Friday, 28 July 2023

 


சிறு கதை 020/2023 செவ்ஞ்சலி                                          29-07-2023


உதகை அரசினர் கலை கல்லூரி . நான் பி .எஸ் .சி 2-ம் ஆண்டு படித்து 

கொண்டு இருந்தேன் . காந்தி ஜயந்தியை முன்னிட்டு பேச்சு போட்டி 

நடந்த்தது . அதில் நான் காந்தி மீது சில விமர்சனகளை வைத்தேன் . 

பேசி விட்டு செல்லும் போது " நான் ஸ்ரீநிவாசன் . எகனாமிக்ஸ் புரொஃபசர்.

என்னை என் டிபார்ட்மெண்டில் வந்து பார் ..." என சொன்னார்.

அதுவே சீனியுடன் ஆன முதல் சந்திப்பு .

பின்னர் ....

நாங்கள் நண்பர்களாக ஆனோம் . அவரும் சிகெரேட் குடிப்பார் . நானும் 

குடிப்பேன் . இருவர் பிராண்ட்-ம்  . ஒன்றே . " கோல்ட் ஃபிளேக் ". தினமும் 

கல்லூரி முடிந்து திரும்பும் போது செரிங்க் க்ராஸில் உள்ள விலாசமான

டீ கடையில் உட்கார்ந்து பேசுவோம் . ஒரு ஆங்கில பேராசிரியர்  மற்றும் 

ஒரு சரித்திர பேராசிரியர் வருவார்கள் . அடுத்து ஒரு அரசு ஊழியரும்

வருவார். 

                                                           டீ ...
                                                 
                                                           தம் ...

                                                           பேச்சு ...
                                                    
                                                           விவாதம் ...

முக்கியமாக எங்கள் விவாத்தில்  இந்திய அரசியல் , பொருளாதாரம் 

குறிப்பாக சமூக பிரச்சனைகளை பேசுவோம் . என் நண்பன் ஒருவனும் 

இதில் கலந்து கொள்வான் . அவனை தவிர மற்றவர்கள் எல்லாம் " தோழர்கள் "

ஆனோம் .

ஆம் ...!

புரட்சிகர இயக்கம் ...!!

சீனி ஊட்டி நகர செயலாளர் . அவர் நிறைய படிப்பார் . எழுதுவார் .

" மன ஓசை " -யில் " சுரேஷ் " என்ற பேரில் எழுதுவார் . விடுமுறை நாட்களை 

அவரது ரூமில் தான் காலம் கழிப்போம் . இல்லை என்றால் தாவர இயல் 

பூங்கா செல்வோம் . அவசர நிலை இருந்த போது அவர் போலீஸ்

 விசாரணைக்கு  ஆள்  ஆனவர் . 

நாங்கள் சேர்ந்தே இருப்போம் . உறவு வலு அடைந்து மிக நெருக்கம் ஆனோம் .

இந்த சமயத்தில் அவர் சென்னைக்கு மாற்ற பட்டார் . பிரிவு சோகத்தை 

தந்தது . அவரது செயலாளர் பொறுப்பு எனக்கு வந்தது .அது ஒரு காலம் .

வார வாரம் ஒரு சிறிய ஹாலில் " சமூக அறிவியல் மேடை " என்று ஒரு 

அமைப்பை ஏற்படுத்தி விவாதங்கள் செய்வோம் . ஊட்டியில் இருந்த 

முற்போக்கு மற்றும் அறிவுஜீவிகள் பங்கு பெறுவர் .

சீனி ...ஒரு நல்ல சினிமா ரசிகர். அவருக்கு " மிர்னல்சென் " படங்கள் 

ரொம்ப பிடிக்கும் . நாங்கள் சேர்ந்து பல தமிழ் படங்கள் பார்த்து உள்ளோம் .

வருடங்கள் ஓடின.....

சென்னையில் நான் இருந்தேன் . அப்போது சீனிக்கு திருமணம் . அங்கு 

பல தோழர்களை சந்திக்கும் வாய்பு கிடைத்தது . சீனி அவர் பக்கதிலேயே 

இருக்க சொன்னார். ஆம். நான் தான் மாப்பிள்ளை தோழன் . 

பிறகு ...

என்ன என்னவோ மாற்றங்கள் .

பலர் போல் நானும் அமைப்பிலிருந்து வெளியேறினேன் . சீனுவும் 

வெளியே வாந்தர். 

நான் ஊட்டி வந்து விட்டேன். வாழ்க்கை ஓடியது . பல வருடங்கள் .

பின்பு ஒரு நாள் என் ஊட்டி தோழர் என் முகவரி கிடைத்து ஒரு கடிதம் 

அனுப்பினார் .

ஐயோ...!    ஐயோ...! !

அம்மா ...! அப்பா ...!!

என்னால் தாங்க முடியவில்லை ...!

என் சீனி இருதய   கோளாறு காரணமாக 2 வருடங்களுக்கு முன்பே 

இறந்து விட்டார் என எழுதி இருந்தார்.

என்னால் தாங்க முடியவில்லை .

நான் அழுக ஆரம்பித்தேன் . கொலுங்க கொலுங்க அழுதேன் .

விக்கி விக்கி அழுதேன் . சுமார் 10 நாட்கள் நான் அழுதே தீர்த்தேன் .

மிக பெரிய இழப்பு ...!

தோழர் சீனுவுக்கு வீர வணக்கம் ...!!


பி. கு   :   பொருளாதார பேராசிரியர் சீனிவாசனுக்கு இந்த கதை 

                 அர்ப்பணம் .

R . சத்ய நாராயணன்      சத்யன்     ஸ்ரீ விவேக்    சின்ன சேவகன்     

                                            29-07-2023



No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!