சிறுகதை 002/2023 பதக்கம் 03-06-2023
அன்று :
அமெரிக்காவின் ஒகியோ நதி கரையில் ....
ஒரு மேட்டின் மேல் உட்கார்ந்து ....தனது தலையை கால் முட்டியின் கைகளை
வைத்து கொண்டு.....
தூரத்தில் இருப்வர்களுக்கு அவர் உடல் வேகமாக குலுங்குவது தெரிந்த்து .
ஆம் ...!
அவர் குலுங்க குலுங்க அழுது கொண்டு இருந்தார் .யாரும் அவர்
பக்கத்தில் இல்லை .
எலியை கண்ட பூனை போல அமெரிக்க ஊடகங்கள் அங்கே அடித்து
கொண்டு ஓடி வந்தனர் .
கைகளில் மைக் மற்றும் காமிராவுடன் வந்தனர் .அவர்கள் அழுகின்ற
மனிதனை கையால் தட்டி எழுப்புகின்றன்ர் .அவர் அழுது கொண்டே
மேலே எழுகிறார் . தன் ஆடைகளை சரி செய்து கொள்கிறார்.
பின் உரையாடல் ...
முழுவதும் ஆங்கிலதில் ....
" சார் ..நீங்கள் முகமது அலி தானே ..."
அழுகயை சற்று நிறுத்தி " ஆம் " என்கிறார் .
" நீங்கள் தானே ஒலிம்பிக்ஸில் குத்து சண்டையில் தங்க பதக்கம்
பெற்றவர்...? "
"ஆம் "
" நீங்கள் ஏன் அழுகிறேர்கள் ...? "
" மனம் சரி அல்ல ..."
" என்ன சார் ...நீங்கள் உலக அளவில் குத்து சண்டையில் சாம்பியன் ...
உங்களுக்கு என்ன வருத்தம் ... "
" இந்த உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டது. ஆனால் அமெரிக்காவில்
இன்றும் நிற வெறி தலை விரித்து ஆடுகிறது . ஒரு நிற வெறி பிடித்த
ஒரு நாட்டின் பிரதிநிதியாக ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டது பெரும்
அவமானமாக கருதுகிறேன் .... "
" சரி. நீங்கள் எவ்வாறு நிற வெறியால் பாதிக்க பட்டீர்கள் ..."
" வேண்டாம் ..வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்கள் ...! "
" சரி சார் ...இங்கு வந்து தனியே ஏன் அழுது கொண்டு இருக்கிறீர்கள் ...? "
" நான் பெற்ற தங்க பதக்கத்தை இந்த நதியில் வீசி எறிந்து விட்டேன் ...! "
" ஓ மை காட் ...!!! "
இன்று :
இந்தியா . டெல்லி .நடு ரோடு .
மல்யுத்த வீராங்கனைகள் மத்திய எம். பி . பூஷன் மீது நடவடிக்கை
எடுக்க கூறி போராட்டம் நடதுகின்றனர் .
குற்றம் : பாலியியல் வன்முறை ...!
பூஷனை கைது செய்ய சொல்லி போராட்டம் .
எப்போதும் போல் நிருபர்கள் கையில் மைக் மற்றும் காமிராவுடன் ...
இனி உரையாடால் முழுவதும் ஹிந்தியில் ....
" மேடம் உங்களின் குறிக்கோள் என்ன ..? எதற்காக இந்த போராட்டம் ..? "
மிகுந்த வருத்துத்துடன் ஒரு வீராங்கனை அழுது கொண்டே சொல்கிறார் ..
" நாங்கள் பாலியியல் வன்முறை ...குறித்து எம். பி. பூஷன் மீது புகார்
தந்தும் ...அவர் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை ...
அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் ...! "
" சரி ...அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் ...? "
" நீதி கிடைக்க வில்லை என்றால் நாங்கள் வாங்கிய பதக்கத்தை
கங்கை நதியில் வீச தீர்மானித்து உள்ளோம் ..."
" மேடம் ...காவல் துறை என்ன சொல்கிறது ...? "
" நாங்கள் புகார் கூடுத்தும் ...பூஷனை கைது செய்ய எந்த ஆதாரமும்
இல்லை என்று சொல்லி விட்டார்கள் ...! "
" நீங்கள் புகார் செய்து உள்ளீர்கள் அல்லவா ...? "
" ஆம். ஆனால் அரசு அதை கணக்கில் எடுத்து கொள்ள வில்லையே ? "
படார் ...! படார் ...!! படார் ...!!!
சுற்றி இருந்த போலீஸ் திடீர் என மல்யுத்த வீராங்கனைகள் மீது
கொடூர தாக்குதல்...
அவர்களை குண்டு காட்டாக வலிய கொடூரமாக தூக்கி போலீஸ்
வண்டியில் ஏற்றினார்கள் . வீராங்கனைகள் தடுத்தும் பயன் இல்லை.
கைது செய்வதாக போலீஸ் கூறியது .
எம். பி. பூஷன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சந்தோஷமாக
பங்கு கொண்டு இருந்தார்.
நீதி கேட்டவர்கள் கைது...!
குற்றம் சாற்றபட்டவர் புதிய நாடாளுமன்றதில் ....
நிற்க .
உலகத்தில்.... மிக மிக ' புனித ' நதி கங்கை ..! அதில் சடலங்கள்
மிதந்து செல்வது வாடிக்கை . உலகில் அதிக மாசு பட்ட நதிகளில்
முக்கியமான நதி கங்கை ....
வீராங்கனைகளின் பதக்கத்தை விழுங்குவதற்காக காத்து
கொண்டு இருக்கிறது .
மல்யுத்த வீராங்கனைகளின் கைது குறித்து இன்று (01-06-2023 )
ஒலிம்பிக் கமிட்டி மிக கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளது .
வாழ்க ஒலிம்பிக் கமிட்டி ...!
கங்கை காத்து கொண்டு இருக்கிறது ...!!
பி. கு. 1983ல் உலக கிரிக்கெட் கோப்பையை வென்ற கேப்டன் கபில் தேவ்
இன்று ( 02-06-2023 ) மிகுந்த வேதனையை வெளிபடுத்தி உள்ளார் ...!
R. சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் 03-06-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!