Friday, 18 August 2023

 


சிறுகதை 026   இருதார ம "ன"ம்..!!   

                               19-08-2023


மணி ...!

பூமாதேவி ...!!

லக்ஷ்மி ....!!!

மூவரும் ஒரே ஐ .டி . கம்பனியில் வேலை செய்கிறார்கள் .சுமார் 4

 வருடங்களாக இதே இடத்தில் வேலை செய்கின்றனர் . மூவரும் ஒரே 

டீமில் உள்ளனர் .டீம் மேனேஜர் மணி தான் . இவர்கள் மூவரிடமும் நட்பு 

மிக மிக ஆழமானதாக இருந்தது .ஆழமான நட்பு காதலாக கூட மாறலாம் .

ஒவ்வுறு வாரமும் இவர்கள் மூவரும் " விஜயா " மாலில் சாந்திபார்கள் .

சினிமா பார்பர்ர்கள். பிறகு நல்ல ஹோட்டலில் ....மாலில் சாப்பிடுவார்கள் .

மூவரும் சாப்பிட்டு முடிந்ததும் ஐஸ் -கிரீம் சாப்பிடுவார்கள். மூவருக்கும் 

ஐஸ்-கிரீம் என்றாள் உயிர். எல்லாவ்ற்றை-யும் பேசும் இவர்கள் வாழ்வில் 

பெரிய பிரச்சனை வர போகிறது என பூமாவுக்கும் , லக்ஷ்மிக்கும் தெரியாது .

ஆனால் மணி இருதலை கொள்ளி எறும்பு போல் ஆகிஉள்ளான் . அவன் 

அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறான் . அவன் பூமா மற்றும் லக்ஷ்மி 

இடம் தான் ஒரு மேட்டர் சொல்ல வேண்டும் என நினைத்தான் . ஆனால் அதில் 

பெரும் பிரச்சனை இருந்தது .

வார முதல் நாள் . லஷ்மி விடுமுறை . டீ குடிக்க மணியும் , பூமாவும் 

சென்றார்கள் .

டீ -யை குடிக்க ஆரம்பித்தான் . அதற்குள் பூமா பேச துவங்கினாள் .

" மணி ..நான் உன்கிட்டே ஒண்ணு சொல்லணும் ."

" சரி ....சொல்லு ...!"

" நீ  கோபிக்க கூடாது .."

" இல்லை ..சொல்லு "

" எப்படி சொல்றது தெரியில்லை ....இருந்தாலும் சொல்கிறேன் 

  ஐ லவ் யு ......"- சொல்லி விட்டு டீ குடிக்க ஆரம்பிதாள் . மணிக்கு சந்தோஷம் 

தாங்க முடியவில்லை . ஆனால் அதை காட்டி கொள்ள வில்லை.

" என்ன மணி ...? நீ என்ன சொல்றே ...?"

" தாங்க்ஸ் ....அடுத்த வராம் இதே ...இல்லை விஜய மாலில் சொல்கிறேன் ."

" இப்போ சொல்ல முடியாதா ...?"

" இல்லை நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா சொல்றேன் "

இருவரும் ஆபிஸ் உள்ளே சென்றனர். 

மறு நாள் .

லக்ஷ்மி வாந்தால் . வந்த உடனே மணியிடம் வந்து லஞ்ச் ஃபுட் கோர்டில் 

மதியம் சாப்பிடலாம் . எனக்கு உன் கூட பேச வேண்டும் .." -சொல்லி விட்டு 

வேலையை பார்க்க போய் விட்டாள் .

லஞ்ச் டைம்.

ஃபுட் கோர்ட் .

மணி -லக்ஷ்மி இருவரும் ஆர்டர் செய்தார்கள் .

மணி ஆரம்பித்தான் ." என்ன லக்ஷ்மி ...? என்னவோ பேசணும் ...

சொன்னீயே ...? சொல்லு ...!"

லக்ஷ்மி பட் என விஷயத்திற்கு வந்தாள் .

" மணி ....எனக்கு வேற வழி தெரியலை ...ஐ லவ் யு ...!"

மணிக்கு சந்தோஷம் உச்சம் . செய்வது தெரியாமல் அடக்கி கொண்டான் .

" லக்ஷ்மி ...அடுத்த வாரம் விஜயா மாலில் சந்திபோம் ..அப்போ நான் 

   சொல்றேன் ...! எல்லாம் நல்ல நியூஸ் தான் .."

" சரி ...."

அடுத்த வாரம் .

விஜயா மால் .

மணி தான் முதலில் வந்தான் . பிறகு பூமாவும் கொஞ்ச நேரம் கழித்து 

லக்ஷ்மியும் .வந்தனர் . பூமா வருவது லக்ஷ்மிக்கு தெரியாது . லக்ஷ்மி 

வருவது பூமாவிற்கு தெரியாது. 

மணி அமைதியை கலைத்தான்.

" நீங்க ரெண்டு பேருமே உங்க விருப்பம் சொல்லி விட்டீர்கள் . நானோ 

  பெரிய பிரச்சனையில்  உள்ளேன் . "

" என்ன ? " என்று இருவரும் கேட்க ...

" நான் உங்க ரெண்டு பேரையும் லவ் பன்றேன் . எனக்கு உங்களில் 

  யாரையும் மிஸ் பண்ண முடியாது . 2 பேரையும் கல்யாணம் செய்ய முடியாது 

  மீறி பண்ணி கொண்டால் எனக்கு சிறை தான் ....நான் என்ன செய்வது ...?

பூமா லக்ஷ்மி அமைதி . இருவரும் மணியிடம் சொல்லிவிட்டு போனார்கள் .

" நாங்கள் சீக்கிரம் திரும்பி வந்து விடுவோம் ...பிளீஸ் ...வைட் ..."

மணியின் இத்யம் லப் -டப் என வேகமாக அடித்தது . 15 நிமிஷங்கள் 

நரகமாக இருந்தது .

இருவரும் தெளிவுடன் வந்தனர் .

மணி :   " என்ன ...? உங்க முடிவு என்ன ...?"

பூமா   :    " லெட் அஸ் லீவ் டூ கெதர் ...!"

லக்ஷ்மி :   " எஸ் ..வீ கேன் லீவ் டூ கெதர் ...!"

மணி     : " ஓ ...மை காட் ...! "- ஆழ ஆரம்பித்து விட்டான் .

ஐஸ் -கிரீம் வந்தது . மூவரும் வாங்கி ஒருங்கே கொண்டு வந்து 

மூவரும் :  " சீயர்ஸ் " என்று சந்தோஷமாக சாப்பிட ஆரம்பித்தார்கள்.


                                                            எஸ். 

                                                            மணி 

                                                            பூமா 

                                                            லக்ஷ்மி 

                                            லெட் தெம் லீவ் டூ கேதர் ...! ! !

      மூவரும் சேர்ந்தே வாழட்டுமே ...! ! !


ஆர்.சத்ய நாராயணன்    சத்யன்       ஸ்ரீ விவேக்     சின்ன சேவகன்   

                                                         19-08-2023 


No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!