014/2023 வாணி..வா... நீ...!
ஓரங்க நாடகம்
பாத்திரங்கள் : சரஸ்வதி , நாரதர்
இடம் : சத்யலோகம்
காட்சி
( சர்ஸ்வதி வீணையை மீட்டி இசையில் லயித்து இருந்தாள் . அப்போது
நாரதர் வருகிறார் ,)
நாரதர் : தேவி ...! தேவி...!!
சரஸ் : ம் ம் ....
நாரதர் : வரலாமா தேவி ?
சரஸ் : அதுதான் வந்து விட்டீர்களே ...? வாருங்கள் ...!
நாரதர் : கலை மகளே ...! தங்களுக்கு தெரியாது என்று ஒன்றும்
இல்லை ....வந்து ...வந்து ...
சரஸ் : இன்று இங்கு வந்த காரணம் என்ன ? ஏதாவது புது கலகமா ?
நாரதர் : தேவி ...! நான் கலகக்காரன் என்று பேர் பெற்று விட்டேன் ...
சரஸ் : ...ம் ....மேலே சொல்லுங்கள் .
நாரதர் : நான் கலகம் செய்பவன் தான் . ஆனால் என் கலகம்
நன்மையை தான் கொண்டு வரும் ...!
சரஸ் : சரி ...இருக்கட்டும் ...!! இப்போது என்ன கலகம் ...?
நாரதர் : தேவி ...! அப்படி சொல்லாதீர்கள் ...நீங்கள் ஸத்யலோகாகத்தின்
தாய் ....தாயே ...! எனக்கு ஒரு மன வருத்தம் உள்ளது.
சரஸ் : ம்ம்.....சொல்லுங்கள் ...!
நாரதர் : தேவி ...! நான் பாரத தேச சஞ்சாரம் முடித்து விட்டு வருகிறேன் ...
சரஸ் : ம் ....
நாரதர் : தேவி ...! நான் பெண்களை உன்னிப்பாக கவனித்தேன் . பாவம் ..!
பெண்ணை பிறக்க மாதவம் செய்ய வேண்டும் என உங்கள்
பக்தன் சொல்லி விட்டு போய் விட்டான் ...
சரஸ் : ஆம் ...! அதற்கு என்ன ...?
நாரதர் : பெண் உரிமை பற்றி பலரும் பேசுகிறார்கள் .ஆனால் விடுதலை
இன்றி மிகவும் கஷ்ட பட்டு வருகிறார்கள் .
சரஸ் : மாற்றம் மிக மெதுவாகவே நடக்கும் ...
நாரதர் : ஒப்பு கொள்கிறேன் தேவி . ஆனாலும் பெண் படும் பாடு
ரொம்ப அதிகம் தாயே ...!
சரஸ் : ம் ...
நாரதர் : (பெரு மூச்சு விட்டு )......தாயே ...! வேலைக்கு போகும் பெண்கள்
ஆனாலும் சரி ....இல்லத்து அரசியாக இருந்தாலும் அவள் தான்
மிகவும் கஷ்ட படுகிறாள் . அனைத்து பாரம் தாங்கி வேதனையில்
வாடுகிறாள் ...
சரஸ் : நீங்கள் உண்மையை தான் சொல்வீர்கள் ...எனக்கு நன்கு அது
தெரியும் . அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ...?
நாரதர் : மிக்க நன்றி தேவி ..! நான் சொல்வதை ஏற்று கொள்வீர்களா ..?
சரஸ் : நீங்கள் தவறு செய்ய மாட்டீர்கள் ....நான் என்ன செய்ய
வேண்டும் ...?
நாரதர் : அது மிக மிக கடினம் .
சரஸ் : இருக்கட்டும் . விவரம் சொல்லுங்கள் .
நாரதர் : நீங்கள் ஒரு சாதாரண பெண்ணாக பூமியில் பிறக்க
வேண்டும் .
சரஸ் : பிறந்து என்ன செய்ய வேண்டும் ...?
நாரதர் : பிறந்து சமூக தொண்டு செய்ய வேண்டும் .
சரஸ் : சமூக தொண்டா ...?
நாரதர் : ஆம் . என் திட்டதை சொல்கிறேன்
1. சாதாரண பெண்ணாக பிறக்க வேண்டும்.
2. உங்களுக்கு நீங்கள் தான் சரஸ்வதி என்று தெரிய கூடாது .
3. உங்களுக்கு தெய்வ சக்தி இருக்காது . மேலும் எந்த விதமான
அமனுஷிய சக்தி இருக்காது .
கவனமாக கேளுங்கள் தேவி ,,,!
1. பெண் உரிமைக்காக போராட வேண்டும்
2. பெண் பொருளாதார நிலமை உயர பாடுபட வேண்டும் .
3. விருப்பம் போல் அவள் கல்யாணம் செய்ய உரிமை
வேண்டும் .
4. வீட்டு சுமையில் ஆண்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்
5. கிராமங்களிலும் , நகரங்களிலும் உள்ள பெண்கள் சமூக ,
அரசியல் , பொருளாதார விழிப்புணர்ச்சி பெற வேண்டும் .
6. பெண்களை பாலியல் வன்முறை செய்பவர் கடும்
தண்டனை அடைய வேண்டும் .
7. பெண் சரிசம உரிமை பெற வேண்டும்.
8. கிராம , நகர , மாநில , தேசிய , உலக அளவில் ஒன்று
சேர்த்து ..ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் .
9. இது பெண்ணின் புரட்சி ...!!! !!! !!!
தாயே ...! அவ்வளவு தான் ...உங்களால் முடியுமா ..?
சரஸ் : ஏன் முடியாது ...?
நாரதர் : உங்களுக்கு என்று எந்த சக்தியும் இருக்காது . உறுதியாக
சொல்கிறீர்களா ...?
சரஸ் : இந்த 21ம் நூற்றாண்டில் சாதாரண பெண்ணாக பிறந்து
நான் பெண் உரிமைக்காக பாடு பட வேண்டும். அவ்வளவு
தானே மகரிஷி ...?
நாரதர் : எள் என்றால் எண்ணை ஆகி விடுகெறீர்கள் ....
சரஸ் : உங்கள் கலகம் இன்று முடிந்த்தா ...?
நாரதர் : நீங்கள் தயாரா ...?
சரஸ் : ஆம் ...! சத்யம் ...!!
நாரதர் : வாழ்துக்கள் தேவி ...! நான் வருகிறேன் ...!!
( நாரதர் போகிறார் . சரஸ்வதி வீணை , ஜப மாலை மற்றும்
சுவடிகளை தன்னிடமிருந்து எடுத்து விடுகிறார் )
திரை மூடுகிறது
பின் குரல் : கலை மகள் பிறந்து விட்டாள் . அவளுக்கு பெற்றோர்
வைத்த பெயர் வித்யா ...!
புரட்சியை முன்னிட்டு வளர்கிறாள் ...!!
" வித்யா விஜயம் " ஆரம்பித்து விட்டது ...!!!
சுபம் .
கதை -வசனம் : சத்யன்
ஒலி,ஒளி அமைப்பு : ஸ்ரீ விவேக்
பின் குரல் : சின்ன சேவகன்
இயக்கம் : R. சத்ய நாராயணன் \
08-07-2023
R. சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் சத்யன் சின்ன சேவகன்
Please Comment...
ReplyDelete