Friday, 29 September 2023

 


                          இசம்ஸ் 

சிறுகதை 038/2023                                                                                    30-09-2023


மார்க்ஸ் யார் இவர் ...?

ஏங்கெல்ஸ் யார் இவர்....??

இவர்களை பற்றி தெரியாதவர்கள் இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை 

இல்லை. 

இவர்கள் கம்யுனிஸ்ட் .

கம்யுனிஸ்ட் அறிக்கை வெளி இட்டவர்கள் .

தொழிலாளர் வர்கமே ஆட்சி செய்ய வேண்டும் என அழுத்தம் 

திருத்தமாக சொன்னவர்கள். 

மார்க்ஸியம் தெரிய விட்டாலும் அதை படியுங்கள். அவர்கள் சோசியல்-

இசம் பற்றி பேசினார்கள் . இன்று உலக அளவில் மார்க்ஸியதிற்கு 

வெற்றி கிடைக்க வில்லை என்றாலும் சமூக மற்றதிற்கான "கரு "

மார்க்ஸியத்தில் மட்டுமே உண்டு. நான் மார்க்ஸியத்தை ஏற்று 

கொண்டாலும் எனக்கு அவர் மீது சில விமர்சனங்கள் உண்டு. அவர் 

இந்தியாவை பற்றி எழுதிஉள்ளது சரி அல்ல . பிரிட்டிஷ் இந்தியாவை 

இன்பம் தரும் அழிவிற்கு கொண்டு செல்கிறது என்றார். மேலும் 

பசு மற்றும் குரங்கை (ஹனுமன் ) வழிபடுபவர்கள் காட்டு மிராண்டி 

ஆகவே இருக்க வேண்டும் என்றார். இது தவறு. 2 நூற்றாண்டுகள் 

சென்று விட்டாலும் இப்போதும் இந்தியர்கள் பசுவை மற்றும் 

குரங்கை (ஹனுமன் ) வழி பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் .

நாம் இன்றும் காட்டு மிராண்டிகளா ...? நம்து கலாசாரம் , பண்பாடு ,

வேதம் , உபநிசத் போன்றவற்றை அவருக்கு தெரியாமல் போய் விட்டது .

மார்க்ஸியதிற்கு பிறகு வருவோம் :

இன்று இளைஞர்கள் " செக்குவாரா " யார் என்று தெரியாமலே 

அவருடைய "டீ ஷர்ட் " போட்டு கொள்கிறார்கள் . 

அது இருகட்டும் . 

நாம் பெரியார் மற்றும் அம்பேத்கரை பற்றி பேச வேண்டும் . புரட்சிகர 

இயக்கங்கள் இவர்களை புரட்சியாளராக கருதிகிறார்கள் .

மார்க்ஸ் படத்துடன் இவர்கள் படத்தை போடுகிறார்கள் .

                                            பெரியரிசம் 

                                            அம்பேத்கரிசம் 

என்று ஒன்றும் இல்லை .

பெரியார் யார் ...?

ஜாதி ஒழிப்பு போராட்டம் நடதியவர். ஜாதி ஒழிப்பு என்பதை விட 

பிராமணர் எதிர்ப்பே இவரது கொள்கை. இன்று கிராம்ங்களில் 

தீண்டாமை உயர் ஜாதி இந்துகளால் கடை பிடிக்க படுகிறது . இது பற்றி 

வைக்கம் வீரர் எதுவும் பேசியது இல்லை. இது பற்றி நீதி கட்சியோ 

அல்லது திராவிடர் கழகமோ பேசியது கிடையது. பெரியார் ருசியா சென்று 

வந்த பின் சமதர்ம சமூகம் பற்றி பேசினார் . நேரு கண்டனம் செய்ததால் 

கொள்கையை மாற்றி கொண்டார். சுய மரியாதை , தன்மானம் மற்றும் 

மாநில சுய ஆட்சி பற்றி பேசினார் . மேலும் ஆகஸ்ட் 15-யை " துக்க தினமாக "

கொண்டாட சொன்னார். விடுதலைக்கு பிறகு தி .க . எந்த சீர்திருத்தமும் 

செய்ய வில்லை. அதன் மதிப்பு மறைந்ததது .பின் தனது 72-வது வயதில் 

26 வயது உடைய மணியம்மையை மணந்தார் . அண்ணாவிக்கு இது ஏற்று 

கொள்ள முடிய வில்லை. அதற்கு தனக்கு பிறகு தன் சொத்தை காப்பாற்ற 

ஒருவர் வேண்டாமா ? என பெரியார் கேட்டார். ஏன் ...? தான் தலைவராக 

இருந்த தி .க .விற்கே எழுதி வைக்கலாமே ...? ?

அடுத்து அம்பேத்கர் . இவர் நம்து அரசியல் சாசன வரைவு குழுவின் 

தலைவர் . இட ஒதுக்கிடே அவர் லட்சியம் . ஜாதியை ஒழிக்க வேண்டும் 

என்றால் பொருளாதார அடிபடையில் தான் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

இதை கண்டும் காணாமலும் விட்டு விட்டார். மேலும் இட ஓதிக்கிடு 10

வருடங்களுக்கு தான் செல்லுபடியாகும் என அரசியல் சாசனத்தில் 

எழுதி இருந்தார். ஆனால் இத்தனை வருடங்களாக தொடர்வது யாரால் ..???

சிந்திக்க வேண்டும் . 

அரசியல் கட்சிகள் இடஒதுக்கீடு விஷயத்தை வாக்கு வங்கி என செயல் 

படுகின்றனர். இது கேவலம் . அசிங்கம். அபத்தம் .

பெரியார் மற்றும் அம்பேத்கர் வலது சாரி சீர்திருத்த வாதிகள் . இவர்கள் 

புரட்சியாளர்கள் இல்லை. மக்களை வெகு காலம் ஏமாற்ற முடியாது . 

               மார்க்ஸ்-க்கு நிகர் பெரியார் இல்லை ...!

               மார்க்ஸ் -க்கு நிகர் அம்பேத்கர் இல்லை ...!!

              மார்க்ஸ் -க்கு நிகர் மார்க்ஸ் மட்டுமே ...!!!



   மார்க்ஸிசம் ஒன்றே புரட்சிகரமானது...! 


R. சத்திய நாராயணன்       சின்ன சேவகன்         30-09-2023

                       

 


          இரு உண்மை சம்பவங்கள் .. ! !

சினிமா கதாநாயகன் ஒரு முறை மன நல மருத்துவரிடம் சென்றார்.

அவரது முறை வந்ததும் உள்ளே சென்றார். மருத்துவர் அவரை உட்கார 

சொன்னார். பின்பு என்ன பிரச்சனை என்று கேட்டார். 

அவ்வளுவுதான் . ஓ என்று ஆழ ஆரம்பித்து விட்டார். மருதுவருக்கு 

ஒன்றும் புரிய வில்லை. பின்பு அவர் அது தான் என்னிடம் வந்து 

விட்டீர்களே ...? இனி கவலை ஏன் என்று கேட்க நாயகன் ஓ ஓ வென 

அழுதார். பின்பு அழுகையை சற்று குறைத்து கொண்டு " டாக்டர் 

நான் நிம்மதியாக இல்லை . சதா அழுதுகொண்டே இருக்கிறேன் .

எனக்கு மனசோர்வு வந்து உள்ளது . மிக ஸ்ட்ராங்க் மத்திரைகள்

தாங்கள். " என சொன்னார். மருத்துவரோ   உங்களுக்கு ஒரு 

பிரச்சனை-யும் இல்லை . உங்களுக்கு மாத்திரை தேவை இல்லை .

நான் ஒரு சிகிச்சை சொல்கிறேன் . அதன் படி நடங்கள் . நகரத்தில் 

சார்லி சாப்ளின் படம் ஓடுகிறது . போய் பாருங்கள் . சிரித்து சிரித்து 

நீங்கள் நலமாகி விடுவீர்கள் என்றார். 

