Friday, 1 September 2023

 


                                 கோவில்                                   

சிறுகதை :   29/2023                 02-09-2023 

அன்பரே ...!

கொஞ்சம் நில்லுங்கள்.

கோவில் , கடவுள் எதிர்மறை சொற்கள் அல்ல .சிவப்பு சிந்தனையாளர்களும் 

நாத்திகவாதிகளும் இப்படிபட்ட சொற்களை எதிர்மறை சொற்கள்

 ஆக்கிவிட்டனர். விஞ்ஞானத்தை ஏற்று கொள்ளும் இவர்கள் , உளவியல் 

விஞ்ஞானா நிபுணர், மனோதத்துவ தந்தை என்று எல்லாம் அழைக்கபடும்   

" சிக்மெண்ட் ஃப்ராயிட் " சொல்லும் கருத்தை காது கொடுத்து கேளுங்கள் .


                              " மனித வாழ்வில் மரணம் என்று ஒன்று உள்ளவரை 

                                கடவுள் நம்பிக்கை என்பது இருந்தே தீரும் .."

அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை . கடவுள் இல்லை என்றால் கூட 

"கடவுள் நம்பிக்கை " என்பது இருந்தே தீரும் . 

அரசியலில் மதம் கூடாது என்பது தான் "மதசார்பற்றது ". இதற்கு அர்தம் 

மதம் கூடாது என்பது அல்ல. 

"இந்து " மதம் ...மன்னிக்கவும் இது மதம் இல்லை. இது ஒரு வாழ்க்கை முறை .

வாழ்க்கை நெறி .மற்ற எல்லா மதங்களுக்கும் சட்டம் உண்டு ...கட்டளைகள் 

உண்டு . அமைப்பாக உள்ளது . ஆனால் இந்துகளுக்கு என்று எந்த சட்டமும் 

இல்லை . அது அமைப்பாக்கபட்ட ஒன்றும் இல்லை.  நீங்கள் கோவிலுக்கு

 போகலாம் அல்லது போகாமல் இருக்கலாம் . உங்கள் விருப்பம் .நாம் 

கடவுளை வணங்கலாம் அல்லது வணங்காமல் இருக்கலாம் .இது தான் 

இந்து வாழ்க்கைநெறியின் சிறப்பு. மற்ற எந்த மதத்திலும் இல்லாதது .

நாத்திகம் பேசுவது உங்கள் உரிமை . விருப்பம் . 


புரட்சி முடிந்த நாடுகளிலும் நாத்திகம் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை .

ஸ்டாலின் இடித்த "சர்ச் " கள் எல்லாம் மீண்டும் கட்ட பட்டு விட்டன .

சீன ஒரு படி மேலே போயி " ஆன்மிகம் ஊக்குவிக்கபடும் " என்று தனது 

அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்து விட்டது. இதில் இருந்து 

என்ன தெரிகிறது ...? கடவுள் இல்லை என்றால் கூட கடவுள் நம்பிக்கை 

போகாது . கவனிக்க ஃப்ராயிட் சொன்ன விஷயம். 


ஒரு புரட்சிக்காரன் கோவிலுக்கு போகலாமா என்பது ஒரு பெரிய கேள்வி .

புரட்சிக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . ஏன் ...?

நமது சுதந்திர போராட்ட வரலாறை படித்தால் இது நன்கு புரியும் .

திலகர், அரவிந்தர், ராஜாஜி , காந்தி, வ.உ .சி , பாரதியார் ....என்று சொல்லி 

கொண்டே போகலாம். இவர்கள் சமயம் மற்றும் தேச பக்தியை தமது 

இரு கண்களாக பாவித்த்தனர் .இவர்களிடம் முழு அர்ப்பணிப்பு இல்லயையா ?

வாஞ்சி நாதன் பயங்க்ராவதி ஆனாலும் அவன் ஒரு காளி பக்தன் . அவன் 

" பாரத மாதா " வை வணங்குபவன் .கடவுள் நம்பிக்கை சுதந்திர

 போராட்டதிற்கு தடையாக இருக்கவில்லை . ஆன்மிகம் என்பது ஆன்மா 

பற்றியது . வேண்டும் என்றால் நத்திகவாதிகள் "மனம் " என்று சொல்லி 

பார்க்கட்டும் . நாட்டில் 1 % மட்டுமே நாத்திக வாதிகளாக உள்ளனர் என ஒரு 

புள்ளி விவரம் பார்த்த ஞாபகம் . 


அடுத்து ஒரு விஷயம் . "உபநிஷத் " " நீ கடவுளை நம்புவதும் , நம்பாமல் 

இருப்பதும் முக்கியம் அல்ல ....ஆனால் சனாதன தர்மாவை கடை

 பிடிக்கிறாயா என்பதே முக்கியம் " -இங்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் .

" சனாதனம் " என்றால் " நிரந்தரம் ஆனது ", " ஆரம்பம் முடிவு இல்லாதது "

என்றே அர்த்தம் . இதை கூட புரிந்து கொள்ளமால் " இந்துதுவா " சக்திகளை 

" சனாதன " சக்திகள் என்று சொல்வது அபத்தம் . நான் ஹிந்துத்வா அல்ல .

ஆனால் சனாதன தர்மாவை ( ஜாதிகள் இல்லை ) ஏற்று கொள்பவன் .

விஷயத்திற்கு வருகிறேன். 


                                   கோவிலுக்கு செல்வது ஒரு பழக்கமே ...!

                                   கடவுளை வணங்குவதும் ஒரு பழக்கமே ...!!


இந்துவிற்கு பல தெய்வங்கள் :


                                      முருகன் 

                                      சிவன் 

                                      மீனாட்சி 

                                      காமாட்சி 

                                      காயத்ரி 

நீங்கள் உங்கள் இஷ்டம் போல் எந்த கடவுளையும் வணங்காளாம் .நான் 

ஒரு கதையை தான் எழுத வந்தேன் . ஆனால் பிள்ளையார் பிடிக்க 

குரங்கு ஆனது போல் இது " சிறு கட்டுரை ஆகி விட்டது. எனவே கதையை 

நான் தனியாக எழுதுகிறேன் .

இப்போது ஒன்றே மட்டும் சொல்லி இந்த படைப்பை நிறைவு செய்கிறேன் 


                                  கோவில் ...!

                                  கோவில் ....!!

                                 கோவில் ....!!!

                                 செல்வது 

              இந்திய கலாச்சாரமே ...!
              மக்கள் கலாச்சாரமே ...!!


                                                       சுபம் 


ஆர்.சத்ய நாராயணன்    சத்யன்     ஸ்ரீ விவேக்     சின்ன சேவகன்   

                                                   02-09-2023

                                   

                                                        

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!