மூளை சாவு ...!
சிறுகதை 031/2023 09-09-2023
பல்நோக்கு பெரிய தனியார் மருத்துவ மனை . சென்னை .மிக பெரிய
மருத்துவ மனை. அறுவை சிகிச்சை உட்பட பல நவீன வசதிகள் உள்ள மருத்துவ மனை .
E -பிளாக் . எமர்ஜென்ஸி . குமாரின் அம்மாவும் , அப்பாவும் கண்களில்
நீர் பெருக பதட்டதுடன் உட்கார்ந்து உள்ளனர். குமாரின் அம்மாவால் துக்கம்
தாங்க முடிய வில்லை. அப்பா , அம்மாவின் கையை பிடித்து அழுது கொண்டு
இருக்கிறார் .
நேற்று இரவு குமார் பைக்கில் எல்மட் இல்லமால் வீட்டுக்கு திரும்பி வரும்
போது , ஒரு லாரி பின்னால் இருந்து பைக்கில் மோதியது .குமார் தூக்கி
வீசப்பட்டான் . தலையில் நல்ல அடி. சுயஉணர்வு இழந்தான் .அக்கம் பக்கம்
உள்ளவர் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு பெற்றோர்களுக்கு தகவல்
சொல்ல பதறி அடித்து கொண்டு மருத்துவ மனை வந்து உள்ளனர் .பிறகு
அழுது கொண்டே டாக்டரை எதிர் பார்த்து இருந்தனர். காலை டாக்டர்
வந்ததும் இருவரையும் தன் அறைக்கு வர சொன்னார். இருவரும் உள்ளே
சென்றனர். டாக்டர் மெதுவாக ஆரம்பித்தார் .
" பாருங்க அம்மா ...உங்கள் மகன் மூளை சாவு அடைந்து விட்டார்.
இனி எந்த சிகிச்சை கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. "
: (அம்மா அழுது கொண்டே "...டாக்டர் எனக்கு ஒன்றும் புரியவில்லை "
" அம்மா ..உங்க மகன் இறந்து விட்டான் .சுய உணர்வு போய்விட்டது .
நீங்கள் கிள்ளினால் கூட அதை அவர் உணர மாட்டார். நாங்கள்
அவரை வேன்டிலேட்டெரில் வைத்து உள்ளோம் . 2 நாட்கள் தான் .
பின் அவர் இறந்து விடுவார். இப்போது வேண்டிலேட்டரை எடுத்து
விட்டால் அவர் உயிர் போகிவிடும்.. ஆனால் நீங்கள் நினைத்தால்
பலருக்கு உதவி செய்ய முடியும் ..."
" என்ன டாக்டர் ...?"
" உங்கள் மகனின்
கண்கள்
இருதயம்
சிறுநீரகம்
நுரையீரல் ......
போன்றவற்றை நீங்கள் தானம் செய்யலாம் ..."
" டாக்டர் வேறு வழியே இல்லையா ...?"
" இல்லை மா ...முடிஞ்சு போச்சு ..."
" டாக்டர் ...டாக்டர் ...!" அம்மாவால் தாங்க முடியவில்லை .
" நீங்கள் நினைத்தால் பல பேருக்கு உதவி செய்யலாம் . நான்
மதியம் வருவேன் ...அதற்குள் சொல்லுங்கள் ..."
" டாக்டர் நாங்கள் இருவரும் அவன் அருகே இருக்கலாமா ...?"
" உங்கள் கவலை புரிகிறது ..தாராளமாக இருக்கலாம் ..."
மதியம் .
டாக்டர் இருவரையும் கூப்பிட்டு என்ன முடிவு செய்து உள்ளீர்கள் என
கேட்டார்.
" டாக்டர் ...நாங்கள் உறுப்பு தானதிற்கு சம்மதிக்கிறோம்.." என விம்மி விம்மி
அழுது கொண்டே சொன்னார். டாக்டர் ஒரு விண்ணப்பம் கூடுத்து அதில்
இருவர் கையொப்பம் கேட்டார். அவர்கள் படிக்க கூட இல்லை. இருவரும்
கை எழுத்து போட்டு கொடுத்தனர் ..
" அம்மா நீங்கள் உங்கள் மகனை இழந்தாலும் நீங்கள் பல பேரை வாழ
வைத்து உள்ளீர்கள். இன்றே உங்கள் மகனின் இருதயம் எடுத்து வேறு
ஒருவருக்கு பொறுத்த போகிறோம் ....ரொம்ப நன்றி அம்மா ...!"
மறு நாள் :
டாக்டர் ..." அம்மா எல்லாம் முடிந்து விட்டது . உங்கள் மகனின் இருதயம்
ஒருவருக்கு பொறுத்த பட்டுவிட்டது . சிறுநீரகம் 2 பேர்களுக்கு
பொறுத்த பட்டுவிட்டது ..."
பாவம் குமாரின் அம்மா ...! அவள் உயிரான மகனை இழந்து விட்டாள் .
ஆனால் தன் மகனின் உருப்புக்கள் வேறு சிலரின் உயிரை காப்பாற்றி
உள்ளதே என ஒரு சின்ன திருப்தி .
பாவம் குமாரின் அம்மா ...!!!
பி. கு : மூளை சிந்திக்கும் திறன் இழந்ததும் மூளை சாவு என்கின்றனர் .
ஆனால் பிற உறுப்புக்கள் 2 தினங்கள் வரை உயிரோடு இருக்கும்
என்கிறார்கள் .மனிதனின் உயிர் எதில் இருக்கிறது ...? மூளையிலா
அல்லது சிந்திக்கும் திறனில் உள்ளதா ...? மூளை சாவு எனும் நவீன
மரணம் என்ன சொல்கிறது ...? ஒருவன் சிந்திக்கும் திறன் இழந்ததும்
அவனுக்கு உயிர் போய் விடுகிறது.
அப்படியானால் உண்மை என்ன....?
ஒரு மனிதன் உழைக்காமல் கூட வாழ்ந்து விட முடியும் .
ஆனால் ஒருவன் ஒரு நொடி கூட சிந்திக்க முடியாவிட்டால் அவன்
உயிர் போய் விடுகிறது .
ஏங்கெல்ஸ் கூட மார்க்ஸ் இறந்த போது " மார்க்ஸ் சிந்தனை
செய்வதை நிறுத்தி விட்டார் " என்று சரியாகவே கூறினார்.
ஆம் ...!
சிந்திப்பவனே மனிதன் ...!!
சிந்திக்கவில்லை என்றால் அவன் ஜடம்/பிணம் ...!!!
R.சத்ய நாராயணன் சின்ன சேவகன் சத்யன் ஸ்ரீ விவேக்
09-09-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!