளை பார்க்க கல்லூரி சென்றேன். என் 

திருமண விருப்பத்தை சொன்னேன் . அம்மம்மா ...!

அவள் " உனக்கு என்ன தகுதி இருக்கு ...? " என்று ஒருமையில் பேசினாள் .

" யு ஸ்டுப்பிட் ...கெட் லாஸ்ட்...! " என்று என்னை அவமானம் செய்தாள் .

அங்கு இருந்து கிளம்பினேன்.                                     ( தொடரும் )


                                                        அத்யாயம் - 04 

ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

அவளை சந்தித்தேன் , சற்று குள்ளம் . ஆனால் வட்ட முக பேரழகி .

தினமும் விபூதி , குங்குமம் வைப்பாள் . பக்கத்து தெருவில் தான் 

குடி இருந்தாள் . அவளது முகவரிக்கு நான் பரிசு பொருள் , மற்றும் 

காதல் கடிதம் அடிக்கடி அனுப்புவேன். நான் அவளிடம் நேரில் வந்து 

பேச போவதாக தேதி நிச்சயம் செய்து அனுப்பினேன். மறு நாள் எனக்கு 

ஒரு "கால் " வந்தது . அவளுடைய மாமனார் பேசுவதாக சொல்லி ...

அவளுக்கு ஒரு மாதம் முன் திருமணம் ஆகிவிட்டதாக என்னிடம் 

கூறினார் ...!                                                       ( தொடரும் )


                                                           அத்யாயம் - 05 

ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

தினமும் பஸ் ஸ்டாபில் ஒரு முகமதிய பெண்ணை பார்ப்பேன் . அவள் 

" பர்தா " போடுவாள் . ஆனால் முகத்தை மறைக்க மாட்டாள் . நான் 

அவள் அழகில் சொக்கி போனேன் . மாலை அவளை ஒரு டீ கடையில் 

இருந்து அவளை பார்ப்பேன் . அவளுக்கு கல்லூரி முகவரியில் நான்

பரிசு பொருள் மற்றும் கடிதம் உருக்கமாக எழுதுவேன் . அடிக்கடி 

கடிதம் போடுவேன் . ஒரு வருடம் கழிந்து அவள் கல்லூரியில் இருந்து 

ஒரு "கால் " வந்தது . என்னை வர சொல்லி சொன்னார்கள் . நானும் 

போனேன் . கடைசியில் கல்லூரி நிர்வாகம் " அப்படி ஒரு பெண்ணே 

இல்லை ...தவறான முகவரி ..." என்று சொல்லிவிட்டார்கள் . ஒரு 

வருடமாக நான் அனுப்பியவற்றை திருப்பி கொடுத்தார்கள் .

ஐயோ ....! இது என்ன கொடுமை ...?                                  ( தொடரும் )


                                                      அத்யாயம் - 06 


ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

அவளை பார்த்தேன் . மாநிறம் . சிங்கப்பல் . முட்டை வடிவ முகம். 

ஸ்டிக்கர் பொட்டு . அவள் பிரதோஷம் பிரதோஷம் அன்று கோவிலுக்கு 

வருவாள் . நானும் போவேன் . அவள் வீடு பக்கத்தில் தான் இருந்தது .

ஒரு நாள் அவள் வீட்டிற்கு போகும் போது நான் வருகிறேனா என 

திரும்பி பார்த்தாள் .கால் இடறி விட்டது . நான் திரும்பி விட்டேன் .

அவள் ஒரு டாக்டர். அவள் கிளினிக் அடிக்கடி செல்வேன் . சின்ன 

பிரச்சனையாக இருந்தாலும் நான் செல்வேன் . சிரித்த முகத்துடன் 

சிகிச்சை அளிப்பாள் .

நான் அவளிடம் என் காதலை சொல்ல வில்லை ...!        ( தொடரும்  )


                                                  அத்யாயம் -07 


                                        மீண்டும் அத்யாயம் -00


ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....


