சிறுகதை 025/2023 19-08-2023 தீவிர"வாதம்"...!
உதகை அரசினர் கலை கல்லூரி .எழில் மிகு இயற்கை . கேம்பஸ் பெரிது .
சுற்றிலும் உயரமான மரங்கள். ரம்மியமான சுழல் . லேடீஸ்-க்கு என தனி
ரூம் இருந்தது . சற்று தள்ளி டீ ரூம் இருந்தது .
சேகர் இரண்டாம் ஆண்டு பட்ட படிப்பு படித்து கொண்டு இருந்தான் .
கல்லோரியிலே "தம் " அடிப்பான் . செயின் ஸ்மோக்கர் .காலை முதல்
வகுப்பு மட்டும் கட்டாயம் அட்டென்ட் செய்வான் .
பிறகு....என்ன...கல்லோரியை சுற்றுவது "சைட் " அடிப்பது தான் வேலை.
ஒரு நாள் தன் நண்பன் உடன் சுற்றி வரும் போது 2 பெண்கள் நூலகத்தில்
இருந்து திரும்பி கொண்டு இருந்தார்கள் . வேடிக்கையாக சேகர்
" வாட்ஸ் யுவர் நேம் பேபி " என்று கேட்டான் . அவன் பதில் வரும் என்று
எதிர் பார்க்கவில்லை .
"ப்ரியா " என்று பதில் வந்தது . சேகருக்கு ஆச்சரியம் . ப்ரியா நல்ல
ஸ்மார்ட் -ஆக இருப்பாள் . எப்போதும் பாவாடை தாவணியில் தான்
வருவாள் . வெள்ளி மட்டும் சேலை ...! நெற்றியில் விபூதி -குங்குமம்
வைத்து இருப்பாள் .
தினமும் அவளை சைட் அடிக்க பேசும் பழக்கம் ஏற்பட்டது .தினமும்
கல்லூரி முடிந்த பிறகு சயின்ஸ் பிளாக்கில் தனியாக சந்திபார்கள் .
இது அன்றாட நடக்கும் வாடிக்கை. எல்லா விஷ்யங்கள் பற்றியும் பேசுவார்கள் .
சேகர் தினமும் அவளுக்கு 5 ஸ்டார் வாங்கி தருவான் .ப்ரியாவிற்கு சேகர்
10 மாத குழந்தையாக இருக்கும் போட்டோவை காண்பித்தான். அவள்
அந்த போட்டோவிற்கு முத்த மழை கொடுத்தாள் . அந்த போட்டோவை
திரும்பி தர மறுத்து விட்டாள் . சேகர் கேட்டு பார்த்தான் . அவள் சம்மதிக்க
வில்லை . சரி ..என்று விட்டு விட்டான். ஒரு வருடமாக இருவரும் காதலித்து
கொண்டு இருந்தனர் .
சேகரை பற்றி தெரிந்து கொள்ள பல விஷ்யங்கள் இருந்தன . நேர்மை
ஆனவன். கல்லோரியில் நடக்கும் பட்டிமன்றம் , பேச்சு போட்டி
எல்லாவற்றிலும் கலந்து கொள்வான். முற்போக்கு சிந்தனை உள்ளவன்
சமீபத்தில் தான் ஒரு பொருளாதார பேராசிரியர் சீனிவாசன் என்பவர்
மூலம் மார்க்ஸியம் கற்று கொண்டான். கல்லோரி மேடைகளிலும் தன்
வீர உரை மூலம் மானவர்களுக்கு போராட்ட தத்துவத்தை புகட்டினான் .
அவன் ஒரு நாத்திகவாதி . உறுதியில் இருந்தான் .அவனுக்கு நண்பர்கள்
அதிகம் . அதே போல பெண் நண்பர்களும் அதிகம் .பெண்களிடம் பெண்
உரிமை பற்றி பேசுவான் . பலரை நாத்திகவாதியாக மாற்றி உள்ளான் .
அவனுக்கு இளம் ரத்தம் . சமூகம் , குடும்பம் போன்ற வற்றில் அவன்
சிந்திக்க வில்லை .நாத்திகம் மட்டுமே அவன் மூச்சு ...!
ப்ரியாவை பற்றி சொல்ல வேண்டும் ஆனால் அவள் சேகர் சொல்லும்
எல்லா கருதுக்கள்-யும் ஏற்று கொள்வாள் . ஆனால் கடவுள் பக்தியில்
சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை . அவள் உறுதி மிக பெரிது .
அவளுக்கு பிடித்த தெய்வம் முருகன் .முருக பக்தை . இதை பற்றியும்
இருவர்களும் பேசினார்கள் . ஆனால் ஒரு முடிவுக்கு வர முடிய வில்லை.
ஒரு நாள் தனியாக பேசும் போது வீட்டில் ஒரு முருகன் படமாவது
இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொன்னாள் . ஆனால் சேகர்
தன் கொள்கையில் தீவீரமாக இருந்தான் . சமரசம் இல்லை என்று
கண்டிப்பாக சொல்லிவிட்டான் .
"வாழ்க்கை என்பது சமரசம் அல்ல ...!
ஆனால் ..வாழ்கையில் சமரசங்கள் இல்லாமலும் இல்லை "
இதை சேகர் உணர மறுத்தான் .திருமணம் என்பது இரு மனம் ஒன்று சேர்வதே.
இதில் விட்டு கொடுத்து தான் போக வேண்டும் . இதை சேகர் உணரவில்லை .
நாத்திகதில் பிடிவாதமாக இருந்தான் . குடும்பத்தில் விட்டு கொடுத்து
இரு மனம் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை .ஆனால் சேகர் கட்டாயமாக
வீட்டில் முருகன் படம் வைக்க முடியாது என்று சொல்லி விட்டான் .
அடுத்த 2 நாட்கள் ப்ரியா கல்லூரி வர வில்லை .ப்ரியாவை
பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை . மூன்றாம் நாள் அவள்
வரும் வழியில் காத்து இருந்தான். ப்ரியா வந்தாள் . நேரே சேகரிடம்
வந்து அவனது குழந்தை போட்டோவை கொடுத்து " சேகர் ...நம் காதல்
முறிந்தது .
என்னால் தினமும் முருகனை கும்பிடாமல் இருக்க முடியாது . உன் கொள்கை
படி நீ வாழ்ந்து கொள் . முருகன் அருமை சொன்னாள் உனக்கு புரியாது .
என்னால் தினமும் முருகனை வணங்காமல் இருக்க முடியாது . நீ உனக்கு
பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து கொள் . ஆல் தி பெஸ்ட் ..! "
என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே வகுப்பு சென்று விட்டாள் .
இது நடந்து 30 ஆண்டுகள் ஓடி விட்டன . ப்ரியா தான் வேலை
பார்க்கும் இடத்தில் வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டாள் என்பதை
தன் நண்பன் மூலம் அறிந்தான்.
" 20 வயதில் கம்யூனிஸ்ட்-ஆக இல்லாதவனும்
30 வயதில் கம்யூனிஸ்ட் -ஆக இருப்பவனும் முட்டாள் ...!"
என்று கூறிய ஆங்கில அறிஞரின் வார்த்தைகளில் மிக ஆழமான
கருத்து உள்ளதை இப்போது புரிந்து கொண்டான் . அவனது மார்க்ஸிய
சேவை பாதியில் நின்று போனது .
அவனது காதலுக்கு முட்டுக்கட்டை ..
முருகன் ...!
முருகா ....!!
பி. கு . தற்போது சேகர் வீட்டில் 2 பெரிய முருகன் படங்கள் .
R.சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
19-08-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!