Friday, 30 June 2023



சிறுகதை 012/2023          தீக்குளிப்பு        01-07-2023


                                                      சாய் ராம் நிதிநிறுவனம் 

                                                      1 லட்சம் முதலீடு செய்தால் 

                                                      ஒரு வருடம் பிறகு ரூ .15,000 மாதமாதம் ...!

                                                      போன் 044-2267 5678 

போஸ்டர் நீல நிறத்தில் கொட்டை எழுதுக்களில் இருந்தது .இந்த போஸ்டெரை 

பார்பவர்கள் 2 விஷ்யங்களை கவனித்தனர்.

                                                   1. பெயர் சாய் ராம் ...!

                                                   2. மாதம் ரூ. 15,000

நிறுவனர் சாய் பாபா பக்தர் போல . ஒரு யோகியின் பெயரை வைத்து 

உள்ளார் . பெயரை பார்க்கும் போதே மக்களுக்கு அது பிடித்து போய்விட்டது .

நம்பிக்கையும் வந்தது .ஆம்...! ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.15,000

என்றால் சும்மாவா ...?

                                          தங்கம்மாள் இந்த போஸ்ட்ர் பார்த்து பெரு மூச்சு 

விட்டாள் . அவள் ஒரு விதவை . கணவனின் இன்சூரன்ஸ் கணக்கில் 

ரூ. 75,000 இருந்தது . அவள் வயது 51. அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள் .

அவள் கல்லுரியில்  படித்து கொண்டு இருக்கிறாள் . அவளுக்கு கல்யாணம் 

செய்ய பணம் வேண்டும் .

                                       இப்போது அவள் ஒரு ஆரம்ப பள்ளியில் காலை 

டிபன் சமைக்க வேலை கிடைத்தது . குறைந்த சம்பளம் தான் . தனது 

தாலி செயின் இருந்தது . அதை அடகு வைத்தாள். ரூ. 19,000 கிடைத்தது .

தங்கம்மாள் பல வீடுகளில் பத்து பாத்திரம் கழுவும் வேலை பார்த்து 

வருகிறாள் . 10 வருடதிற்கு மேலாக வேலை செய்து வந்த வீட்டில் 

ரூ. 6,000 கடனாக வாங்கினாள் .

                                    பணம் எடுத்து கொண்டு "சாய் ராம் நிதிநிறுவனம் "

சென்றாள் . மாதம் ரூ. 15,000 கனவில் இருந்தாள் . நிறுவனத்தை சேர்ந்த 

ஒருவர் விண்ணப்பத்தை தானே பூர்த்தி செய்தார் . தங்கமாள் எழுத 

படிக்க தெரியாதவர். எழுத்து கூட்டி கூட்டி படிப்பார்.  அவள் தனது 

விண்ணபத்தில் கை ரேகை பதிவு செய்தார். ரசீது பெற்று கொண்டாள் .

அடுத்த வருடம் வந்து ரூ. 15,000 மாதமாதம் பெற்று கொள்ளுங்கள் என 

அனுப்பி வைத்தனர் .


                                  சாய் ராம் நிதி நிறுவன மோசடி ...!

                                  கோடி கணக்கில் பண சுருட்டல் ...!!

                                  நிறுவனர் தலைமறைவு ...!!!

செய்தியை பார்த்து மயங்கி விட்டாள் . மறு நாள் கையில் மண் எண்ணையை 

எடுத்து கொண்டு நிறுவனம் சென்றாள் . அங்கு 100-க்கு மேற்பட்ட மக்கள்

 ஆவேசமாக கூடி இருந்தனர் .போலீஸ் குவிந்து இருந்தது .அவள் அங்கு உள்ள 

மற்றவரிடம் விஷயம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். ஒப்பாரி வைத்து அழுதாள் .

அருகில் இருந்த காவலரிடம் சொல்லி சொல்லி பார்த்தாள் . யாரும் அவளை 

கண்டு கொள்ளவில்லை .

                                துக்கம் தாங்காமல் தன் உடலில் மண் எண்ணையை 

ஊற்றினாள் . தீ பெட்டி எடுக்கும் போது ஒரு காவலர் அதை பார்த்து 

"சடக் " என பிடுங்கினார் . தங்கம்மாள் புரண்டு புரண்டு அழுதாள் .

சாலையில் இருந்து எழுந்த நிற்க மறுத்த அவள் ...." ஐயோ ..என் பணம் 

எல்லாம் போச்சே ...!" என துடித்தாள் .

                               ம்ம் ....அம்மா ......! என கத்தினாள் . அவள் இதயம் 

"லப் -டப் " ஐ அதிகரித்து ....சில நிமிடங்கள் தான் .....நெஞ்சை பிடித்து 

கொண்டு "அம்மா என சொல்லி கொண்டே கீழே விழுந்தாள் .

                             திடீர் மாரடைப்பு ...!

                             தங்கம்மாள் செத்து போய் விட்டாள் ...!!


பி. கு .       1. சாய் ராம் நிறுவனர் நாடு விட்டு நாடு விமானத்தில் 

                       பறந்து கொண்டு இருந்தான் .

                   2. தங்கம்மாளின் மகள் என்ன செய்வாள் ...?


R. சத்ய நாராயணன்    சத்யன்     ஸ்ரீ விவேக்     சின்ன சேவகன் 

                                                 01-07-2023

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!