                           ஆம் ...!
                                                                     

                          மன வலி ...!!


R.சத்ய நாராயணன்     சத்யன்     ஸ்ரீ விவேக்      சின்ன சேவகன் 

                                                  22-07-2023


                             குறுஞ்செய்தி  :   பாரத பிரதமர் மீதான குற்ற பத்திரிகை 

                             எழுதி முடிக்க பட்டது . அது வரும் 29-07-2023 சனி அன்று 

                             தாக்கல் செய்யப்படும். 
 
 






                           தமிழச்சி ...!  

    சிறுகதை 017/2023            22-07-2023

வீட்டு கதவு தட்டபட்டதும் சுந்தரத்தின்  அம்மா கதவை  திறந்தார் .

வெளியே 2 பேர். பார்த்தாலே போலீஸ் என்று தெரியும் . வீட்டுக்கு 

வந்த அவர்கள் அவர்களாகவே நாற்காலியில் உட்கார்ந்தார்கள் .


   " சுந்தரம் இருக்கானா...? "

   " இல்லை ...நீங்கள் யார் ...? " - சுந்தரத்தின் அம்மா .

   " நாங்க ....க்யு பிராஞ்சு "

   " அப்படினா ...? "

   " சி .ஐ . டி ....போலீஸ் ..."

   " நீங்க வர காரணம் ....ஏன் சுந்தரத்தை   பற்றி கேட்கிறீர்கள் ...? "

   " ஆமாம் ...சுந்தரம் இப்போது எங்கே ...? "

   " தெரியாது ..."

   "  என்னம்மா ...பையனை கேட்டால் தெரியாது என்று சொல்றீங்க ...?"

   "  சத்தியமா எனக்கு தெரியாது ...! "

  "   அவன் லெட்டர் போட்டானா ...?"

   "   இல்லை ..."

  "   ஏன் அவனை கேட்கிறீர்கள் ...? என்ன அவசியம் ...?"

 "   அம்மா ...அவன் எந்த ஊரில் இருக்கான் என்றுக்கூட தெரியாதா ..?"

  "  ஆமாம் ...அவன் என்னிடம் ஒன்றும் சொல்ல மாட்டான் ...எப்போதாவது 

      வருவான் .  ஒரு 2 நாட்கள் இருந்து விட்டு போய் விடுவான் .."

  " ஏன் அம்மா அவனை ஒன்றும் கேட்க மாட்டீர்களா ...? "

  "  எதுக்காக அவனை கேட்கிறீர்கள் ...?"

"    அவன் ஒரு நக்சலைட் ...!"

  " அப்படினா என்ன ...?"

"   அவன் ஒரு தீவரவாதி ...?"

"   ஐயோ ...என்ன இப்படி வாய் கூசாமல் பொய் சொல்கிறீர்கள்...?"

 " ஆமாம். அம்மா . ..."

"   என்ன அவன் வெடிக்குண்டு , துப்பாக்கி ஏதாவது வைச்சு இருக்கான் 

     என்றா சொல்கிறீர்கள் ....? "

  " வந்து ..வந்து ..."

  " நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் . என் மகன் தவறான பாதைக்கு 

     போக மாட்டான் ...."

   " அம்மா புரிஞ்சுக்கங்க ....அவனை பார்த்தால் சுட்டு தள்ளி விட 

      கூட எங்களுக்கு அதிகாரம் இருக்கு ...!"

   " நீங்க பாட்டு எதையாவது சொல்லாதீங்க ...! அவன் ஏழைகளுக்கு 

      உதவ தான் கழகத்தில்  ...இருக்கான் ...! என் மகன் தப்பா போனா 

      நானே அவனை கொன்று விடுவேன் ...!"

  " நீங்களும் அமைப்பில் இருக்கீங்களா ...?"

  " இல்லை . என் மகனை பற்றி நீங்க சொல்றதை நான் கேட்க மாட்டேன் 

     நீங்க போங்க ...!"

  " என்ன அம்மா இப்படி பேசறீங்க ..?"