அவ்வளவு தான் நாயகன் திரும்பி ஓ ஓ வென பெரிதாக ஆழ ஆரம்பித்து 

விட்டார். விக்கி விக்கி , தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்து விட்டார் .

டாக்டர் குழம்பி போய் நான் தான் உங்களுக்கு மண்சோர்விலிருந்து 

விடு  பட வழி சொல்லி விட்டேனே என்றார்.

நாயகன் ...சற்று அழுகையை குறைத்து பேசினார் .

                   " நான் தான் அந்த சாட்சாத் சார்லி சாப்ளின் ..!"


                                               ??? ??? ???

சிரிக்க வைத்தவன் இப்போது      அழுகிகிறான் ...!

                                                       சம்பவம் -02 

ஒரு முறை அந்நிய ஊரில் சார்லி சாப்ளின் மாறு வேட போட்டி நடந்தது .

ஊர் எங்கும் போஸ்டெர்கள் . சார்லி சாப்ளின் வேஷத்தில் பலர். நம் 

சார்லி சாப்ளினிக்கும் ஒரு ஆசை . இந்த போட்டியில் தாமும் கலந்து 

கொள்ள விரும்பினார். 

ஒவ்வொருவரும் 3 நிமிடங்கள் சார்லி சாப்ளின் போன்று நடிக்க வேண்டும். 

வரிசியாக எல்லோரும் நடித்து விட்டு வந்தார்கள் . சார்லி சாப்ளின் (ஒரிஜினல்)

முறை வந்தது . 3 நிமிடம் நடித்தார் .

போட்டி முடிந்து விட்டது .

பரிசு அளிப்பு விழா தொடங்கியது . சார்லி சாப்ளின் (ஒரிஜினல் ) குஷி 

ஆகி விட்டார். 


                                     முதல் பரிசு -   சார்லி சாப்ளினுக்கு அல்ல ...!

                          இரண்டாம் பரிசு-   சார்லி சாப்ளினிக்கு அல்ல ...!!

                          மூன்றாம் பரிசு  -    சார்லி சாப்ளினுக்கே (ஒரிஜினல் )


                            நகலக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசு.....!

                            அசலுக்கு    மூன்றாம் பரிசு....!!!

                           இது தான் விதி ...!

                          இது தான் வாழ்க்கை ...!!

                          இது தான் உலக நியதி ...!!!


             உண்மை சுடும் ...!

R . சத்திய நாராயணன்       சின்ன சேவகன்                       30-09-2023

Friday, 22 September 2023

 

                மாபெரும் போராட்டம் 

                                                      ( பாகம் -02)                    23-09-2023

போராட்டாம் தமிழகம் தழுவியதாக மாறியது .பல ஊர்களில் 

கண்டன ஆர்பாட்டம் , கண்டன பேரணி மற்றும் அடையாள வேலை 

நிறுத்தம் என்று போராட்டம் குபு குபு என பரவியது .போராட்டம் தீ என 

பரவியது . நான் திருப்புரில் 1000 கணக்கான தொழிளார் மத்தியில் 

நன்கு பேசினேன் . உண்மையில் வீர உரை ஆற்றினேன் . புரட்சி 

பற்றி பேச வில்லை. தொழிலாளர்கள் நான் CPI அல்லது CPMயை 

சார்ந்தவன் இல்லை என்று தெரிந்து இருந்தாலும் என் பேச்சை மிகவும் 

விரும்பினார்கள் . நான் அரசியல் வித்யாசம் பார்க்காமல் தொழில் 

சங்க ஒற்றுமை பற்றி மட்டுமே பேசினேன் . நல்ல கரவொலி . எனக்கு 

அது தெம்பை கொடுத்தது .இப்படி இருக்கும் போது ...

                                                          நான் 

                                                          இளங்கோ 

                                                          நாராயணன் 

ஒன்று கூடி ஒரு போராட்ட பிரச்சார குழுவை தொழில் சங்க மேலிடம் 

அமைத்து எங்களை பல ஊர்களுக்கு அனுப்பி வைத்தன்ர் .

                                                        நீலகிரி 

                                                        கோவை 

                                                        திருப்பூர் 

                                                        கரூர் 

                                                        ஈரோடு 

என ஊர் ஊராக சென்று போராட்டத்தின் அவசியம் குறித்து பேசி 

அவர்களை உற்சாக படுத்தினோம். இதில் விந்தை என்ன வென்றால் 

நாங்கள் மூவருமே புரட்சிகர இயக்கம் சார்ந்தவர்கள் . எனக்கு பின்னால் 

வந்தாலும் அவர்களின் அற்பணிப்பு அதிகம். மேலும் ஒரு தோழர் 

ரூல் -5 வாங்கினார். பால சுப்ரமணியம் ( இப்போது அவர் மறைந்து 

விட்டார் ).....அவரும் பின்னால் முழு நேர புரட்சியாளராக சேர்ந்தார்.

போராட்டம் போல் அரசியல் விழிபுணர்ச்சி தருவது வேறு ஒன்றும்

 இல்லை.  


                    நான் முழு நேர  புரட்சியாளன் என முடிவு எடுத்த பின்பு தான் 

இந்த போராட்டம் துவங்கியது. இப்போது நன்கு புரிகிறது . புரட்சிகர 

அமைபிற்கு தொழில் சங்கம் பற்றிய அறிவும் , அனுபவமும் இல்லை .

எங்கள் போராட்டதிற்கு எந்த வித வழிகட்டாலும் இல்லை . நாங்கள் 

நால்வரும் ( பால சுப்ரமணியம் ) தொழில் சங்க பணியிலே இருந்து 

இருந்தால் ஒரு உறுதியான கட்டுக்கோப்பான தொழில் சங்கதை 

மாநிலதில் உருவாக்கி இருப்போம் . நாங்களும் வேலை இழக்காமல் 

இருந்து அதாவது பகுதி நேரம் மட்டும் புரட்சிகர அமைபிற்கு வேலை 

செய்து இருந்தால் எங்களுக்கும்  வாழ்வை இழக்க நேர்ந்து இருக்காது .

புரட்சிகர தமிழக தொழில் சங்கம் கட்டி இருப்போம் . அமைபிற்கு 

எனக்கு எந்த வழிகாட்டுதலும் தர வில்லை . இல்லை அதனால் தர 

முடிய வில்லை . ஒரு பெரும் வாய்பை நழுவ விட்டோம் .இந்த மாபெரும் 

போராட்டத்தை அமைப்பு கண்டு கொள்ள கூட வில்லையே ...?

எங்கள் தொழில் சங்க அகில இந்திய அமைப்பு கமிட்டி தோழர் ராஜு 

அவர்கள் என்னை முழு நேர தொழில் சங்கவாதியாக வர சொன்னார் .

மாதாமாதம் சம்பளம் வந்து விடும் என உறுதி அளித்தார் . அட கடவுளே ..!

நான் ஏற்கனவே முடிவு எடுத்து இருந்ததால் மன்னிக்கவும் என்று சொல்லி 

விட்டேன். இன்று நினைத்து பார்க்கிறேன் . அப்படி சென்று இருந்தால் 

கூட என் வாழ்வு இவ்வளவு மோசகமாகி இருக்காது . என்ன செய்ய ...?

அப்போது நான் என் அமைப்பின் மீது முழு நம்பிக்கை வைத்து இருந்தேன் .

ம் ம்....

போராட்டம் முடிவுக்கு வந்தது .ஒரே ஒரு மன்னிப்பு கடிதம் கொடுக்க 

சொல்லி என் தொழில் சங்கம் கேட்டு கொண்டது . நானும் சம்மதம்  

தெரிவித்தேன் . பணி நியமன உத்தரவு வந்தது . எனக்காக

ஆயிரகணக்கான தொழிலாளர் போராடி பெற்ற வெற்றி . நான்

 அவர்களுக்காகவே பணியில் சேர்ந்து ஒரு மாதம் வேலை செய்தேன் .

தொழில் சங்கமும் , தொழிலாளர்களும் என்னை தனி இடத்தில் வைத்து 

பார்த்தனர். 


ஒரே ஒரு மாசம் .

