முன் ஜாக்கிரதை முனுசாமி
சிறுகதை 32/2023 09-09-2023
நாம் வாழ்வில் பல பேரை சந்திக்கிறோம் . ஒவ்வாருவரும் ஒவ்வுறு
விததத்தினர். எப்போதுமே டென்ஷன்-ஆக இருப்பவர்கள். எப்போதுமே
பதட்டமும் , பதற்றமும் உடையவர்கள் . சிலர் எதை கண்டும் பதறாமல்
அமைதியாக இருப்பார்கள் . இடியே விழுந்தாலும் தமது அமைதியை
இழக்க மாட்டார்கள் . சிலர் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி
கொண்டே
இருப்பார் . பஸ்-சில் பக்கத்து சீட் நபருடன் ஓயாமல் வழ வழ என்று பேசி
கொண்டே போவார்கள் . நாட்டு அரசியல் வேறு . சிலர் தினமும்
எதையாவது
சாப்பிட ஹோட்டல்-க்கு செல்வர். அதில் விஷேஷம் என்ன என்றால் புது
புது ஹோட்டல்-க்கு செல்வார்கள் .
நம் நாயகன் முனுசாமி-யும் " சாப்பாடு ராமர் " தான் . முற்றிலும்
வித்யாசம் ஆனவர். காலை எழுந்த உடன் 2 கப் ஃபில்டர் காஃபி வேண்டும்
.தினமும் புதிது புதிதாக சாப்பிடுவார். நேற்று இட்லி என்றால் இன்று பூரி .
சில நேரம் இடியாப்பம் . தோசை என்று நாளும் வித்யாசமாக சாப்பிட்டால்
தான் அவர் வண்டி ஓடும் . அவருக்கு வயது 40. திருமணம் ஆகவில்லை.
சென்னையில் ஒரு தனி ரூமில் வசித்து வருகிறார். அவர் ஒரு மெடிக்கல்
ரெப்ரசன்டேடிவ் . ஊர் சுற்றவது என்றால் ரொம்ப பிடிக்கும் . எனவே தன்
வேலையை தானே தேர்ந்து எடுத்தார். இதில் ஒரு ரகசியம் உள்ளது .
டாக்டர்-யை பார்க்க சிறிது நேரம் காத்து இருக்க வேண்டும் . அதற்குள்
பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று தம் + டீ முடித்து விடுவார். பார்பதற்கு
சுமாராக தான் இருப்பார். ஆனால் அவருடைய பழக்க வழக்கங்கள் நேர்
வித்தியாசம் . உதாரணத்திற்கு ரயில் 9 மணிக்கு என்றால் 7 மணிக்கே
ரயில் நிலயம் வந்து விடுவார். அவருக்கு காத்து இருப்பது பிடிக்காது .
ஆனாலும் சீக்கிரம் வந்து ஒரு டீ அல்லது காப்பி சாப்பிட்டு விட்டு டாய்லெட்
தன் மூட்டை முடிச்சுகளோடு போயி தம் அடிப்பார் . போலீஸ் கண்டு பயம் .
சொன்னால் நம்ப மாட்டீர்கள் . இவருக்கு வடை , பஜ்ஜி , போண்டா
என்றால் கொள்ளை பிரியம் .ஆனால் கிழங்கு அல்லது முட்டை போண்டா
தான் இவரது விருப்பம் .வெளியே சாப்பிடுவதால் அவருக்கு அடிக்கடி
வயற்று கோளாறு வரும். போகும். வயற்று கோளாறு இருக்கும் போதே
ஒரு கடையில் கிழங்கு போண்டா ரெடி ஆவதை கண்ட இவருக்கு ஆசையை
கட்டு படுத்த முடியவில்லை . ஒரு " எல்டோபர்" ( வயற்று போக்கை நிறுத்தும்
மாத்திரை ) சாப்பிட்டு விட்டு 3 போண்டாக்களை சாப்பிட்டார்.
இந்த மாதிரி மனிதரை சந்திப்பது ஆபூர்வம் . பேதி மாத்திரையை
சாப்பிட்டு விட்டு போண்டா சாப்பிடுவரை பார்த்தது உண்டா ...? இது மட்டும்
அல்ல .ஐஸ் கிரீம் என்றால் உயிர். ஆனால் அது இவருக்கு ஒத்து கொள்ளாது .
ஆனால் சாப்பிட்டு விட்டு 3 " ஸிடெப்ஸில்ஸ் " சாப்பிட்டு விடுவார். மதிய
வேளைகளில் விதவிதமான ஹோட்டல்-க்கு தான் செல்வர். ஒரு நாள் சௌத்
இந்தியன் மீல்ஸ். ஒரு நாள் நார்த் இந்தியன் மீல்ஸ். இல்லை என்றால்
சப்பாத்தி . ரொட்டி. நான் , புல்கா என ஆர்டர் செய்து ஒரு வெட்டு வெட்டுவார்.
சாப்பாடு மட்டும் அல்ல . இவருக்கு தம் -மும் மிகவும் பிடிக்கும் . தனக்கு
ஹார்ட் அட்டாக் வந்து விடோமோ என அஞ்சி எப்போதும் தன் பர்சில்
"சார்பிட்ரேட் " ( முதல் உதவி மாத்திரை ) வைத்து இருப்பார். நெஞ்சு வலி
வந்தால் நாக்கிற்கு அடியில் அந்த மத்திரையை வைத்து கொள்ள வேண்டும் .
தனக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடோமோ என்ற அச்சம் .
ஒரு நாள் அவர் நினைத்தது நடந்தே விட்டது . திடீர் என
நெஞ்சு வலி . 2 மத்திரைகளை நாக்கின் அடியில் வைத்து கீழ்பாக்கம்
மருத்துவ மனைக்கு ஆட்டோவில் சென்று விட்டார். டாக்டர் ஹார்ட் அட்டாக்
என உறுதி செய்தார். அறுவை சிகிச்சை தேவை இல்லை என்று சொன்னது
முனுசாமிக்கு ஆனந்தம் . 2 நாட்கள் ICU -வில் இருந்து ஜெனரல் வார்டு .
ஒரே வாரம் . பின் வீடு திரும்பினார்.
மருத்துவமனை-லிருந்து வெளியே வந்த உடன் டீ + தம் ...!
சிலருக்கு பட்டால் தான் புத்தி வரும்...!
சிலருக்கு பட்டாலும் புத்தி வராது ...!
இவர்களை
" கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் ..."
பி. கு. : முனுசாமிக்கு வயது 70 -ஆகி விட்டது . தற்போதும் எப்போதும்
போல டீ + தம் ...!
R.சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
09-09-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!