சிறுகதை 003/2023 தேன் நிலவு ...! 10-06-2023
என் பெயர் பாலு என்கிற பாலன் . நான் ஒரு பறையன் . எனக்கு
சாதியில் நம்பிக்கை இல்லை . ராணியும் அப்படிதான் . அவளுக்கும்
சாதியில் நம்பிக்கை இல்லை.
எல்லோரும் மனிதர்கள் தான் என்று நம்புவாள் .
எங்கள் குடும்பம் அவ்வளவு கஷ்ட பட வில்லை. என் சாதியில்
உள்ளவர்களின் வேதனையை அறிந்தவன் நான்.
எனக்கு ஒரு மார்க்ஸிய நண்பன் இருந்தான் . இருக்கிறான் ...!
அவனுடைய பாதிப்பு என்னிடம் இருப்பது இயற்கையே ....!
நான் இட -ஒதுக்கீடு மூலம் அண்ணா பல்கலை கழகத்தில்
பி . டெக் ( ஐ.டி) முடித்து விட்டு வேலை தேடினேன் . சீக்கிரமே
சோலிங்கபூரில் ஒரு ஐ .டி நிறுவனதில் வேலை கிடைதத்து .
சம்பளம் 40,000 ' தான் '...!
நான் வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகி விட்டது .
எங்கள் டீம்-க்கு மேனேஜர் ஒரு பெண் .....ராணி ...! அவளை பற்றி
சொல்லியே தீர வேண்டும் .
அவள் அழகு ...!
மிக மிக அழகு ...!!
முதல் சந்திப்பு மறக்க முடியாது .
பார்த்த உடனே அவள் ஒரு பிராமண பெண் என்று தெரிந்து விடும்.
அவள் எங்கள் டீம்-ஐ நேர்த்தியாக நடத்தி சென்றாள் .
அவள் ராணி தான் ...!
அழகு ....!!
அவள் அறிவிலும் , வேலையிலும் ராணி தான் ...!!!
ஆம் ...! அவள் ராணியே தான் ...!! என் மனதை ஈர்த்து விட்டாள் .
என் வீட்டில் எனக்கு முழு சுததிரம் தந்து விட்டார்கள் .
நான் என் அம்மாவிடம்...
" அம்மா ...! இன்னிக்கு வெள்ளி . சனி விட்டு ஞாயிறு கிளம்பி
திங்கள் காலை வந்து விடுவேன் ...!"
" சரி ..சரி....பாத்து போய்விட்டு வா ...!"
என் அம்மா எந்த ஊருக்கு என்று கூட கேட்க வில்லை . என் மீது
அபார பாசம்.
அதே சமயம் ...
" அம்மா ...நான் என் ஃப்ரெண்ட்-உடன் இன்னிக்கு ஊட்டி
போயி திங்கள் வந்து விடுவேன் ...!"-------ராணி .
" சரிமா ...பாத்து ஜாக்கிரதையாக போயி விட்டு வா ...1"
- ராணியின் அம்மா .
வெள்ளி இரவு . 8 மணி . நான் சென்ட்ரல் ஸ்டேஷனில் காத்து இருந்தேன் .
அம்மாடியோவ் ...!
ராணி வந்து விட்டாள் .ஒரு சின்ன பேக் . அவ்வளவு தான் .
" ராணி ...கரெக்ட் டைம்க்கு வந்து விட்டேயே ..? "
" எனக்கு பங்சுவாலிட்டி ரொம்ப பிடிக்கும் ...!
ஆமாம் ...எந்த கோச் ..? "
" எ - 3 "
" எ .சி கோச் தானே ...? "
" ம்ம. ஆமாம் ...கவலை படாதே ...!"
ராணிக்கு எ .சி . இல்லாமல் இருக்க முடியாது . கோச்-ல் எறி
இடம் தேடினோம் . எனக்கு நடு பெர்த் . அவளுக்கு கீழ் பெர்த் .
" ராணி ...நீ சாப்பிடாச்சா ..?
" ம்ம ....நீ ...? "
" சாப்பிட்டு விட்டு தான் கிளம்பினேன் . படுக்கலாமா..?"
" இந்த மாசா குடித்து விட்டு படு . குட் நைட் ...!"
சிக் புக் ...சிக் ...புக் ...
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரைலில் இருந்து இறங்கி நேர் எதிரே
இருந்த டாய் டிரைன்-ல் ( குட்டி ரயில் ) ஊட்டிக்கு புறபட்டோம் .
நான் ஏற்கன்வே ஊட்டி வந்து உள்ளேன் .ராணி குட்டி ரயில்-ஐ
மிகவும் ரசித்தாள் . அவளுக்கு மிக்க சந்தோஷம் . ரயில் மெல்ல
மெல்ல மலை ஏறியது .ஜன்னல் சீட் வாங்கி சீனரி பார்த்து
ஆனந்தம் அடைந்தாள் . போட்டோ பல எடுத்தாள் .
" பாலு ...! அங்கே பாரு ...!! யானை கூட்டம் ..!"