  " என் மகனுக்கு ஏதாவது ஆச்சுனா நான் உங்களை சும்மா விட 

      மாட்டேன் ...! "

  "  இல்லை ...நீங்க அவன்கிட்டே சொல்லி அவனை அமைப்பில் இருந்து 

      வெளியே வர சொல்லுங்க..."

  "  அமைப்பு ஒண்ணும் சட்ட விரோத அமைப்பு இல்லையே ..?"

   " நாங்க சொல்றதை சொல்லிட்டும் ...ஜாக்ரதை  ...! "

   " என்ன மிரட்டி....பாக்குறீங்களா ...?"

   "  நாங்க வரோம் ...! "

  "   ஆமாம் ....அவனை என்னணு சொன்னிங்க...?"

  "   அவன் ஒரு நக்சலைட் ...!!! "


       பி. கு .  :   சுந்தரம் "ஏதோ " ஒரு ஊரில் " ஏதோ ஒரு " பெயரில் 

                          அமைப்பு தோழர்களுக்கு அரசியல் , சமூக & பொருளாதார 

                      வகுப்பு எடுத்து கொண்டு இருக்கான் ...இல்லை ...

                      இருக்கிறார் ...!  

                                

                          


 R. சத்ய நாராயணன்     சத்யன்     ஸ்ரீ விவேக்       சின்ன சேவகன் 


                                                     22-07-2023                    

        

Friday, 14 July 2023

 


சிறுகதை 016/2023       திரு ' குரல் '...!

                         

                    எல்லோருக்கும் வாழ்த்து .  


   01.      அன்பே உயிர். அன்பாக இரு.

               அன்பு தான் சிறந்தது .

   02.       அறநெறி வாழ்வு மிக சிறப்பு .

               அது தான் உயர்வு .

   03.       காதல் காதல் காதல் செய் .

               அது சிறந்த உணர்வு .

    04.      பெண் உரிமைக்கு பாடு படு.

               பெண் = ஆண் = சரிசமம் .

     05.      சுரண்டலை கட்டாயம் எதிர்த்து நில்.

                சமதர்மதிற்கு அதுவே வழி ...!

     06.      தைரியம் நிச்சயம் நமக்கு தேவை.

                வெல்ல இதுவே மார்கம் .

     07.      மனதில் அவசியம் உறுதி வேண்டும்.

                மனமே மிக அழகு ...!

     08.      சத்யம் என்றும் எப்போதும் போற்று .

                வாய்மை தான் வெல்லும் .

      09.     உரிமைக்கு  தவறாது அவசியம் போராடு .

                உரிமைக்குரல் நமது பிறப்புரிமை .

      10.     சமதர்ம சமூகம் அமைக்க வேண்டும் .

               ஆம் . அதுவே புரட்சி ....!


R.சத்ய நாராயணன்  ஸ்ரீ விவேக்  சத்யன் 

                             சின்ன சேவகன் 

                                 15-07-2023 


குறுஞ்செய்தி :   பாரத பிரதமர் மீதான 

                                    குற்றப்பத்திரிகை  தயார் .

                                    எழுதி முடிக்கபட்ட அது 

                                              29-07-2023 (சனி ) அன்று தாக்கல் 

                                              செய்ய படும் .

                                                                    



சிறுகதை 015/2023    இருசொல் கீதா                                      15-07-2023


அத்யாயம் 01    :   01.   அன்பே உயிர் .

            "                02.    :    02.      சோர்வு அடையாதே ...!

           "                 03 .   :    03.      துணிந்து நில் ...!

            "                04.    :    04.      பெண்ணுரிமை வெல்க ...!

            "                05     :    05       நீதிக்கு போராடு ...!

            "                06     :    06       தானம் சிறப்பு .

           "                 07     :    07       நெறியுடன் வாழ் .

           "                 08     :    08.      நல்லகம் நன்று .
 
           "                 09     :    09.      புறம் கவனி .