நான் வேலைக்கு முழுக்கு போட்டேன் . நான் என்ன செய்கிறேன் என்ற 

நினைப்பே எனக்கு வரவில்லை. எல்லாம் வீதி . நியதி .

கடைசியில் நாங்கள் நால்வரும் பணியை துறந்தோம் ...!

இது தவறான முடிவு.

எங்களை தொழில் சங்கதிலயே பணி செய்ய சொல்லி இருக்க வேண்டும் .

அதிகார வர்கத்தின் எதிராக போராடிய போது தான் தொழில் சங்க 

ஒற்றுமை மற்றும் அவர்களின் போராட்ட குணம் மற்றும் அற்பணிப்பை

முழுதாக உணர்தேன் .


நான் சார்ந்த அமைபிற்கு தொழில் சங்க போராட்டம் பற்றி எந்த புரிதலும் 

இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். 


                                                    என் போராட்டம் 

                                                    மாபெரும் போராட்டம் 

                                                    கடைசியில் நாங்கள் நால்வரும் 

                                                    மத்திய அரசு பணியை துறந்தோம் ..!

                                                    மாபெரும் தவறு ...!!


             மாபெரும் போராட்டம் 

                         

             மாபெரும் வெற்றியே ...!!! ! 


R .சத்திய நாராயணன்      சத்யன்     ஸ்ரீ விவேக்       சின்ன சேவகன் 

                                                      23-09-2023
                          


 


                   மாபெரும் போராட்டம் 

சிறுகதை 35/2023                                பாகம் - 01                               23-09-2023    


                                                    நிர்வாகமே நிர்வாகமே    

                                                    நிர்வாகமே நிர்வாகமே 

                                                   காட்டு தர்பார் நிர்வாகமே 

                                                  காட்டு தர்பார் நிர்வாகமே 

                                                   தோழர் சத்திய நாராயணனின் 

                                                   தோழர் சத்திய நாராயணனின் 

                                                   வேலை நீக்க உத்தரவை 

                                                    வேலை நீக்க உத்தரவை 

                                                   வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு 

                                                    வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு 

                                                  அனுமதியோம் அனுமதியோம் 

                                                  அனுமதியோம் அனுமதியோம் 

                                                  காட்டு தர்பார் நிர்வாகதை 

                                                  காட்டு தர்பார் நிர்வாகதை 

                                                 அனுமதியோம் அனுமதியோம் 

                                                 அனுமதியோம் அனுமதியோம் ...!

ஆர்பாட்ட முழக்கங்கள் விண்ணை தொட்டன.உணர்ச்சி பெருக்கும் 

அற்பணிப்பும் கொண்ட தொழில் சங்க தலைவரும் குன்னூர்  அலுவலக 

பெண்கள் அனைவரும் எரிமலை என வெடித்து கோஷம் செய்தார்கள் .

இது துவக்கம் தான் . இந்த ஆர்பாட்டத்தின் பின்னணி என்ன ..? வேலை 

நீக்க உத்தரவை பெற்றது சாட்சாத் நானே தான் .

ஆம். 

நான் தான் சத்திய நாராயணன் .தொலைபேசி இலாக்காவில்  3 மாதம் 

பயிற்சி பெற்று 1982-இல் நிரந்தரம் ஆனேன் . நான் வேலையில் சுறுசுறுப்பாக

இருப்பேன் .நன்கு உழைத்தேன் . எனது வேகம் மேலதிகரிகளுக்கு

 ஆச்சர்யியமாக இருந்தது . ஆனால் நான் வேலை செய்யும் பொழுதே 

சக ஊழியரிடம் கேலியும் , கிண்டலுமாக அரசியல் பேசுவேன்.எனக்கு

 டிபார்ட்மெண்ட் மாற்றம் வந்தது . பிரச்சனை ஆரம்பித்தது . பிரிட்ஷ்

 காலத்தில் இருந்த " மூவ்மென்ட் ரிஜிஸ்டர் " பழக்கதிற்கு வந்தது . யார்

 வெளியே போனாலும் அதில் காரணம் , நேரம் ஆகியவற்றை பதிவு செய்ய 

வேண்டும் . நான் டீ குடிக்க போகிறேன் என்று எழுதி செல்வேன் . ஆனால் 

நான் பெண்கள் சிறுநீர் கழிக்க சென்றால் அதையும் எழுதவேண்டுமா ?

என கேள்வி கேட்டேன் . பெண்கள் ஆதரவு கிடைத்து அவர்கள் அதில்

 எழுதுவதை அவர்களே எழுதுவதை விட்டு விட்டனர் . 

இது முடிந்து பல மாதங்கள் ஓடி போனது . ஒரு உயர் அதிகாரி எங்களுக்கு 

வந்தார். பெயர் அருமை சின்னான் . வயதானவர். மீசையை முறுக்கி 

விட்டு இருப்பார். நான் எப்போதுமே அலுவலகம் 15 நிமிடங்களுக்கு முன்பே 

வந்து விடுவேன் . ஆம். நிதானமாக நான் ஒரு சிகெரேட் குடிப்பேன். 

புதிய மேல் அதிகாரி காலையில் வெளியே நின்று கொண்டு இருப்பார்.

நான் எப்போதும் போல் சிகெரேட் குடிப்பேன். இது அவரை ரொம்ப 

பாதித்தது . நான் அவமரியாதை செய்வதாக நினைத்து கொண்டார். 

ஆனால் எனக்கு அப்படி எல்லாம் எண்ணம் போகவில்லை. தம் அடிப்பது 

ஒரு பழக்கமே . 

அதிகரிகளுக்கு ஊழியரை பற்றி பேசுவது தான் அவர்கள் பொழுது போக்கு.

என்னை பற்றி எந்த அதிகாரி-யும் நல்ல எண்ணம் வைத்து இருக்க வில்லை .

காரணம் எனது பேச்சு .அருமை சின்னானுக்கு என் மீது ஏனோ கோபம் .

என்னை பழி வாங்க நினைத்தார் . அவர் மேல் அதிகாரி என்னை ....அழ 

வைக்க எண்ணிஉள்ளார் . ஒரு நாள் மதியம் எனக்கு ஒரு மெமோ கொடுத்து 

அனுப்பினார்.

                                              அது ரூல்-5 ...!

                                              அதன் படி எந்த காரணமும் 

                                              காட்டாமல் வேலை நீக்க உத்தரவை 

                                             வழங்கினார் . அவரால் என் வேலை பற்றி 

                                             குற்றம் சுமத்த வாய்ப்பு இல்லாததால் 

                                             இந்த கொடிய ரூல் 5....!!! !!

அவரின் நோக்கம் அவர் காலில் விழுந்து வணுங்குவேன் என கருதினார் 

போல. நான் அவரை சந்திக்க வில்லை. இந்த உத்தரவை எங்கள் தொழில் 

சங்க செயலரிடம் ( திரு .கோபால் ) கொடுத்தேன் . அவர் அதிர்ந்து போனார் .

அவர் அவரது மேல் நிலை தோழர்களிடம் பேசி விட்டு நாளை மாலை 

ஆர்பாட்டம் என தெரிவிதார். அந்த ஆர்பாட்டதின் கோஷங்களை தான் 

நீங்கள் படித்தீர்கள் .ஆர்பாட்டத்தை எதிர் பார்க்காத அவர் கலங்கி விட்டார். 

ஆர்பாட்டங்கள் தொடர்ந்தன . அருமை சின்னான் கதி கலங்கி தினமும் 

அலுவலகத்திற்கு ஒரு சூட் கேஸில் அரிவாள் கொண்டு வருவதாக நான்

 கேள்வி பட்டேன் . என்னை கண்டால் அவருக்கு பயம் . நான்கு நாட்களுக்கு 

பிற்கு அடையாள வேலை நிறுத்தம் . அதிகாரி அசைந்து கொடுக்க வில்லை .

பிறகு என்னுடன் வேலை பார்த்த 2 தோழர்களுக்கும் ரூல் -5 கொடுக்க பட்டது .

