Friday, 9 June 2023




       சிறுகதை  004/2023              ஒரு பக்க புரட்சி ...!                        10-06-2023 


நான் தீர்மானம் எடுத்து விட்டேன் .முழு மனதுடன் முடிவு செய்து விட்டேன்

 இன்று எனக்கு ஓய்வு . ஏதாவது எழுதலாம் என்று தான் தீர்மானித்தேன் .

நான் என் நாற்காலியில் உட்கார்ந்தேன் . எனக்கு முன்னே இருந்த

 மேசையில் பாரதி ...மீசைக்காரன் ...! லாமினேஷன் போட்டோ .வேறு யார் 

போட்டோவை-யும் வைக்க வில்லை . என்னை மீசை கார பாரதி பார்த்து 

கொண்டு இருக்கிறான் .

என்ன எழுதுவது ...? இதுவே என் பிரச்சனை ...!

பாரதி போல் கவிதை எழுதலாமா ...?

அம்மாடியோவ் ...!

இது பயங்கர கஷ்டம் .

சரி ...வேறு என்ன எழுதுவது ..?

நாடகம் ...! ஐயோ ....!! வேண்டவே வேண்டாம் ....!!!

நான் ஏற்கன்வே பல பல திரைக்கதை -வசனம் உள்ளிட்ட 

சினிமா ஸ்க்ரீப்டுகளை வைத்து உள்ளேன் . அவை யாவும் 

என் புத்தக , ஆவண குப்பைகள் நடுவே தூங்கி கொண்டு இருக்கிறது .

தோல்வி ...படு தோல்வி ...!! முடிந்து போன விஷயம் .

சரி . நாவல் எழுதலாமா ...? நாவல் என்றால் ஒருவன்/ஒருத்தி வாழ்க்கை 

கதையாக இருக்க வேண்டும் . அல்லது வாழ்கையின் ஒரு பகுதியாக 

இருக்க வேண்டும் . நேரம் இல்லை .அப்படி என்றால் என்ன எழுதுவது ...?

அம்மம்மா ...!

சிறுகதை எழுத முடிவு எடுத்தேன் . இதை தீர்மானித்து விட்டேன் .

"சுருக் " "நறுக் " என்று இருக்க வேண்டும் . சிறுகதை என்றால் சின்ன 

" கரு " வேண்டும் .

பேனாவை கீழே வைத்து விட்டு பாரதியை பார்த்தேன் .பாரதி என்னை

 பார்த்து கொண்டு இருந்தான் .

பெருமூச்சு விட்டு "கரு"வை என் மூளையில் தேடினேன் .பல எண்ணங்கள் 

'பளிச் " " பளிச் " என்று எண்ணங்கள் வந்து போகின .

சிறுகதையின் கருவாக எதை தேர்ந்து எடுப்பது ...?

                                                 - காதல் .....?

                                                - பாசம் ....??

                                                - ஆன்மிகம் ...???

                                                - ஆணவ படுகொலை ...??? ?

                                               - சாதிய வெறி .....??? ??

                                               - மத வெறி ....??? ??

                                              - இன வெறி ....??? ???

                                             - நிற வெறி ......??? ??? ?

                                             - மொழி வெறி ...??? ??? ??

என பல பல யோசனைகள் வந்த வண்ணம் இருந்தன . 

ஆம் ...! வேறு ஏதாவது கருவை தேர்வு செய்யலாமா ...?

                                             - லஞ்சம் ...?

                                            - ஊழல் ....??

                                            - அடக்குமுறை ...???

                                           - வறுமை ...??? ?

                                           - சுரண்டல் ...??? ??

                                          - வர்க்க போராட்டம் ...??? ???

ஆ ...! ஆ ...!! ஆ ...!!!

கிடைத்து விட்டது . நான் நினைத்த படியே ஒரு நல்ல கரு கிடைத்து

 விட்டது. .

அப்பாடா ...!

எனக்கு கரு கிடைத்து விட்டது ...!

அது என்ன ...?

வைட் ...வைட் ....!

என் கரு ....

என் கரு ...

                                      உலகையே குலுக்க போகும் .... 

                                      உலகையே குலுக்க போகும் ....

                                                 இந்திய புரட்சி ...!


பி. கு.:                         எப்போது வரும் ...?

                                      யாருக்கு தெரியும் ...??

                                      ஆனால் நிச்யம் வரும் ...!!!


R. சத்ய நாராயணன்     ஸ்ரீ விவேக்      சின்ன சேவகன்     10-06-2023 

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!