           "                 10     :    10.      அனுபவமே பாடம் .

           "                 11     :    11.      மது அருந்தாதே ...!

           "                 12     :    12.     சத்யம் மதி .

           "                 13.    :    13.     ஜாதிகள் இல்லை .
  
          "                  14.     :   14.     தேசப்பற்று அவசியம் .

          "                  15      :   15.     சுரண்டலை தடு ...!

         "                    16.    :   16.     நட்பை நேசி ...!

         "                    17.    :   17.     தொழமையுடன்    இரு ...!!

         "         18.   :   18.      புரட்சி செய் ....!!!


                              இத்துடன் இருசொல் புதிய கீதை முற்றுப்பெறுகிறது .
                         
                              அத்தியா வரிசை படி மிக மிக காலதாமதமாக விரிவுரை 

                              எழுத படும் .

                                                                        சுபம் .

R. சத்ய நாராயணன்     ஸ்ரீ விவேக்       சத்யன்       சின்ன சேவகன் 

                                                        15-07-2023 


Friday, 7 July 2023


         014/2023     வாணி..வா... நீ...!


                                                    ஓரங்க நாடகம் 


                           பாத்திரங்கள்    :    சரஸ்வதி , நாரதர் 
                                        
                                           இடம்      :    சத்யலோகம் 


                                                             காட்சி 

( சர்ஸ்வதி வீணையை மீட்டி இசையில் லயித்து இருந்தாள் . அப்போது 

  நாரதர் வருகிறார் ,)

நாரதர்       :   தேவி ...! தேவி...!!

சரஸ்           :   ம் ம் ....

நாரதர்       :   வரலாமா தேவி ?

சரஸ்          :   அதுதான் வந்து விட்டீர்களே ...? வாருங்கள் ...!

நாரதர்      :     கலை மகளே ...! தங்களுக்கு தெரியாது என்று ஒன்றும் 

                           இல்லை ....வந்து ...வந்து ...

சரஸ்          :      இன்று இங்கு வந்த காரணம் என்ன ? ஏதாவது புது கலகமா ?

நாரதர்      :     தேவி ...!   நான் கலகக்காரன் என்று பேர் பெற்று விட்டேன் ...

சரஸ்          :     ...ம் ....மேலே சொல்லுங்கள் .

நாரதர்      :     நான் கலகம் செய்பவன் தான் .  ஆனால் என் கலகம் 

                           நன்மையை தான் கொண்டு வரும் ...!

சரஸ்          :     சரி ...இருக்கட்டும் ...!! இப்போது என்ன கலகம் ...?

நாரதர்      :     தேவி ...! அப்படி சொல்லாதீர்கள் ...நீங்கள் ஸத்யலோகாகத்தின் 

                           தாய் ....தாயே ...! எனக்கு ஒரு மன வருத்தம் உள்ளது.

சரஸ்          :      ம்ம்.....சொல்லுங்கள் ...!

நாரதர்      :      தேவி ...! நான் பாரத தேச சஞ்சாரம் முடித்து விட்டு வருகிறேன் ...

சரஸ்          :     ம் ....

நாரதர்      :   தேவி ...! நான் பெண்களை உன்னிப்பாக கவனித்தேன் . பாவம் ..!

                         பெண்ணை பிறக்க மாதவம் செய்ய வேண்டும் என உங்கள் 

                          பக்தன் சொல்லி விட்டு போய் விட்டான் ...

சரஸ்          :   ஆம் ...! அதற்கு என்ன ...?

நாரதர்      :    பெண் உரிமை பற்றி பலரும் பேசுகிறார்கள் .ஆனால் விடுதலை 

                          இன்றி மிகவும் கஷ்ட பட்டு வருகிறார்கள் .

சரஸ்          :    மாற்றம் மிக மெதுவாகவே நடக்கும் ...

நாரதர்     :     ஒப்பு கொள்கிறேன் தேவி . ஆனாலும் பெண் படும் பாடு 

                          ரொம்ப அதிகம் தாயே ...!

