Friday, 9 June 2023

 


                                                            உண்மை 003/2023     புவி ஈர்ப்பு சக்தி 


ஆம் ...!

நியூடன் புவி ஈர்ப்பு சக்தியை கண்டு பிடிக்கும் முன்பே இந்திய 

வானவியல் நிபுணர்கள் ஈர்ப்பு சக்தி பற்றி கூறி உள்ளனர் .அவர்களுக்கு 

தர வேண்டிய அங்கீகாரத்தை விட்டு விட்டு நியூடன்-க்கு பெருமை சேர்ப்பது 

அபத்தம் .

                  உண்மைகளுக்கு செல்வோம் ...!

                 * 'சூரிய சித்தாந்தம்' என்ற பழம் பெரும் நூல் " பூமி பால்வெளியில் 

                     (Space) உறுதியாக நின்று கொண்டு இருக்கிறது "

                                   -- சூரிய சித்தாந்தம் -அத்யாயம் 12-ஸ்லோகம் 32

                 * வராகமித்ரா 6-ம் நூற்றாண்டில் " தீ பிளம்புகள் பூமியின் 

                    எந்த பகுதியில் இருந்தாலும் மேல் நோக்கியே செல்கிறது.

                    மற்றும் வீசி ஏறிய பட்ட பொருட்கள் கிழே தான் விழும் .

                                 -- பஞ்ச சித்தாந்தம் -அத்யாயம் 13- ஸ்லோகம் 4

                 * பாஸ்கரச்சார்யா கணித மேதை 11-ம் நூற்றாண்டில் அவருடைய 

                   புத்தகம் " லீலாவதியில் " விளக்கமாக கூறுகிறார் ." பூமி ஈர்ப்பு 

                    சக்தி உள்ளது .கிரகங்களின் பரஸ்பர ஈர்ப்பு அவற்றை (கிரகங்கள் )

                    வான்வெளியில் உறுதியாக நிற்க வைக்கிறது ."

                  * " சித்தாந்த சிரோமணியில் " பாஸ்கராசரியா விளக்குகிறார் .

                     " பூமியானது இயற்கையிலயே எல்லா பொருட்களையும் ஈர்க்கிறது .

                        இது வானவியலில் எல்லா பொருட்களுக்ம் பொருந்தும். 

                        ஈர்ப்பு சக்தி எல்லா பொருட்களையும் கீழே விழ செய்கிறது.

                       கிரகங்களின் இடையே ஈர்ப்பு சக்தி இருப்பதால் அவை எப்படி 

                       கீழே விழும் ...?

                                      -- சித்தாந்த சிரோமணி -புவனக்ஷா -ஸ்லோகம்-6

                     *7-ம் நூற்றாண்டில் மிக சிறந்த கணித மேதை , " பிர்ம்ம குப்தா 

                      தனது    நூலில்  (ப்ரம்மா ஸிபூட்ட சித்தாத் ) 

                      " தண்ணீர் அது இயற்கையாக கீழே பாய்ந்து ஓடுவது போல் 

                         பூமியானது தனது ஈர்ப்பு சக்தி மூலம் எல்லா பொருட்களையும் 

                       தன்னை நோக்கி இழுக்கிறது "


                     பல இந்திய நூல்கள் புவி ஈர்ப்பு சக்தியை பற்றி எடுத்து கூறி 

                     உள்ளன . எல்லாம் .....

                                                          நியூடன்-க்கு முன்பே ...!


                                                                        அடுத்து 


                                                    உண்மை 004/2023

                                  எது எதை சுற்றி செல்கிறது ...?

                                 பூமி VS சூரியன் ...??

                                 பழம் பெரும் இந்தியாவின் நிலை என்ன ???


                                                         அடுத்த வாரம் 


R.சத்ய நாராயணன்         ஸ்ரீ விவேக்       சின்ன சேவகன்      10-06-2023



No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!