போராட்டம் பெரிதாகி கொண்டே போனது . தொலை பேசி இலக்காவில் 

தோழர்கள் உள்ளே நுலைந்து கோஷம் போட்டார்கள் . எந்த தொலை பேசியை 

எடுத்தாலும் போராட்ட கோஷங்களே கேட்கும். கூன்னூர் மற்றும் ஊட்டி , பிறகு 

கோத்தகிரி மற்றும் கூடலோர் பகுதிகளில் போராட்டம் பரவியது. 

மாவட்ட அமைப்பாளர் தோழர் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். நீலகிரி 

மாவட்டம் முழுக்க வேலை நிறுத்தம் நடைபெற்றது. எல்லோரும் ஒரே ஒரு 

தனிமனிதனின் சுதந்திற்காக போராடினார்கள் . அற்பணிப்பு 100%.

போராட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் போலீஸ் பட்டாளம் குவிந்து 

இருந்தது . கண்டன பேரணியும் கண்டன கூட்டமும் நடந்தன . நான் கண்டன 

கூட்டதத்தில் பேசினேன் . நான் புரட்சி பற்றி எல்லாம் பேசவில்லை.

 தொழிலாளர்  ஒற்றுமை மற்றும் தொழில் சங்க போராட்டங்கள் பற்றியே 

பேசினேன் . பயங்கர கர ஒலி .போராட்டம் நீண்டு கொண்டே போனது .

தமிழ் நாட்டில் ஆங்காங்கே அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது .

ஆர்பாட்ட கோஷங்களும் தமிழகம் எங்கும் எதிர் ஒலித்தது. தொழில் சங்க 

பத்திரிகை என்னை ஒரு தீவரவாதி என்று தலை அங்கம் எழுதி ...ஆனாலும் 

போராட்டதிற்கு ஆதரவு செய்தனர். 

மாதங்கள் ஓடின. 

தொழில் சங்க தலைவர்கள் என் வீட்டிற்கு வந்து சம்பள பணத்தை கொடுத்து 

விட்டு போனார்கள் . இங்கு ஒன்று சொல்லி கொள்ள பிரியபடுகிறேன் .

CPI & CPM தோழர்களுக்கு இருந்த அக்கறை கூட CPI- ML அமைப்பிற்கு 

துளியும் இல்லை. ஆனால் நான் அதை அப்போது பெரிது படுத்த வில்லை.

அரசியல் வேறாக இருந்தாலும் தொழில்சங்கம் என்றால் தொழிலாளர் 

ஒற்றுமையே பெரிது .நான் சார்ந்து இருந்த புரட்சிகர அமைப்பு எனக்கு

 ஏதாவது வேண்டுமா ...? என சம்பரயாதமாக கூட கேட்க வில்லை . அது 

மட்டும் அல்ல . பெரிய தொழில் சங்க போராட்டம் நடைபெறுகிறது ....அதற்கு 

வழிகாட்ட முன் வரவில்லை. தொழில் சங்க போராட்டாம் என்றால் அதில் 

புரட்சி இருக்காது என்று நினைத்து விட்டார்கள் போல . இந்த சமயத்தில் 

தான் மத்திய கமிட்டி என்னை முழுநேர புரட்சியாளராக வார சொன்னது .

நான் எந்த விட முன்யோசனை இன்றி சம்மதம் தெரிவிதேன் . அப்போது 

அகில இந்திய தொழில் சங்க தோழர் என்னை முழுநேரமாக பாணியாற்ற 

சொன்னார். கூடவே மாதம் தோறும் சம்பளம் கொடுத்து விடுவோம் என 

என்னை கேட்டு கொண்டார். நான் ஏற்கனவே முடிவு எடுத்து இருந்ததால் 

அந்த வாய்ப்பை இழந்தேன் . 

போராட்டம் பரவியது . எரிமலை என தமிழ் நாடு முழுவதும்  பரவியது .

தொழிலாளர்கள் பொங்கி எழுந்தனர். என்னை மையமாக வைத்து 

நடை பெற்ற போராட்டம் குபு குபு என பரவியது 

போராட்டம்               தொடர்கிறது ...!


R .சத்திய நாராயணன்                                                          23-09-2023 

                     சத்யன்           ஸ்ரீ விவேக்         சின்ன சேவகன்    




 

                                               

Friday, 15 September 2023

 


          சினிமாவின் கிளைமாக்ஸ் ...???

                 சிறுகதை 034/2023                                                            16-09-2023

சினிமா ...!

மாபெறும் கண்டு பிடிப்பு ...!! மிக சிறந்த பொழுது போக்கு சாதனம் .

முன்பு எல்லாம் படம் ரிலீஸ் ஆன தேதி-யில் முன் பதிவு செய்து 

சினிமா பார்ப்பது கலாசாரமாக இருந்தது . மக்கள் எல்லோரும் ...

தமிழ் நாடு முழுக்க படம் பார்ப்பார்கள் .குடும்பமாக சென்று பார்ப்பார்கள் .

சினிமா வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தது . தமிழ் சினிமா 1980-களில் 

உச்சம் தொட்டது .


                                        16 வயதினிலேயே

                                        சிகப்பு ரோஜாக்கள் 

                                        தண்ணீர் தண்ணீர் ...!    

                                         மூன்று முடிச்சு 

                                         மூன்றாம் பிறை 

                                        மூடுபனி 

                                        நெஞ்சதை கிள்ளாதே 

                                        7வது மனிதன் 

                                       கண் சிவந்தால் மண் சிவக்கும் 

                                        முதல் மரியாதை 

                                        வறுமையின் நிறம் சிவப்பு 

                                        நிழல்கள் 

                                        சிந்து பைரவி 

                                        அழியாத கோலங்கள் 

                                        முள்ளும் மலரும் 

                                        சலங்கை ஒலி 

                                        வேதம் புதிது 

                                        நாயகன் 

                                       அவள் அப்படிதான் 

இப்படி சொல்லி கொண்டே போகலாம்  இயக்குனர்கள் பாலசந்தர் , பாரதி 

ராஜா ,மகேந்திரன். பாலு மஹேந்திரா , ருத்ரயா பின் சங்கர் என்று

 சினிமாவை  அதன் உச்சத்திற்கு கொண்டு போனார்கள் .எல்லோரும் 

திரை அரங்கம் சென்று பார்போம் . இப்போது நிலை என்ன ..? சுமார் 

2,000 திரை அரங்குகள் கடந்த 10 ஆண்டுகளில் மூட பட்டு விட்டன..

தற்போது திரை அரங்கு சென்று பார்க்கும் கலாசாரம் தமிழ் நாட்டில் 

இல்லாமால் போய் விட்டது .

                                 காரணம் :       1. தொலை காட்சி 

                                                              2. CD 

எனவே சினிமா தொழில் இப்போது நசிந்து போய் உள்ளது .உங்களுக்கு 

நினைவு இருக்கலாம் . மை டியர் குட்டி சாத்தான் என்ற 3D படம் பெரும் 

வெற்றியை பெற்றது . காரணம் 3D படம் என்பதால் . நமக்கு கண்ணாடி

 கொடுத்து  விடுவார்கள் . திரையில் பார்க்கும் போது மிக பிரமிப்பாக

 இருந்ததது. ஆனால் அதற்கு பிறகு வந்த 3D படங்கள் படுதோல்வியை 

அடைந்தன . காரணம் தொழில் நுட்பம் போல் உள்ளடக்கம் இல்லை. 

தொழில் நுட்பம் + உள்ளடக்கம் மட்டுமே வெற்றி பெரும் . சரி ...வருங்கால 

சினிமா எப்படி இருக்கும் ...? நீங்கள் சென்னையில் உள்ள "பிர்லா கோளரங்கம் 

" போயி வானத்தை பார்த்து இருந்தால் நான் சொல்வதை எளிதாக புரிந்து 

கொள்ள முடியும் . 


                             ஆம். சீட் இருக்காது .படுத்து கொண்டே படம் பார்க்க வேண்டும் .