சரஸ்         :     ம் ...

நாரதர்     :     (பெரு மூச்சு விட்டு )......தாயே ...! வேலைக்கு போகும் பெண்கள் 

                           ஆனாலும் சரி ....இல்லத்து அரசியாக இருந்தாலும் அவள் தான் 

                           மிகவும் கஷ்ட படுகிறாள் . அனைத்து பாரம் தாங்கி வேதனையில் 

                           வாடுகிறாள் ...

சரஸ்          :     நீங்கள் உண்மையை தான் சொல்வீர்கள் ...எனக்கு நன்கு அது 

                           தெரியும் . அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ...?

நாரதர்       :     மிக்க நன்றி தேவி ..! நான் சொல்வதை ஏற்று கொள்வீர்களா ..?

சரஸ்           :    நீங்கள் தவறு செய்ய மாட்டீர்கள் ....நான் என்ன செய்ய

                           வேண்டும் ...?

நாரதர்       :    அது மிக மிக கடினம் .

சரஸ்           :    இருக்கட்டும் . விவரம் சொல்லுங்கள் .

நாரதர்       :    நீங்கள் ஒரு சாதாரண பெண்ணாக பூமியில் பிறக்க 

                           வேண்டும் .

சரஸ்           :     பிறந்து என்ன செய்ய வேண்டும் ...?

நாரதர்       :     பிறந்து சமூக தொண்டு செய்ய வேண்டும் .

சரஸ்           :     சமூக தொண்டா ...?

நாரதர்       :     ஆம் . என் திட்டதை சொல்கிறேன் 

                            1. சாதாரண பெண்ணாக பிறக்க வேண்டும்.
   
                            2. உங்களுக்கு நீங்கள் தான் சரஸ்வதி என்று தெரிய கூடாது .

                            3. உங்களுக்கு தெய்வ சக்தி இருக்காது . மேலும் எந்த விதமான 

                                அமனுஷிய சக்தி இருக்காது .

                            கவனமாக கேளுங்கள் தேவி ,,,!

                           1. பெண் உரிமைக்காக போராட வேண்டும் 

                          2.  பெண் பொருளாதார நிலமை உயர பாடுபட வேண்டும் .
     
                           3.  விருப்பம் போல் அவள் கல்யாணம் செய்ய உரிமை 

                                வேண்டும் .

                           4. வீட்டு சுமையில் ஆண்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் 

                          5.  கிராமங்களிலும் , நகரங்களிலும் உள்ள பெண்கள் சமூக ,

                              அரசியல் , பொருளாதார விழிப்புணர்ச்சி பெற வேண்டும் .

                          6.  பெண்களை பாலியல் வன்முறை செய்பவர் கடும் 

                               தண்டனை அடைய வேண்டும் .

                          7.  பெண் சரிசம உரிமை பெற வேண்டும்.
 
                          8.  கிராம , நகர , மாநில , தேசிய , உலக அளவில் ஒன்று 

                               சேர்த்து ..ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் .

                         9.   இது பெண்ணின் புரட்சி ...!!! !!! !!!

                        தாயே ...! அவ்வளவு தான் ...உங்களால் முடியுமா ..?

சரஸ்       :      ஏன் முடியாது ...?

நாரதர்    :     உங்களுக்கு என்று எந்த சக்தியும் இருக்காது . உறுதியாக 

                         சொல்கிறீர்களா ...?

சரஸ்        :     இந்த 21ம்  நூற்றாண்டில் சாதாரண பெண்ணாக பிறந்து 

                         நான் பெண் உரிமைக்காக பாடு பட வேண்டும். அவ்வளவு 

                        தானே மகரிஷி ...?

நாரதர்     :    எள் என்றால் எண்ணை ஆகி விடுகெறீர்கள் ....

சரஸ்         :    உங்கள் கலகம் இன்று முடிந்த்தா ...?

நாரதர்     :     நீங்கள் தயாரா ...?

