Friday, 25 August 2023



                   என் குப்பைகள் ...!                                    26-08-2023              சிறுகதை 028/2023


யாருக்கும் எதற்கும் பயன்படாதது குப்பை தானே ...? என் குப்பைகள் 

அசாதாரணம் ஆனவை . மிகுந்த அக்கறை-யுடன் , கற்பனை-யுடன் 

என்னை முழுமையாக ஈடுபடுத்தி எழுதபட்ட சினிமா திரைக்கதை-வசனம் 

கொண்ட சினிமா ஸ்க்ரீப்டுகள் தான் அவை .


சுமார் 20 வருடங்களுக்கு முன் ....

நான் ஊட்டியில் இருந்தேன் . எனக்கு நான் சினிமா எடுக்க வேண்டும் என்

ஆசை பிறந்தது. நான் யார் இடமும் ஸ்கிரிப்ட் எழுத கற்று கொள்ள வில்லை.

எல்லாம் என் சுய முயற்சி மட்டுமே. ஆம் . Self -Taught....! நான் ஸ்கிரிப்ட் எழுத 

7 நாட்களுக்கு மேல் எடுத்து கொண்டது இல்லை. ஆனால் நான் கடைசியாக 

எழுதிய " உஷ் ...!" மட்டும் 28 நாட்கள் ஆனது. எனது ஸ்க்ரீப்டுகளில் மிக 

கவனம் எடுத்து ஒரு சிறந்த ஸ்கிரிப்டை உண்டாக்கினேன் . எனவே நான் 

சினிமாவில் கால் பதிக்க " உஷ் "-ஐ தேர்வு செய்தேன் .எப்படியும் சினிமா 

டைரக்டர் ஆவது என சென்னை வந்தேன்.

அம்மம்மா ...!

அப்பப்பா ....! !

நான் எடுத்த முயற்சிகளுக்கு அளவே இல்லை. Bad LUCK .


குப்பை 01    :   லப் -டப்     :   நாயகன் ஹோமியோபதி மாணவன் . நாயகி 

                             அல்லோபதி மாணவி. நாயகன் நாயகியை காதலிக்கிறான் .

                             ஆனால் நாயகி அவன் காதலை மட்டும் அல்ல அவனையே 

                             தூக்கி எறிகிறாள் . மனம் நொந்த நாயகன் நாயகியின் 

                            ஆஸ்பத்ரியில் மாறு வேடம் போட்டு ஒரு நடிகையின்

                            குழந்தைக்கு( Blue Baby ) இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக 

                            செய்து முடிக்கிறான் . சட்ட விரோதமாக தான் செய்த தவறை 

                           நாயகி வீட்டில் பிரஸ் மீட் ஏற்பாடு செய்து காதலிக்கு மாரல் 

                          பனிஷ்மெண்ட் கொடுக்கிறான் . பின் சரண் அடைகிறான் .

                                                    

                                                  வழக்கு வரும்.....!

                                                  வாழ்க்கை தொடரும் ...!!


குப்பை 02 :   வித்யா விஜ்யம்

                           துர்கா , லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி      நாரதரின் 

                         கலகத்தால் பூமியில் சாதாரண பெண்ணாக பிறக்குகிறார்கள் .

                        அவர்களுக்கு அவர்கள் யார் என்று தெரியாது . வாழ்வில் பெரும் 

                         சோதனைகளை சந்தித்து பைத்தியம் பிடித்து மன நல மருத்துவ 

                        மனையில் சந்திக்கின்றன்ர். அவர்களுக்கு அமனுஷியசக்தி 

 கிடையாது .

                      . அவர்கள் ஒரு பத்திரிகை நிருபர் ( நாரதர் ) உதவி 

                       பெற்று ஒரு பெண் இயக்கத்தை துவங்குகீறார்கள் .

                                                     NO to 33....!

                                                    We நீட் 50 ....!! :  

                        என சென்னை வீதியில் இயக்கம் துவங்க படம் முடிவடைகிறது.


