Friday, 30 June 2023


சிறுகதை 011/2023      முட்டாள்            01-07-2023


காதல் ...!

காதல் ...!!

காதல் ...!!!

மூர்த்தி 3 வருஷமாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறான் . அவள் பெயர் 

இந்து . ஆழமான காதல் . பார்க்க ரொம்ப அழகு . உருண்டை முகம் .

நல்ல அகன்ற நெற்றி . தினமும் உடைக்கு ஏற்றவாறு ஸ்டிக்கர் பொட்டு .

கல்லோரியில் படிக்கிறாள் . பி .எ . சரித்திரம் .மூர்த்தியின் நண்பன் 

ஒரு " வாட்ச் " கடை வைத்து இருந்தான் . தினமும் காலை மற்றும் 

மாலையில் அவன் அங்கு நின்று கொண்டு இந்துவை " வாட்ச் " (சைட் )

செய்வான் .அவள் பெயர் , குடும்ப விவரம் மற்றும் படிக்கும் ஆண்டு 

நண்பன் மூலம் அறிந்தான் . மூர்த்தி அதே கல்லூரியில் படித்தவன் .

மூர்த்தி " வாட்ச் " செய்வதை அவளும் "வாட்ச் " செய்தாள் .மூர்த்தி அவள் 

அழகில் மயங்கி , லயித்து போய் இருந்தான் .

                           மூர்த்தி டிகிரி கிடைத்ததும் ஒரு வங்கியில் பணி செய்தான் .

அதிகம் படிப்பான் . விவேகனந்தா நூல்கள் மிகவும் பிடிக்கும். சமூக 

சேவையில் ஆர்வம் .அடிக்கடி சென்னை சென்று ராமகிருஷ்ண ஆஸ்ரமம் 

போய்விட்டு வருவான் ..சமூக சேவை ஆர்வம் அவனை வேலையை 

ராஜினாமா செய்ய வைத்தது . சென்னை சென்று ரா .கி ஆஸ்ரமத்தில் 

சேர்ந்தான் . அவனுக்கு மிஷன் நடதுதும் மாதாந்திர பத்திரகையில் 

உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. சம்பளம் இல்லை . சாப்பாடு 

மிஷன் போட்டுவிடும் . நன்றாக எழுதினான் . அவன் வேலை மற்ற 

சேவகர்களால் பாராட்டபட்டது  . எல்லாம் 3 வருஷங்கள் தான் . மூர்த்தி 

மன குழப்பம் அடைந்தான் . கல்யாணம் செய்து கொள்ள ஆசை . அவனுக்கு 

குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் .தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் 

என்று நினைத்தான் .

 வங்கி வேலையை முன்யோசனை 

இல்லாமல் விட்டுவிட்டோமே என வருந்தினான் .

                                      தன் மூட்டை , முடிச்சுகளுடன் சொந்த ஊர் வந்தான் .

பிறகு தான் இந்துவை பார்த்தான் . இந்துவுக்கு பரிசும் , கடிதமும் 

கல்லூரி முகவரிக்கு அனுப்பி வைத்தான் . அவள் முர்த்தியை கண்டு 

கொள்ள வில்லை. இப்படி 2 வருடம் ஓடிவிட்டது . அவள் வீட்டில் இந்த 

விஷ்யத்தை சொல்லி இருப்பாள் என மூர்த்தி உறுதியாக நம்பினான் .

அவளிடம் பேச துடித்தான் .

                                   மூர்த்தியின் பிறந்த நாள் . ஒரு முடிவு எடுத்தான் .

அவன் நேர்மை மிக்கவன் . தைரியசாலி . நேரே இந்து வீட்டுக்கு 

போனான் . அவள் தங்கை கதவை திறக்க ....இவன் உங்க அம்மாவை 

பார்க்க வேண்டும் என சொல்ல ...

                                 அவர் அம்மாவிற்கு ஷாக் .
                                
                                 மூர்த்தி நேரே விஷ்யத்திற்கு வந்தான் .

                               " நான் இந்துவை விரும்புகிறேன் . கல்யாணம் 

                                 செய்து கொள்ள பிரியபடுகிறேன் ..."

                               " இல்லை ....அவளுக்கு டுபாய் மாப்பிளை நிச்சயம் 

                                 முடிந்து விட்டது ..."

என்று வாய் கூசாமல் போய் சொன்னார் . மறு நாள் லஞ்ச் சமயத்தில் 

மூர்த்தி கல்லூரி சென்றான் . அவள் 4 நண்பர்களுடன் "பாஸ்கெட் பால்"

மைதானதத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தாள் . பயம் எதுவும் 

இல்லமால் மூர்த்தி பேச்சை ஆரம்பித்து ....

                            " நான் பிறகு பேசவா ...?"

                           " இல்லை இப்போதே பேசு ...!"

                           " இந்து ...ஐ லவ் யு ...!"

                           " எனக்கு நிச்சயம் ஆகிவிட்டது ...!"

                          " இல்லை அது பொய் என்று எனக்கு தெரியும் ...!"

                          "ம்ம ...ஆமாம் பொய் தான் ...!"

                           "நீங்க என்ன சொல்றீங்க ...?"

                         " யு ஆர் மை எனிமி ...!"

                         " இல்லை ...நான் உங்களை உண்மையாக...."

                         "உனக்கு என்ன தகுதி இருக்கு ...? "

                        " என்ன எதிர் பார்ப்பு ...?"

                        " ஸ்டுப்பிட் ...! கெட் லாஸ்ட் ...!"

 மூர்த்திக்கு செம ஷாக் . பளார் ..பளார் ...என்று கன்னத்தில் அரைந்த்து 

போல இருந்தது .கிளம்பி விட்டான் . நேரே மது கடைக்கு போனான் .

பிறகு தன் முடிவை மாற்றி கொண்டான் . பேரிடி . " உனக்கு என்ன 

தகுதி ...?"- இதுவே அவன் காதுகளில் எதிரொலித்தது . அவன் குலுங்கி 

குலுங்கி நடு ரோடிலையே அழுதான் . துடிதுடித்து போனான் .

                         எந்த பெண் ஒன்றும் இல்லாதவனை விரும்புவாள் ..?
                      
                         இது அவனுக்கு தோன்றவே இல்லை..
 
                         சொத்து இல்லை....!

                         வேலை இல்லை....!!

                         பணம் இல்லை ....!!!

                         காதலுக்கு கண் உண்டு .

                        அவன் ஒரு மடையன் ....!


R.சத்ய நாராயணன்       சத்யன்     ஸ்ரீ விவேக்     சின்ன சேவகன் 

                      01-07-2023


No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!