சரஸ்         :     ஆம் ...! சத்யம் ...!!

நாரதர்     :     வாழ்துக்கள் தேவி ...! நான் வருகிறேன் ...!!

                    ( நாரதர் போகிறார் . சரஸ்வதி வீணை , ஜப மாலை மற்றும் 

                      சுவடிகளை தன்னிடமிருந்து எடுத்து விடுகிறார் )

                                      திரை மூடுகிறது 

பின் குரல் :     கலை மகள் பிறந்து விட்டாள் . அவளுக்கு பெற்றோர் 

                            வைத்த பெயர் வித்யா ...!

                           புரட்சியை முன்னிட்டு வளர்கிறாள் ...!!

                           " வித்யா விஜயம் " ஆரம்பித்து விட்டது ...!!!


                                                  சுபம் .

                            கதை -வசனம்      :      சத்யன் 

                            ஒலி,ஒளி அமைப்பு :  ஸ்ரீ விவேக் 

                            பின் குரல்                   :   சின்ன சேவகன் 

                           இயக்கம்                     :    R. சத்ய நாராயணன் \


                                                        08-07-2023 

R. சத்ய நாராயணன்      ஸ்ரீ விவேக்     சத்யன்     சின்ன சேவகன் 



 


சிறுகதை 013/2023       ரூ' பாய் '....!         08-07-2023


உதகை அரசினர் கலை கல்லூரி .ரம்யாமான கேம்பஸ் . பல பல 

மரங்கள் . கல்லோரியை சுற்றியும் . மலை மேல் இருந்தது . கேம்பஸ் டீ 

ரூம் எப்போதும் பிஸியாக இருக்கும் . டீ சாப்பிடுகிறாலோ இல்யையோ 

' தம் ' அடிக்காமல் இருக்க மாட்டார்கள் . கிளாஸ்சிற்கு கட் அடித்து விட்டு 

அங்கே வந்து விடுவார்கள் . 

"தம் " + டீ ...!

சாய்ராம் மற்றும் முகமது தினமும் பல மணி நேரம் அங்கே தான் இருபார்கள் ,

கூடவே ஒரு நண்பர் கூட்டம் . ஆனால் சாயி மற்றும் முகமது ஆழமான 

நட்பை கொண்டு இருந்தார்கள் . அதற்கு காரணம் 6-ம் வகுப்பில் இருந்தே 

ஒரே கிளாஸில் படித்தவரகள். பி. யு . சி -லும் ஒரே ஒரே கல்லூரி ...ஒரே 

கிளாஸ். சாய் நன்று படிப்பான் . முகமதுவும் நன்கு படிப்பான் . இருவருக்கும் 

போட்டி தான் . ஆனால் பொறாமை , காழ்ப்பூணர்ச்சி இருவருக்கும் இல்லை.

பி. யு .சி முடிந்த்ததும் அதே கல்லூரியில் இருவரும் வேதியல் பட்ட படிப்பில் 

சேர்ந்தனர். டிகிரி படிக்கும் போது இருவருக்கும் நட்பு ஆழமானது . சாய்

 முகமது வீட்டிற்கும் ....முகமது சாய் விட்டீற்கும் செல்வது வாடிக்கை ஆனது .

சுமார் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தனார். 

இருவரும் 'தம்' அடிப்பார்கள் . இருவருமே 'செயின் சோமக்கர்ஸ் '. அப்புறம் 

திட்டம் போட்டு வேஷ்டி கட்டி கொண்டு வருவார்கள் . எப்போதும் சேர்ந்தே 

இருப்பார்கள்.  சாய் கோவில் போகும் பழக்கம் கிடையது . முகமதும் 

பள்ளி வாசல் போக மாட்டான் .

கல்லூரி நாடகத்தில் சாய் நடித்த போது முகமது அவனுக்கு ஒரு விலை 

உயர்ந்த ஷர்டை வாங்கி கொடுத்தான் . கல்லூரி நண்பர்கள் எல்லோரும் 

அவனை " பாய் " என்றே கூப்பிடுவார்கள் . சாய் மட்டும் " தோஸ்த் " என்றே 

கூபிடுவான் .