ஸ்கிரீன் நமக்கு தலை மேல் இருக்கும் . அகலம் -நீளம் கிடையாது , ஆழம் ,

 சுற்றுவட்டாரம் ,  ஆரம் மட்டுமே இருக்கும் .3D படம் போல் 7D படங்கள் 

இந்த நூற்றாண்டிலேயே வந்து விடும் . அது என்ன 7D ...?


                                          1. ஆரம் 

                                          2. சுற்றளவு 

                                         3. ஆழம் 

                                        4. மணம் 

                                        5. ஓசை 

                                       6. இயக்கங்கள் 

                                       7. முழுமை 

நான் 7 D படம் பார்த்தால் எப்படி இருக்கும் என சொல்கிறேன். படுத்து

 கொண்டே கண்ணாடி அணிந்தோ அல்லது அணியாமலோ பார்க்கலாம்.

 அர்ஜுனன் விட்ட அம்பு நேரே நம் கண் அருகில் வரும். ஒரு சில நிமிடங்கள் 

அந்த பாதிப்பில் இருந்த வெளி வார நேரம் ஆகும். பிறகு நாயகி மல்லிகை

 பூவை சூடினால் நமக்கு மல்லிகை வாசம் வரும் . மீன் கடையில் சண்டை 

என்றால் மீன் நாற்றம் நமக்கும் அடிக்கும். இதுவே 4 D ( மணம் ). அடுத்து 

நாயகன் குடை பிடித்து இடி -மின்னல் மழையில் சென்றால் ...நமது 

காதுக்கு அருகே இடி சப்தம் கேட்கும் . மின்னல் சில நொடிகள் நம் கண்ணில் 

படும். தலைக்கு மேல் விழும் இடி நம் தலையின் மேல் விழுவது போன்று 

இருக்கும். இதுவே 5D . அடுத்து நாயகன் ரயிலில் பயணம் செய்தால் நாம் 

நம் இருக்கையிலே ரயில் -ளில் போகும் போது ஏற்படும் சப்தம் மட்டும் அல்ல .

நம் படுக்கையே ரயில்-இல் போவது போன்ற உணர்வு ஏற்படும் . நமது

 இருக்கைகள் ஆட்டம் போடும் . அதே போல் பூகம்பம் திரையில் நடந்தால் 

நம் இருக்கைகள் அதிர்ச்சியை உணரும் . இது தான் 6 D. 


                                          அடுத்து 7 D ....?

                                          1 லிருந்து 6 வரை உள்ள D -கள் 2டோ அல்லது 

                                          அதற்கு மேற்பட்ட D -கள் சேர்ந்து 7D கொடுக்கும் .

                                          இது மிக குறைவாகவே பயன்படுத்த முடியும் .

                                            இதுவே முழுமை 7 D ....!

திரை அரங்கில் சப்தம் காதை அடைக்க செய்யும் . எல்லோரும் தங்கள் 

பரவச அனுபவத்தால் ....

                                                    ஆ ....!

                                                    ஆஆ ...ஆஆ ...!!

                                                    ஓஹோ ...ஓஹோ ...!!!

                                                   ஹேய் ...ஹேய் ...!!!!

                                                   ஐயோ ...ஐயோ ...!!! !!

                                                   O MY GOD .....!!! !!! 

                                                   அம்மாமாமா ....!!! !!! !

என்று கத்துவார்கள் . குழந்தைகள் முதலில் பயப்படும் . பின் பழகி போய் 

விடும் .

சினிமா வரலாற்றின் கிளைமாக்ஸ் உச்சம் . இது எனது கற்பனை தான் .

ஆனால் நிச்சயம் நடைமுறைக்கு வரும். உள்ளடக்கம் + தொழில் நுட்பம் 

இதை சாதிக்கும் . எப்போது என்று எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் 

நடக்கும். புதிய சினிமா அரங்குகள் கட்டபடும். இந்த சினிமாவை திரை 

அரங்கில் மட்டுமே சென்று அனுபிவிக்க முடியும் . மக்களுக்கு திரை அரங்கம் 

போகும் பழக்கம் வரும். 

சினிமாவின் உள்ளடக்கம் + தொழில் நுட்பம் புரட்சியை செய்யும் ...!

                                தியேட்டர் கலாசாரம் மீண்டும் வரட்டும் ...!


பி. கு.:  இது சரியாக எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது . ஆனால் 

              21-ம் நூற்றாண்டு முடிவதற்குள் .....

                நடந்தே தீரும் ...! ! ! ! ! ! ! 


R .சத்ய நாராயணன்     சத்யன்     ஸ்ரீ விவேக்      சின்ன சேவகன்   

                                                  16-09-2023










                    கதை அல்ல நிஜம் ...! 
                    சிறுகதை 033/2023                                                                16-09-2023

மூர்த்தி .

சிறந்த கம்யூனிஸ்ட் . மக்களுக்காக உழைப்பதில் பெருமிதம் கொண்டவன் .

மக்கள் சேவையே அவனது லட்சியம் . உயிர் . கடமை  எல்லாம் . மூர்த்தி 

அமைப்பில் சேர்ந்த போது அவன் கல்லூரி மாணவன் .பின் மத்திய 

அரசில் தொலைபேசி அமைப்பில் வேலை . கை நிறைய சம்பளம் .

அவன் அப்போது ஊட்டி அமைப்பின் செயலாளர் . பின் கோவை மாவட்ட 

அமைப்பு கமிட்டி உறுப்பினர் . தியாகம் , அற்பணிப்பு இதுவே அவனது 

தாரக மந்திரம் . ஆதரவாளர்களை சந்தித்து பேசி அமைப்பில் சேர்ப்பார். 

நல்ல அமைப்பாளராக செயல் பட்டார். இந்த தருணத்தில் அமைப்பு ...

அதாவது மத்திய கமிட்டி மூர்த்தியை முழு நேர புரட்சியாளன்- ஆக 

அழைத்தது . 


மூர்த்திக்கு சந்தோஷம் . அவனது உழைப்பால் அவனுக்கு அமைப்பில் 

கிடைத்த பதவி உயர்வு. கோவை மாவட்டத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றிய 

பின்பு மாவட்ட அமைப்பாளராக மதுரை-க்கு மாற்ற பட்டார். மூர்த்தி 

சந்தோஷமாக புதிய பொறுப்பை ஏற்று கொண்டான் . எந்த வித முன் 

யோசனை இன்றி மத்திய அரசு பணியை துறந்தான் . அவன் அதிகமாகவே 

சேவை செய்தான் .


புதிய இடம்....

புதிய பகுதி ...

புதிய தோழர்கள் ...


ஆர்வத்துடன் பணியாற்றினான் . அப்போது மதுரையில் அமைப்பு பெரிதாக 

ஒன்றும் இல்லை. மூர்த்தி அவன் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து

 இருந்தான். மதுரை என்றால் மதுரை மட்டும் அல்ல.

                                          புதுக்கோட்டை 

                                          திருவாடானை 

                                         தொண்டி 

                                        பரமக்குடி 

                                        ராமநாதபுரம் 

                                        தேவகோட்டை 

என தென் பகுதி முழுமைக்கும் பொறுப்பு . இப்படி இனிதே போய் கொண்டு 

இருந்த அவன் வாழ்வில் "சுனாமி " வந்ததது. மதுரை மாவட்ட கமிட்டி 

சிறப்பு கூட்டத்தை மாநில செயலாளர் கூட்டினார் . 

மூர்த்திக்கு "சனி " வந்ததது . மாநில செயலாளர் அவன்  மீது கூட்டத்திலயே 

விமர்சனம் எனும் அம்பை தொடுத்தார் . 


                 " மக்களுக்கு பொறுப்பாய் இருக்க வேண்டிய நீங்களே 

                   எப்படி மக்களுக்கு துரோகம்  செய்யலாம் ...? "

                  என தொடர்ந்தார் . மூர்த்திக்கு நெஞ்சு லப் -டப் என அடித்தது .

                   செயலர் தொடர்ந்தார் .

                  " நீங்கள் மக்கள் பணத்தில் இருந்து சிகெரேட் பிடிக்கிறீர்கள் ...

