Friday, 21 July 2023





                           தமிழச்சி ...!  

    சிறுகதை 017/2023            22-07-2023

வீட்டு கதவு தட்டபட்டதும் சுந்தரத்தின்  அம்மா கதவை  திறந்தார் .

வெளியே 2 பேர். பார்த்தாலே போலீஸ் என்று தெரியும் . வீட்டுக்கு 

வந்த அவர்கள் அவர்களாகவே நாற்காலியில் உட்கார்ந்தார்கள் .


   " சுந்தரம் இருக்கானா...? "

   " இல்லை ...நீங்கள் யார் ...? " - சுந்தரத்தின் அம்மா .

   " நாங்க ....க்யு பிராஞ்சு "

   " அப்படினா ...? "

   " சி .ஐ . டி ....போலீஸ் ..."

   " நீங்க வர காரணம் ....ஏன் சுந்தரத்தை   பற்றி கேட்கிறீர்கள் ...? "

   " ஆமாம் ...சுந்தரம் இப்போது எங்கே ...? "

   " தெரியாது ..."

   "  என்னம்மா ...பையனை கேட்டால் தெரியாது என்று சொல்றீங்க ...?"

   "  சத்தியமா எனக்கு தெரியாது ...! "

  "   அவன் லெட்டர் போட்டானா ...?"

   "   இல்லை ..."

  "   ஏன் அவனை கேட்கிறீர்கள் ...? என்ன அவசியம் ...?"

 "   அம்மா ...அவன் எந்த ஊரில் இருக்கான் என்றுக்கூட தெரியாதா ..?"

  "  ஆமாம் ...அவன் என்னிடம் ஒன்றும் சொல்ல மாட்டான் ...எப்போதாவது 

      வருவான் .  ஒரு 2 நாட்கள் இருந்து விட்டு போய் விடுவான் .."

  " ஏன் அம்மா அவனை ஒன்றும் கேட்க மாட்டீர்களா ...? "

  "  எதுக்காக அவனை கேட்கிறீர்கள் ...?"

"    அவன் ஒரு நக்சலைட் ...!"

  " அப்படினா என்ன ...?"

"   அவன் ஒரு தீவரவாதி ...?"

"   ஐயோ ...என்ன இப்படி வாய் கூசாமல் பொய் சொல்கிறீர்கள்...?"

 " ஆமாம். அம்மா . ..."

"   என்ன அவன் வெடிக்குண்டு , துப்பாக்கி ஏதாவது வைச்சு இருக்கான் 

     என்றா சொல்கிறீர்கள் ....? "

  " வந்து ..வந்து ..."

  " நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் . என் மகன் தவறான பாதைக்கு 

     போக மாட்டான் ...."

   " அம்மா புரிஞ்சுக்கங்க ....அவனை பார்த்தால் சுட்டு தள்ளி விட 

      கூட எங்களுக்கு அதிகாரம் இருக்கு ...!"

   " நீங்க பாட்டு எதையாவது சொல்லாதீங்க ...! அவன் ஏழைகளுக்கு 

      உதவ தான் கழகத்தில்  ...இருக்கான் ...! என் மகன் தப்பா போனா 

      நானே அவனை கொன்று விடுவேன் ...!"

  " நீங்களும் அமைப்பில் இருக்கீங்களா ...?"

  " இல்லை . என் மகனை பற்றி நீங்க சொல்றதை நான் கேட்க மாட்டேன் 

     நீங்க போங்க ...!"

  " என்ன அம்மா இப்படி பேசறீங்க ..?"

  " என் மகனுக்கு ஏதாவது ஆச்சுனா நான் உங்களை சும்மா விட 

      மாட்டேன் ...! "

  "  இல்லை ...நீங்க அவன்கிட்டே சொல்லி அவனை அமைப்பில் இருந்து 

      வெளியே வர சொல்லுங்க..."

  "  அமைப்பு ஒண்ணும் சட்ட விரோத அமைப்பு இல்லையே ..?"

   " நாங்க சொல்றதை சொல்லிட்டும் ...ஜாக்ரதை  ...! "

   " என்ன மிரட்டி....பாக்குறீங்களா ...?"

   "  நாங்க வரோம் ...! "

  "   ஆமாம் ....அவனை என்னணு சொன்னிங்க...?"

  "   அவன் ஒரு நக்சலைட் ...!!! "


       பி. கு .  :   சுந்தரம் "ஏதோ " ஒரு ஊரில் " ஏதோ ஒரு " பெயரில் 

                          அமைப்பு தோழர்களுக்கு அரசியல் , சமூக & பொருளாதார 

                      வகுப்பு எடுத்து கொண்டு இருக்கான் ...இல்லை ...

                      இருக்கிறார் ...!  

                                

                          


 R. சத்ய நாராயணன்     சத்யன்     ஸ்ரீ விவேக்       சின்ன சேவகன் 


                                                     22-07-2023                    

        

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!