1981 

மறக்க முடியாத வருடம் . பட்ட படிப்பின் இறுதி ஆண்டு. 3- ம் ஆண்டு 

மாணவர்கள் சோகத்தில் இருந்தனர் . பிரிவு உபச்சார விழாவில்   சாய் 

முகமது கட்டி கொண்டு அழுதார்கள் .முகமதுவின் அப்பாவிற்கு வேலை 

கேரளாவிற்கு மாற்ற பட்டது .

முகமது பரீட்சை முடிந்ததும் கேரளா செல்ல ...சாய் அவனை பஸ் ஸ்டண்ட்

 வரை சென்று வழி அனுப்பி வைத்தான் . இருவர் கண்களிலும் கண்ணீர் .

தாங்க முடியாத பிரிவு ....!

2021

சாய் அதிர்ஷ்ட வசமாக முகமதுவின் போனே நம்பர் பெற்றான் . உலகில் 

சாதித்தது போல் உணர்ந்தான் . உடனே 'கால் ' செய்தான் . இருவரும் 

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசினார்கள் .

முகமது    :   இப்போது 'தம்' அடிப்பதில்லை . விட்டு விட்டான் . துபாயில் 

ஒரு நல்ல வேலயில் இருந்தான் . தனது 2 மகன்களுக்கும் திருமணம் 

முடித்து விட்டான் . பள்ளி வாசல் போகும் வழக்கம் வந்தது . வெள்ளி 

கிழமை 5 முறை தொழுக செல்கிறான் .இன்னும் ஒரு வருடத்தில் ரிடயர் 

ஆகி கேரளா வந்து விடுவான் . தான் சந்தோஷமாக இருப்பதாக சொன்னான் .

சாய்    :   'தம் ' + டீ -யை விடவில்லை . திருமணமும் ஆகவில்லை . வேலைக்கு 

செல்லும் இடங்களில் எல்லாம் காலை 2 முறையும் மதியம் 2 முறையும் 

தம் + டீ குடிக்க போய் விடுவதால் பணி நீக்கம் நியதி ஆனது . அவன்

 சிறப்பாகவே வேலை செய்தாலும் மேல் அதிகரிகளுக்கு அவனது 

பழக்கம் பிடிக்காமால் பணி நீக்கம் செய்தனர் . சாய்-யின் அண்ணன் தான் 

வாடகை மற்றும் மருந்துகள் செலவை பார்த்து கொள்கிறார். கை செலவுக்கு 

பணம் போத வில்லை என்பதை உள்ளது உள்ள படி தெரிவித்தான் . முகமது 

சாய் வங்கி விவரங்களை வாங்கி கொண்டான் . சரி ...ஏதோ ரூபாய் ...

500 அல்லது 1000 அனுப்பி வைப்பான் என எதிர்பார்தான் .

அன்று மாலையே ...

                                  தங்கள் கணக்கில் ரூ பாய் 50,000
 
                                 வரவு வைக்க பட்டு உள்ளது - வங்கி தகவல் .

                                 " ஐயோ ...அம்மா ...! " என சாய் குலுங்கி குலுங்கி 

                                 அழுதான் .

                                 " தோஸ்த் " கோடான கோடி நன்றிகள் என்று 

                                அவனுக்கு தகவல் அனுப்பி விட்டு அழுகையை 

                                 தொடர்ந்தான் .


                                 முகமதுக்கு சாய் உயிர் ...!
 
                                 சாய்க்கு முகமது உயிர் ...!!

                                 உயிருக்கு உயிரான நட்பு ...!!!


பி. கு :      இந்த ரூ"பாய்" கதை இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு 

                   அர்ப்பணம் ...!

R. சத்ய நாராயணன்       சத்யன்      ஸ்ரீ விவேக்      சின்ன சேவகன் 

                                               08-07-2023