                    இது மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா ...? " என 

                   என் மீது குற்றச்சாட்டை அடுக்கி கொண்டே போனார் . 


                                                 மூர்த்தி -க்கு செம ஷாக் ...!

                                                பேச முடியவில்லை .....!!

செயலர் குற்றச்சாட்டுக்கு மூர்த்தி பதில் சொல்ல முடிய வில்லை . இது 

நடந்து 35 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது என்றால் செயலரை 

வாங்கு வாங்கு என்று வெளுத்து வங்கி இருப்பான் . ஆனால் அன்று அவனால் 

முடியவில்லை . கூட்டம் முடிந்த பின் தனியே சென்று குலுங்கி குலுங்கி 

அழுதான் . தான் கை நிறய சம்பளம் வாங்கும் வேலையை விட்டு விட்டு 

வந்தவன் .இது செயலருக்கும் தெரியும் . பின் எப்படி இவ்வாறு விமர்சனம் 

வைக்க முடிந்ததது ...?. 


                             மூர்த்தி-யை பொறுத்த வரை "தம் " அடிப்பது ஒரு பழக்கம் .

அவ்வளவு தான் . அமைப்பிற்கு தொந்தரவாக அவன்  இருந்ததது கிடையாது.

மற்ற தோழர்கள் எல்லாம் நன்றாகவே தோழமையுடன் பழகினார்கள்.

பணத்தை தியாகம் செய்து விட்டு வந்த மூர்த்தியை விமர்சனம் என்ற பேரில் 

மூர்த்தியின் மனதை சுக்குநூறாக ஆக்கி விட்டார் . "தம் " அடிப்பது

 தனிப்பட்ட சுத்தந்திரம் . மூர்த்திக்கு அந்த உரிமை உள்ளது. "தம் " அடிப்பது 

மக்கள் கலாச்சாரமே ...! அவனின் அற்பணிப்பு 100%. செயலர் விமர்சனம் 

தேவை இல்லாததது .வறட்டு தனம் . விதண்டா வாதம் . இந்த சம்பவத்தை 

மூர்த்தியால் வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாது . கூட்டதிற்கு பிறகு 

மூர்த்தி மிகவும் கஷ்டபட்டான் .


                                         ஆம் ...!

                                         அவன் "தம் " அடிப்பதை நிறுத்த வில்லை .

                                         பீடி குடிக்க ஆரம்பித்து விட்டான் .....!


பி. கு.   : "தம் "அடிப்பது தவறு அல்ல . ஒரு பழக்கம் . மேலும் அமைப்பு 

                 விதிகள் "குடிக்காரராக இருக்க கூடாது என்று தான் சொல்கிறது .

                "தம்" பற்றி எந்த விதியும் இல்லை. பின் தேவை அற்ற இந்த 

                 விமர்சனம் .....


                       ஏன் ...? 


R .சத்ய நாராயணன்      சத்யன்    ஸ்ரீ விவேக்      சின்ன சேவகன்   

                                                 16-09-2023

  

Friday, 8 September 2023

 


          முன் ஜாக்கிரதை முனுசாமி 
சிறுகதை 32/2023           09-09-2023 


நாம் வாழ்வில் பல பேரை சந்திக்கிறோம் . ஒவ்வாருவரும் ஒவ்வுறு

 விததத்தினர். எப்போதுமே டென்ஷன்-ஆக இருப்பவர்கள். எப்போதுமே 

பதட்டமும் , பதற்றமும் உடையவர்கள் . சிலர் எதை  கண்டும் பதறாமல் 

அமைதியாக இருப்பார்கள் . இடியே விழுந்தாலும் தமது அமைதியை 

இழக்க மாட்டார்கள் . சிலர் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி

 கொண்டே 

இருப்பார் . பஸ்-சில் பக்கத்து சீட் நபருடன் ஓயாமல்  வழ  வழ என்று பேசி 

கொண்டே போவார்கள் . நாட்டு அரசியல் வேறு . சிலர் தினமும்

 எதையாவது 

சாப்பிட ஹோட்டல்-க்கு செல்வர். அதில் விஷேஷம் என்ன என்றால் புது 

புது ஹோட்டல்-க்கு செல்வார்கள் .


                         நம் நாயகன் முனுசாமி-யும் " சாப்பாடு ராமர் " தான் . முற்றிலும் 

வித்யாசம் ஆனவர். காலை எழுந்த உடன் 2 கப் ஃபில்டர் காஃபி வேண்டும்

 .தினமும்  புதிது புதிதாக சாப்பிடுவார். நேற்று இட்லி என்றால் இன்று பூரி .

சில நேரம் இடியாப்பம் . தோசை என்று நாளும் வித்யாசமாக சாப்பிட்டால் 

தான் அவர் வண்டி ஓடும் . அவருக்கு வயது 40. திருமணம் ஆகவில்லை. 

சென்னையில் ஒரு தனி ரூமில் வசித்து வருகிறார். அவர் ஒரு மெடிக்கல் 

ரெப்ரசன்டேடிவ் . ஊர் சுற்றவது என்றால் ரொம்ப பிடிக்கும் . எனவே தன் 

வேலையை தானே தேர்ந்து எடுத்தார். இதில் ஒரு ரகசியம் உள்ளது . 

டாக்டர்-யை  பார்க்க சிறிது நேரம் காத்து இருக்க வேண்டும் . அதற்குள்

 பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று தம் + டீ முடித்து விடுவார். பார்பதற்கு 

சுமாராக தான் இருப்பார். ஆனால் அவருடைய பழக்க வழக்கங்கள் நேர் 

வித்தியாசம் . உதாரணத்திற்கு ரயில் 9 மணிக்கு என்றால் 7 மணிக்கே 

ரயில் நிலயம் வந்து விடுவார். அவருக்கு காத்து இருப்பது பிடிக்காது .

ஆனாலும் சீக்கிரம் வந்து ஒரு டீ அல்லது காப்பி சாப்பிட்டு விட்டு டாய்லெட் 

தன் மூட்டை முடிச்சுகளோடு  போயி தம் அடிப்பார்  . போலீஸ் கண்டு பயம் .

          சொன்னால் நம்ப மாட்டீர்கள் . இவருக்கு வடை , பஜ்ஜி , போண்டா

 என்றால் கொள்ளை பிரியம் .ஆனால் கிழங்கு அல்லது முட்டை போண்டா

 தான் இவரது விருப்பம் .வெளியே சாப்பிடுவதால் அவருக்கு அடிக்கடி 

வயற்று கோளாறு வரும். போகும். வயற்று கோளாறு இருக்கும் போதே 

ஒரு கடையில் கிழங்கு போண்டா ரெடி ஆவதை கண்ட இவருக்கு ஆசையை 

கட்டு படுத்த முடியவில்லை . ஒரு " எல்டோபர்" ( வயற்று போக்கை நிறுத்தும் 

மாத்திரை ) சாப்பிட்டு விட்டு 3 போண்டாக்களை சாப்பிட்டார். 


                  இந்த மாதிரி மனிதரை சந்திப்பது ஆபூர்வம் . பேதி மாத்திரையை 

சாப்பிட்டு விட்டு போண்டா சாப்பிடுவரை பார்த்தது உண்டா ...? இது மட்டும்

 அல்ல .ஐஸ் கிரீம் என்றால் உயிர். ஆனால் அது இவருக்கு ஒத்து கொள்ளாது .

ஆனால் சாப்பிட்டு விட்டு 3 " ஸிடெப்ஸில்ஸ் " சாப்பிட்டு விடுவார். மதிய 

வேளைகளில் விதவிதமான ஹோட்டல்-க்கு தான் செல்வர். ஒரு நாள் சௌத்

 இந்தியன் மீல்ஸ். ஒரு நாள் நார்த் இந்தியன் மீல்ஸ். இல்லை என்றால் 

சப்பாத்தி . ரொட்டி. நான் , புல்கா என ஆர்டர் செய்து ஒரு வெட்டு வெட்டுவார். 