" எங்கே ...?"
" அதோ பார் ..."- சுட்டி காட்டினாள் .
நான் பார்த்தேன் . அழகாக யானை கூட்டம் மெல்ல மெல்ல
நடந்து கொண்டு இருந்தது .
ராணிக்கு குஷி ...! எனக்கும் தான் ...!!
ஊட்டி ....!
அவளுக்கு தந்தூரி உணவு மிக பிடிக்கும் . ஊட்டியில் பிரபலமான
' நாகர் ' ஹோட்டலில் காலை டிஃபன் சாப்பிட்டோம் .
பிறகு நேரே தாவரவியல் பூங்கா ...!
அம்மாமா ...! அப்பப்பா ...!! கொள்ளை அழகு .வெயில் இல்லை .
குளு குளு என்று இருந்தது . இயற்கை ஊட்டிக்கு அளித்த எ. சி.\
ராணி குஷியால் என் கைகளை பிடித்தாள் .
கார்டன்-ஐ இருவரும் மிகவும் ரசித்தோம் .கிலாஸ் ஹவுஸ் சென்று
பூக்களை மிக அருகில் கண்டு களித்தோம் . மொபைல்-ல் போட்டோ
எடுத்து குவித்தோம் .வெளியே போகவே மனம் இல்லை .
மிக குறைந்த நேரமே உள்ளது. அடுத்து ...
ஸ்டார் ஹவுஸ் . தொட்ட பெட்டா . உயரமான சிகரம்
பஸ்-சில் போனோம் . பக்கம் பக்கமாகவே உட்கார்ந்தோம் .
ஸ்டார் ஹவுஸ்-லிருந்து கோவை , மைசூர் திசை நோக்கி பார்வையை
செலுத்தினோம்.
" நம்ம தமில் நாட்டில் இப்படி எ. சி. போட்ட ஊராக
ஊட்டி இருக்கிறது ...!"
" ம்ம ...குளு குளு என இருக்கு ...!"
படகு இல்லம் :
" போட்டிங் போலாமா ..."
" நிச்யமாக ...!"
" சரி ..பெடலிங்க் போட் புக் செய்து வருகிறேன் ..!"
அவள் அதற்குள் கேண்டீன் சென்று 4 மிளகாய் பஜ்ஜி வாங்கி வந்தாள் .
போட்டில் இருவரும் காலால் பெடல் செய்தோம் . போட் -ஐ நடு ஏரியில்
நிறுத்தி பஜ்ஜி சாப்பிட்டோம் . குளுருக்கு பஜ்ஜி பிரசாதமாக இருந்தது .
இரவு வந்து விட்டது . அதே ஹோட்டலில் இரவு உணவு நன்கு சாப்பிட்டோம் .
அவள் என்னை வேண்டுமானால் நான்-வெஜ் சாப்பிட சொன்னாள் .
அவளுக்கு நான் மாமிசம் சாப்பிடுவதை விட்டு விட்டேன் என்று தெரியாது .
ரூமுக்கு திரும்பினோம் .
நல்ல அலைச்சல் . நல்ல அசதி .நான் கட்டிலில் அவளுக்கு மிக
நெருக்கமாக உட்கார்ந்தேன் .
" பாலு ...1 என்ன வேணும் ...?"
" ராணி...ராணி ...நீ மிக மிக அழகு ...நீ ..."
" நீயும் அப்படிதான் ...!"
" உன்னை போன்ற காதலி கிடைக்க கூடுத்து வைத்து
இருக்க வேண்டும் ...!"
" ஓ...அப்படியா ...? அப்போ என்னை எடுதுக்கோ ...!"
" ம்ம ...!"
அவள் முகத்தை என் கைகளால் எடுத்து என் பக்கம் திருப்பி அவள்
நெற்றியில் முததம் கொடுத்தேன் . இதுவே என் முதல் முத்தம் .அவள்
கண்களை மூடிக்கொண்டு என்னை முத்தம் இட்டாள் .
இது தான் முதல் இரவு ...!
நான் சொர்க்கதில் இருப்பது போல் உணர்வு .காம மோகத்தில் மேய்
மறந்தேன் .
அம்மம்மா ...! அப்பப்பா ...!!
" ரா.....நீ ....! ரா ...நீ ...!!"
" பாலு ...! பாலு...!! "
பரிபூர்ண சந்தோஷத்தில் நான் .என் வாழ்வில் புது செக்ஸ் அனுபவம் .
நான் முத்த மழை பொலிந்தேன் .அவள் முழுதாக தன்னை எனக்கு தந்தாள்.
இனி என்ன ...? மூணு முடிச்சு தான் ...!
ஆம் . நிச்யதாம்பூலம் முடிந்து விட்டது ...!
அடுத்த என்ன ...?
நிச்யமாக கல்யாணம் தான் ...!
அடுத்த மாதம் ...!!
பி .கு : சாப்பிட வாருங்கள் ...!!!
R.சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன் 10-06-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!