குப்பை 03 :   த்ரிஷா  :    ஒரு சாதரண நாயகன் மனநோய் பிடித்து சினிமா 

                          கவர்ச்சி நடிகையை காதல் செய்கிறான் . எவ்வளவோ முயற்சி 

                        எடுக்கிறான் . எல்லாம் படு தோல்வி. சென்னை வந்தும் த்ரிஷாவை 

                        பார்க்க முயற்சி செய்கிறான் . ஆனால் முடியவில்லை . இந்த 

                       நேரத்தில் ஒரு விபத்து நடக்கிறது . அவன் சுயஉணர்வு

                        இழக்கிறான். அவன் டைரி விபத்து நடந்த த்ரிஷாவின் கார் 

                        பக்கத்தில் கிடைக்கிறது . நாயகனுக்கு மனநோய் சரியாகி 

                       போகிறது . அவன் தன் சொந்த ஊருக்கு ஊட்டி செல்கிறான் .

                       த்ரிஷா அவன் டைரியை படிக்கிறாள் .

                      2 நாட்களுக்கு பின்...

                      நாயகன் வீட்டிற்கு த்ரிஷா வருகிறாள் .

                     இருவரும் சேருகின்றனர் .

                     நகைச்சுவை  உணர்வு உள்ள படம் .


குப்பை 04  :    சுமை :   இதுவும் நகைச்சுவை படம் . யாஷ்பால் கமிட்டி 

                           பல வருடங்களுக்கு முன் ஒரு அறிக்கை தந்தது . அதன் படி 

                           5-ம் வகுப்பு வரை மாணவர்கள் புத்தக சுமை சுமக்க வேண்டாம் .

                           வீட்டு பாடமும் கொடுக்க வேண்டாம் என பரிந்துரை செய்து 

                          உள்ளது . நாயகனின் மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது 

                         முதுகில் எழும்பு முறிவு ஏற்படுகிறது . அவனை சுமை இன்றி 

                         பள்ளிக்கு அனுப்ப நாயகன் எடுக்கும் முயற்சிகள் தான் 

                         சினிமாவின் கதை .

                        கடைசியில் ஒரு கழுதை வாங்கி பள்ளிக்கு தன் மகனை 

                       அனுப்புவது தான் முடிவு.

                      இதிலும் நகைச்சுவை உணர்வு அதிகம் .


குப்பை 05 :  "உஷ் ...!"   :  எனது மாஸ்டர் பீஸ் . 28 நாட்கள் எடுத்து கொண்டேன் .

                         நாயகன் ஒரு போலீஸ் ஆபிசர் . நாயகி ஒரு பத்திரிகை நிருபர்.

                        பட்ட பகலில் 2 கொலைகள் நடக்கின்றது . போலீஸ் நாயகியை 

                        சந்தேகம் கொள்கின்றனர். நாயகன் அவளுடன் பழகி

                        உண்மையை வெளி கொண்டு வர முயற்சிக்கிறான் .

                       நாயகிக்கு கொலைகாரன் யார் என்று தெரிகிறது . அவள் 

                      சாட்சியங்களை அழிக்கிறாள் . கொலைகரனே கொலையை 

                       துப்பு துலக்க வருவது ஸ்கிரிப்டின் உச்சம் .

                     ஆம் .

                     நாயகன் தான் கொலையாளி , அது அவனுக்கு தெரியாது .

                    நாயகி அவனை காதலிக்கிறாள் . அவனை வேறு துறைக்கு 

                   மாற்றி அவனை கல்யாணம் செய்கிறாள் .

                   அவள் ரசிகர்களுக்கு சொல்வது தான் " உஷ் ...!"


                                சரி .

                                5 குப்பைகள் பற்றி எழுதி விட்டேன் .

                                இத்தனைக்கும் எல்லாம் பதிவு செய்து உள்ளேன் ...!

                               என்ன பிரயோஜனம் ...?

                               20 ஆண்டுகளுக்கு மேலாக தூசி படிந்து என் ஆவண 

                              குப்பைகளில் தூங்குகின்றன ....

                              எனக்கு தூக்கம் வராதது தான் மிச்சம் .....! ! ! ! ! 


 பி. கு.   :             நான் 5 அல்லது 6 ஆண்டுகளாக சினிமா முயற்சி

 .                          விட்டு விட்டேன் .   

                          ச்சீ ...ச்சீ  ....இந்த பழம் புளிக்கும் ...! ! ! ! !


R. சத்ய நாராயணன்      ஸ்ரீ விவேக்     சத்யன்     சின்ன சேவகன்    

                                              26-08-2023


No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!