சாப்பாடு மட்டும் அல்ல . இவருக்கு தம் -மும் மிகவும் பிடிக்கும் . தனக்கு 

ஹார்ட் அட்டாக் வந்து விடோமோ என அஞ்சி எப்போதும் தன் பர்சில் 

"சார்பிட்ரேட் " ( முதல் உதவி மாத்திரை ) வைத்து இருப்பார். நெஞ்சு வலி 

வந்தால் நாக்கிற்கு அடியில் அந்த மத்திரையை வைத்து கொள்ள வேண்டும் .

தனக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடோமோ என்ற அச்சம் . 


                            ஒரு நாள் அவர் நினைத்தது நடந்தே விட்டது . திடீர் என 

நெஞ்சு வலி . 2 மத்திரைகளை நாக்கின் அடியில் வைத்து கீழ்பாக்கம் 

மருத்துவ மனைக்கு ஆட்டோவில் சென்று விட்டார். டாக்டர் ஹார்ட் அட்டாக் 

என உறுதி செய்தார். அறுவை சிகிச்சை தேவை இல்லை என்று சொன்னது 

முனுசாமிக்கு ஆனந்தம் . 2 நாட்கள் ICU -வில் இருந்து ஜெனரல் வார்டு .

ஒரே வாரம் . பின் வீடு திரும்பினார். 


                       மருத்துவமனை-லிருந்து வெளியே வந்த உடன் டீ + தம் ...!

சிலருக்கு பட்டால் தான் புத்தி வரும்...!

சிலருக்கு பட்டாலும் புத்தி வராது ...!

இவர்களை

" கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் ..."


பி. கு. : முனுசாமிக்கு வயது 70 -ஆகி விட்டது . தற்போதும் எப்போதும் 

               போல டீ + தம் ...!


      R.சத்ய நாராயணன்    சத்யன்     ஸ்ரீ விவேக்       சின்ன சேவகன் 


                                                09-09-2023                                                            

 


                        மூளை சாவு ...!
சிறுகதை 031/2023                    09-09-2023

பல்நோக்கு பெரிய தனியார் மருத்துவ மனை . சென்னை .மிக பெரிய 

மருத்துவ மனை. அறுவை சிகிச்சை உட்பட பல நவீன வசதிகள் உள்ள மருத்துவ மனை .

E -பிளாக் . எமர்ஜென்ஸி . குமாரின் அம்மாவும் , அப்பாவும் கண்களில் 

நீர் பெருக பதட்டதுடன் உட்கார்ந்து உள்ளனர். குமாரின் அம்மாவால் துக்கம் 

தாங்க முடிய வில்லை. அப்பா , அம்மாவின் கையை பிடித்து அழுது கொண்டு 

இருக்கிறார் . 

நேற்று இரவு குமார் பைக்கில்  எல்மட் இல்லமால் வீட்டுக்கு திரும்பி வரும் 

போது , ஒரு லாரி பின்னால் இருந்து பைக்கில்  மோதியது .குமார் தூக்கி 

வீசப்பட்டான் . தலையில் நல்ல அடி. சுயஉணர்வு இழந்தான் .அக்கம் பக்கம் 

உள்ளவர் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு பெற்றோர்களுக்கு தகவல் 

சொல்ல பதறி அடித்து கொண்டு மருத்துவ மனை வந்து உள்ளனர் .பிறகு

 அழுது  கொண்டே டாக்டரை எதிர் பார்த்து இருந்தனர். காலை டாக்டர் 

வந்ததும் இருவரையும் தன் அறைக்கு வர சொன்னார். இருவரும் உள்ளே 

சென்றனர். டாக்டர் மெதுவாக ஆரம்பித்தார் .

           " பாருங்க அம்மா ...உங்கள் மகன் மூளை சாவு அடைந்து விட்டார்.

              இனி எந்த சிகிச்சை கொடுத்தாலும்  பிரயோஜனம் இல்லை. "

            : (அம்மா அழுது கொண்டே "...டாக்டர் எனக்கு ஒன்றும் புரியவில்லை "

           " அம்மா ..உங்க மகன் இறந்து விட்டான் .சுய உணர்வு போய்விட்டது .

              நீங்கள் கிள்ளினால் கூட அதை அவர் உணர மாட்டார். நாங்கள் 

             அவரை வேன்டிலேட்டெரில் வைத்து உள்ளோம் . 2 நாட்கள் தான் .

            பின் அவர் இறந்து விடுவார். இப்போது வேண்டிலேட்டரை  எடுத்து 

            விட்டால் அவர் உயிர் போகிவிடும்.. ஆனால் நீங்கள் நினைத்தால் 

            பலருக்கு உதவி செய்ய முடியும் ..."

           " என்ன டாக்டர் ...?"

           " உங்கள் மகனின் 

                                                 கண்கள் 

                                                 இருதயம்  

                                                சிறுநீரகம் 

                                                நுரையீரல் ......

         போன்றவற்றை நீங்கள் தானம் செய்யலாம் ..."

         " டாக்டர் வேறு வழியே இல்லையா ...?"

        " இல்லை மா ...முடிஞ்சு போச்சு ..."

         " டாக்டர் ...டாக்டர் ...!" அம்மாவால் தாங்க முடியவில்லை .

         " நீங்கள் நினைத்தால் பல பேருக்கு உதவி செய்யலாம் . நான் 

           மதியம் வருவேன் ...அதற்குள் சொல்லுங்கள் ..."

          " டாக்டர் நாங்கள் இருவரும் அவன் அருகே இருக்கலாமா ...?"

          " உங்கள் கவலை புரிகிறது ..தாராளமாக இருக்கலாம் ..."


மதியம் .

டாக்டர் இருவரையும் கூப்பிட்டு என்ன முடிவு செய்து உள்ளீர்கள் என 

கேட்டார்.

" டாக்டர் ...நாங்கள் உறுப்பு தானதிற்கு சம்மதிக்கிறோம்.." என விம்மி விம்மி 

அழுது கொண்டே சொன்னார். டாக்டர் ஒரு விண்ணப்பம் கூடுத்து அதில் 

இருவர் கையொப்பம் கேட்டார். அவர்கள் படிக்க கூட இல்லை. இருவரும் 

கை எழுத்து போட்டு கொடுத்தனர்  ..

" அம்மா நீங்கள் உங்கள் மகனை இழந்தாலும் நீங்கள் பல பேரை வாழ 

  வைத்து உள்ளீர்கள். இன்றே உங்கள் மகனின் இருதயம் எடுத்து வேறு 

  ஒருவருக்கு பொறுத்த போகிறோம் ....ரொம்ப நன்றி அம்மா ...!"


மறு நாள் :

டாக்டர் ..." அம்மா எல்லாம் முடிந்து விட்டது . உங்கள் மகனின் இருதயம் 

                    ஒருவருக்கு பொறுத்த பட்டுவிட்டது . சிறுநீரகம் 2 பேர்களுக்கு 

                    பொறுத்த பட்டுவிட்டது ..."

பாவம் குமாரின் அம்மா ...! அவள் உயிரான மகனை இழந்து விட்டாள் .

ஆனால் தன் மகனின் உருப்புக்கள் வேறு சிலரின் உயிரை காப்பாற்றி 

உள்ளதே என ஒரு சின்ன திருப்தி .

பாவம் குமாரின் அம்மா ...!!!


பி. கு : மூளை சிந்திக்கும் திறன் இழந்ததும் மூளை சாவு என்கின்றனர் .

              ஆனால் பிற உறுப்புக்கள்  2 தினங்கள் வரை உயிரோடு இருக்கும் 

             என்கிறார்கள் .மனிதனின் உயிர் எதில் இருக்கிறது ...? மூளையிலா

            அல்லது சிந்திக்கும் திறனில் உள்ளதா ...? மூளை சாவு எனும் நவீன 

            மரணம் என்ன சொல்கிறது ...? ஒருவன் சிந்திக்கும் திறன் இழந்ததும் 

           அவனுக்கு உயிர் போய் விடுகிறது. 

