சிறுகதை 013/2023 ரூ' பாய் '....! 08-07-2023
உதகை அரசினர் கலை கல்லூரி .ரம்யாமான கேம்பஸ் . பல பல
மரங்கள் . கல்லோரியை சுற்றியும் . மலை மேல் இருந்தது . கேம்பஸ் டீ
ரூம் எப்போதும் பிஸியாக இருக்கும் . டீ சாப்பிடுகிறாலோ இல்யையோ
' தம் ' அடிக்காமல் இருக்க மாட்டார்கள் . கிளாஸ்சிற்கு கட் அடித்து விட்டு
அங்கே வந்து விடுவார்கள் .
"தம் " + டீ ...!
சாய்ராம் மற்றும் முகமது தினமும் பல மணி நேரம் அங்கே தான் இருபார்கள் ,
கூடவே ஒரு நண்பர் கூட்டம் . ஆனால் சாயி மற்றும் முகமது ஆழமான
நட்பை கொண்டு இருந்தார்கள் . அதற்கு காரணம் 6-ம் வகுப்பில் இருந்தே
ஒரே கிளாஸில் படித்தவரகள். பி. யு . சி -லும் ஒரே ஒரே கல்லூரி ...ஒரே
கிளாஸ். சாய் நன்று படிப்பான் . முகமதுவும் நன்கு படிப்பான் . இருவருக்கும்
போட்டி தான் . ஆனால் பொறாமை , காழ்ப்பூணர்ச்சி இருவருக்கும் இல்லை.
பி. யு .சி முடிந்த்ததும் அதே கல்லூரியில் இருவரும் வேதியல் பட்ட படிப்பில்
சேர்ந்தனர். டிகிரி படிக்கும் போது இருவருக்கும் நட்பு ஆழமானது . சாய்
முகமது வீட்டிற்கும் ....முகமது சாய் விட்டீற்கும் செல்வது வாடிக்கை ஆனது .
சுமார் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தனார்.
இருவரும் 'தம்' அடிப்பார்கள் . இருவருமே 'செயின் சோமக்கர்ஸ் '. அப்புறம்
திட்டம் போட்டு வேஷ்டி கட்டி கொண்டு வருவார்கள் . எப்போதும் சேர்ந்தே
இருப்பார்கள். சாய் கோவில் போகும் பழக்கம் கிடையது . முகமதும்
பள்ளி வாசல் போக மாட்டான் .
கல்லூரி நாடகத்தில் சாய் நடித்த போது முகமது அவனுக்கு ஒரு விலை
உயர்ந்த ஷர்டை வாங்கி கொடுத்தான் . கல்லூரி நண்பர்கள் எல்லோரும்
அவனை " பாய் " என்றே கூப்பிடுவார்கள் . சாய் மட்டும் " தோஸ்த் " என்றே
கூபிடுவான் .
1981
மறக்க முடியாத வருடம் . பட்ட படிப்பின் இறுதி ஆண்டு. 3- ம் ஆண்டு
மாணவர்கள் சோகத்தில் இருந்தனர் . பிரிவு உபச்சார விழாவில் சாய்
முகமது கட்டி கொண்டு அழுதார்கள் .முகமதுவின் அப்பாவிற்கு வேலை
கேரளாவிற்கு மாற்ற பட்டது .
முகமது பரீட்சை முடிந்ததும் கேரளா செல்ல ...சாய் அவனை பஸ் ஸ்டண்ட்
வரை சென்று வழி அனுப்பி வைத்தான் . இருவர் கண்களிலும் கண்ணீர் .
தாங்க முடியாத பிரிவு ....!
2021
சாய் அதிர்ஷ்ட வசமாக முகமதுவின் போனே நம்பர் பெற்றான் . உலகில்
சாதித்தது போல் உணர்ந்தான் . உடனே 'கால் ' செய்தான் . இருவரும்
ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசினார்கள் .
முகமது : இப்போது 'தம்' அடிப்பதில்லை . விட்டு விட்டான் . துபாயில்
ஒரு நல்ல வேலயில் இருந்தான் . தனது 2 மகன்களுக்கும் திருமணம்
முடித்து விட்டான் . பள்ளி வாசல் போகும் வழக்கம் வந்தது . வெள்ளி
கிழமை 5 முறை தொழுக செல்கிறான் .இன்னும் ஒரு வருடத்தில் ரிடயர்
ஆகி கேரளா வந்து விடுவான் . தான் சந்தோஷமாக இருப்பதாக சொன்னான் .
சாய் : 'தம் ' + டீ -யை விடவில்லை . திருமணமும் ஆகவில்லை . வேலைக்கு
செல்லும் இடங்களில் எல்லாம் காலை 2 முறையும் மதியம் 2 முறையும்
தம் + டீ குடிக்க போய் விடுவதால் பணி நீக்கம் நியதி ஆனது . அவன்
சிறப்பாகவே வேலை செய்தாலும் மேல் அதிகரிகளுக்கு அவனது
பழக்கம் பிடிக்காமால் பணி நீக்கம் செய்தனர் . சாய்-யின் அண்ணன் தான்
வாடகை மற்றும் மருந்துகள் செலவை பார்த்து கொள்கிறார். கை செலவுக்கு
பணம் போத வில்லை என்பதை உள்ளது உள்ள படி தெரிவித்தான் . முகமது
சாய் வங்கி விவரங்களை வாங்கி கொண்டான் . சரி ...ஏதோ ரூபாய் ...
500 அல்லது 1000 அனுப்பி வைப்பான் என எதிர்பார்தான் .
அன்று மாலையே ...
தங்கள் கணக்கில் ரூ பாய் 50,000
வரவு வைக்க பட்டு உள்ளது - வங்கி தகவல் .
" ஐயோ ...அம்மா ...! " என சாய் குலுங்கி குலுங்கி
அழுதான் .
" தோஸ்த் " கோடான கோடி நன்றிகள் என்று
அவனுக்கு தகவல் அனுப்பி விட்டு அழுகையை
தொடர்ந்தான் .
முகமதுக்கு சாய் உயிர் ...!
சாய்க்கு முகமது உயிர் ...!!
உயிருக்கு உயிரான நட்பு ...!!!
பி. கு : இந்த ரூ"பாய்" கதை இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு
அர்ப்பணம் ...!
R. சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
08-07-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!