தண்ணீர் ...! தண்ணீர் ...!! ( சிறுகதை -001/2023 )
நாக்கு வறண்டு விட்டது . உடல் சோர்வும் வந்து விட்டது .. நடக்க கூட
முடிய வில்லை.
தாகம் ...!
தாகம் ...!!
தாகம்.....!!!
நான் எப்போதும் தண்ணீர் கிடைக்கும் இடத்தில் தண்ணீர் இப்போது
இல்லை.சுற்றிலும் தண்ணீர் இல்லை . சூரிய வெப்பம் அதிகம் .
கடும் சூடு .உடல் தகதகத்து கஷ்ட படுத்தியது .
உடல் குளிக்க வேண்டும் போல் இருந்தது . வெப்பம் மிக மிக அதிகம் .
குளித்து சில வாரங்கள் ஆகி விட்டது .
அய்யோ ...! அம்மா ..!! அப்பா ...!!!
எங்கே குளிப்பேன் ...?
என் தாகம் எப்போது தீரும் ...??
பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்ததது ...!
நான்கு நாட்களாக சரியாக சாப்பிட வில்லை . சில பழங்கள் மட்டுமே
சாப்பிட்டேன் .பசியை விட தாகம் தான் அதிகம் .வெய்யல் சுட்டு எரித்தது .
என்னால் தாங்க முடிய வில்லை .
தண்ணீர் ...!
தண்ணீர் ...!!
எங்கே போவேன் ...?
ஓட ஆரம்பித்து விட்டேன் .
தண்ணீர் குடித்து 10 நாட்கள் ஆகிவிட்டது .
ஓடி ஓடி சோர்ந்து விட்டேன் .உடல் பலவீனமாக இருந்தது. என் மகளை
பார்க்க ஆசை . அவள் பெரியவள் ஆகி விட்டாள் .ஆனால் நான் அவளை விட்டு
ஓடினேன் . என் மகளுக்கும் தாகம் .
எனக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை .ஒன்றும் புரியவில்லை .
தண்ணீர் தேடி ஓடினேன் . ஆனால் கிடைக்கவில்லை..
இப்போது நாடு ரோடில் ஓடி கொண்டு இருக்கிறேன் .எனக்கு மேலே பயங்கர
சப்தத்துடன் ஒரு இயந்திரம் பறந்து போனது . சப்தம் என் காதை துளைத்து
என் மூளையை என்னவோ செய்தது . நான் மிரண்டு போனேன் .(Drone).
பயம் வந்தது . வேகமாக ஓடினேன் .சீக்கிரம் தண்ணீர் குடிக்க வேண்டும் .
எனக்கு வயது ஆகி விட்டது . அது எனக்கு தெரியும் .
ரோடு .
பக்கவாட்டில் ஒரு பெரிய கட்டிடம் . அதன் காவலாளி தன் இடுப்பில் இருந்து
துப்பாக்கியை எடுத்தான்.
நான் உண்மையில் ஒரு சாது ...!
எனக்கு ஆபத்து வந்து விட்டது என்பதை உணர்ந்தேன் .
எனக்கு வேறு வழி தெரிய வில்லை . அந்த கவலாளியை நோக்கி ஓடினேன் .
என் கையினால் அவனை தூக்கி வீசி எறிந்தேன் . அவன் சாய்ந்து விட்டான் .
அவன் மயங்கி விழுந்து இருக்கலாம் .
அல்லது
அவன் இறந்து இருக்காலம் .
நான் மீண்டும் ஓடினேன் ...!
அட ...
இவ்வளவு சொல்லி விட்டேன் ...
என் பெயரை சொல்ல வில்லையே ...?
என் பெயர் ...
என் பெயர்....
அரிசிக்கொம்பன் ...!!!
பி .கு 01 : நான் தந்தம் உள்ளவன் . மீண்டும் வாசிக்கவும் .
பி .கு . 02 : இந்த கதையை சொல்லுவது யார் என்று கடைசி வரை
வராது .
ஆம் ...! யானை ...!!
R. சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் 03-06-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!