          அப்படியானால் உண்மை என்ன....?

          ஒரு மனிதன் உழைக்காமல் கூட வாழ்ந்து விட முடியும் .

          ஆனால் ஒருவன் ஒரு நொடி கூட சிந்திக்க முடியாவிட்டால் அவன் 

          உயிர் போய் விடுகிறது .


           ஏங்கெல்ஸ் கூட மார்க்ஸ் இறந்த போது " மார்க்ஸ் சிந்தனை 

           செய்வதை நிறுத்தி விட்டார் " என்று சரியாகவே கூறினார். 


                                        ஆம் ...!

                   சிந்திப்பவனே  மனிதன் ...!!

                                        சிந்திக்கவில்லை என்றால் அவன் ஜடம்/பிணம் ...!!!


R.சத்ய நாராயணன்              சின்ன சேவகன்      சத்யன்      ஸ்ரீ விவேக்   


                                                   09-09-2023                                                  

Friday, 1 September 2023

 


                                பிரசாதம்                                       

சிறுகதை :   030/2023               02-09-2023   

புரட்சிக்காரன் கோவிலுக்கு செல்ல பயங்கர   தைரியம் அவசியம் .குற்ற 

உணர்வு இல்லாமல் அச்சம் இன்றி கோவிலுக்கு செல்ல மிகுந்த துணிச்சல் 

வேண்டும் . முதன் முதலாக நான் சுய உணர்வின்றி " மன சிதைவு " நோய் 

இருந்த போது தான் கோவிலுக்கு சென்றேன் . சர்ச் , மசூதி ( சிறப்பு

 உரிமை பெற்று சென்றேன் ) . பின் சில வருடங்கள் கழித்து சர்ச்

 செல்வதை விட்டு

 விட்டேன். 

ஆம். 

என் சுய உணர்வு இல்லாத போது தான் முதன் முதலில் கோவிலுக்கு

 சென்றேன் .நோய் போனதும் என்னை நானே சுய பரிசீலனை செய்தேன். 

கடவுள் நம்பிக்கை , கோவில் செல்வது என் ரத்தத்தில் ஓடுகிறது என 

புரிந்து கொண்டேன் . என் புரட்சிகர கருத்துகளை நான் என்றுமே கை 

விட வில்லை .என் சுய உணர்வு , சுய நம்பிக்கை , சுய மன முடிவு ஆகிய 

காரணங்களுக்காக கோவில் செல்ல ஆரம்பித்தேன் .

எனக்கு நம் கோவில் மிகவும் பிடித்து இருந்தது . நீங்கள் கடவுளை 

வணங்காவிட்டாலும் கோவிலுக்கு செல்லலாம் .இந்த சுதந்தரம் வேறு 

மதங்களில் இல்லவே இல்லை. 

உபநிஷத் சொல்கிறது :

                                 நீ கடவுளை நம்புவது முக்கியம் அல்ல . ஆனால் 

                                 நீ சனாதன தர்மாவை கடைபிடிப்பதே முக்கியம் .


சனாதனம் என்றால் " அழிவு அற்றது " " நிரந்தரம் ஆனது " என்றே

 அச்சொல்லுக்கு பொருள் . "ஹிந்துத்வா " சக்திகளை "சனாதன சக்திகள் "

என யார் சொன்னாலும் அது தவறு. சனாதன தர்மாவில் ஜாதிகள் இல்லை. 

சரி ...நான் கோவிலுக்கு செல்கிறேன். கோவிலுக்கு செல்ல செல்ல அது 

நமது இடம் என்ற எண்ணமே மேல் ஓங்குகிறது . இது உண்மை. கோவில் 

உள்ளே நீங்கள் கடவுளை கும்பிடாமல் சும்மா உட்கார்ந்து இருந்தாலே 

நம் எண்ணம் ...கற்பனை ...எல்லாம் மாறுகிறது . சில வருடங்களுக்கு 

முன் நான் கதை எழுத கோவிலுக்கு செல்வேன். கற்பனை நன்கு வரும் .

இது பொய் அல்ல . நிதர்சன உண்மை.


சைட் அடிக்க கோவில் சென்றால் அதில் தவறு இல்லை. மனதில் நல்ல

எண்ணமே தோன்றும் .எல்லாவற்றை-யும் விடுங்கள் . எங்கள் வீட்டுக்கு 

அருகே ஒரு சாஸ்தா கோவில் உள்ளது . வியழான் மற்றும் சனி அன்று 

மாலை 6.40-க்கு தீப ஆராதனை காட்டிவிட்டு " பிரசாதம் " தருவார்கள் .

                                         

                                             பொங்கல் 

                                             புளிசாதம் 

                                             தயிர் சாதம் 

                                            ஏன் ...?

                                             ஃப்ரைடு ரைஸ் கூட தருவார்கள் . 


பிரசதாம் வாங்கி விட்டு வெளியே ஒரு திட்டில் உட்கார்ந்து சாப்பிடுவேன்.

                                           அம்மம்மா ...!

                                           அப்பப்பா ...!!

என்ன சுவை ...? நல்ல கேட்டரிங் தான் கொடுக்கிறார்கள் என்றால கூட 

அதன் ருசி தனி ருசி . ருசியோ ருசி . இது கடவுளுக்கு நைவைதியம் 

செய்வதால் தான் அதிக ருசியோ என எண்ணுவேன் . நான் பொய் சொல்ல

 வில்லை . எனக்கு இந்து மதத்தில் பிடித்தது " அன்ன தானம் " தான் . வருட 

வருடம் டிசம்பர் மாதத்தில் சனி மற்றும் ஞாயிறு ஐயப்ன் சேவா சமாஜம் 

அல்லது கோவில் சார்பாக அன்னதனாம் நடைபெறும் .


நான் பல திருமண விருந்து சாப்பாட்டை சாப்பிட்டு உள்ளேன் . ஆனால் 

அன்னதான ருசி நிசய்யம் வரவில்லை . நான் கடவுளுக்கு நைவைதியம் 

செய்வதால் தான் ருசி அதிகம் உள்ளது என்பது என் நம்பிக்கை . சத்யம் 

இது மூட நம்பிக்கை இல்லை. பிரத்யேக ருசி . பின் எந்த கோவிலுக்கு 

சென்றாலும் பிரசாதம் வாங்காமல் வார மாட்டேன். 


ஒரு முறை குடும்ப தகராறு காரணமாக நான் வீட்டில் சாப்பிட வில்லை 

ரூபாய் 20 -ல் வட பழனி சென்று மதிய உணவு சாப்பிட சென்று விடுவேன். 3

மாதங்கள் வட பழனி முருகனின் அன்னதானம் தான் எனக்கு. நான்

 நங்கநல்லோரில் மதியம் உணவு சில தடவைகள் சாப்பிட்டு உள்ளேன்.

மாங்காட்டில் அன்னதானதிற்கு என கான்கீரிட் மேசை மற்றும் நாற்காலி .

உட்கார்ந்தே சாப்பிடலாம் .


நான் இரண்டு ஆண்டுகளாக கோவில் செல்வதில்லை . எல்லாம் என் 

வாழ்க்கை முறை தான் காரணம் . நான் மாலையில் தூங்கி விடுவேன் 


. தவிர நான் M .A . சரித்திரம் படித்து 

வருகிறேன் ." யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் " என்ற 

காரணத்தால் ஒன்றே ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன் . நீங்கள் 

கோவிலுக்கு சென்று கடவுளை கும்பிடவிட்டாலும் பரவாயில்லை . ஆனால் 

கட்டாயாம் பிரசாதம் வாங்கி உண்டு பாருங்கள் .அவ்வளவு ருசியோ ருசி .


It is not Idealistic Consumption. But purely Materialistic Consumption...!!!


                                               கோவிலுக்கு செல்லுங்கள் ...!

                                               பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள் ...!!

                      ருசியோ ருசி ...!!!


                                                              சுபம் 


R .சத்ய நாராயணன்    சத்யன்         ஸ்ரீ விவேக்                   சின்ன சேவகன்   

                                                02-09-2023