Friday, 4 August 2023

சிறுகதை 021/2023    பாரத மாதா 

                          05-08-2023

 தாய் .

மார்க்சிம் கார்க்கியின் " தாய் " அல்ல .

நான் இந்த பாரத தேசத்தின் தாய் .

ஆம் ...!

எல்லோருக்கும் நான் தாய் . சுதத்திர போராட்டதின் போது 

காங்கிரஸில் இருந்த " தீவரவாதிகள் " மற்றும் " பயங்கரவாதிகள் "என்னை 

வணங்கி நாட்டிற்கு சேவை செய்தனர் . தியாகி வாஞ்சிநாதன் என் முன்பே 

உறுதிமொழி எடுத்து வணங்கி விட்டு தான் "ஆஷ் " துரையை கொன்றான் .

தமிழகத்தில் " பாரத மாதா சங்கம் " என உருவாக்கி என்னை ஏற்று வணங்கி 

நாட்டுபற்றுடன் சேவை செய்தனர் .

இப்போது என் நிலை ....படு மோசம் ...!

ஏதோ ஒரு கட்சிகோ அல்லது மதவாத அமைப்பிற்கோ மட்டும் நான் 

" தாய் " அல்ல. பரந்து பட்ட மக்களுக்கும் நான் தாய் தான் .என்னை இந்த 

தேசத்தில் தாயாக மெய்யாக பார்ப்பவர்கள் ரத்தத்தில் நான் ஓடுகிறேன் .

தேச பற்று ...!

நாட்டு பற்று ...!

எது தான் எனக்கு பிடித்த உணர்வு .இது பாரதத்தில் 99%-க்கு இருக்கிறது .

மிச்சம் உள்ள 1%-ஐ பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்கள்...

                                    நில உடமையாளர்கள் ...

                                    முதலாளிகள் ....

                                   கார்ப்பரேட் நிறுவனர்கள் ...

இவர்களுக்கு நான் நிச்யம் சொந்தம் இல்லை . இவர்கள் செய்யும் அநீதிகளை 

நான் நன்கு அறிவேன் . துளி கூட இவர்கள் என்னை மதிப்பது இல்லை. நான் 

ஏன் இவர்களை சுமக்க வேண்டும் ...?  

                                   தொழிலாளர்கள் ...

                                   விவசாயிகள் ...
                      
                                   நடுத்தர மக்கள் ...

                                  பெண்கள் ...

                                  சிறுவர் - சிறுமியர் ...

                                  குழந்தைகள் ....

இவர்கள் எனக்கு போதும் . நான் சதா காலமும் இவர்களை பற்றியே சிந்தித்து 

கொண்டு இருக்கிறேன் . இவர்கள் உடல்களில் ஓடுவது என் ரத்தம் . நான் 

நிம்மதியாக இல்லை . என் வேதனைகள் பல பல . வறுமை என்னும்

 தரித்தரம் ....தாண்டவமாடுகிறது . எழ்மை நாலா பக்கமும் பரந்து விரிந்து 

சாக்கடை போல் உள்ளது. இந்திய சமுகுமே நாறுகிறது .

அம்மம்மா ...!

அப்பப்பா ...!!

எத்தனை பிரச்சனைகள் ...

எத்தனை வேதனைகள் ...

எத்தனை சோதனைகள் ...

எனக்கு விவசாயி- தொழிலாளி என்றால் ரொம்ப பிடிக்கும் .அவர்களது 

சொந்தம் தான் நான் வாழ்வதற்கு அத்தாட்சி .அடிப்படை .என்னை திருப்தி 

செய்ய நிறைய கட்சிகள் இருக்கின்றன. அவர்களுக்கு பணம் , பதவி மட்டுமே 

முக்கியம் .என்னை பற்றி நினைக்க கூட நேரம் இல்லாமல் சுக வாழ்வு 

என்பதிலேயே குறியாக உள்ளனர். என் படத்தை வைத்து கொண்டு அரசியல் 

கட்சியும் மற்றும் மதவாத அமைப்பும் இந்துக்கு எதிராகவே செயல்

 படுகின்றனர். சுய நலத்திற்காக கலவரம் செய்யவே அவர்கள்

 விரும்புகின்றனர். துரோகிகளை   பற்றி எனக்கு கவலை இல்லை.  நான் 

மேலே சொன்னவர்கள் தான் என் நெஞ்சம் முழுக்க வாழ்கின்றனர் .

தாய் பாசம் என்பது இது தான் . அவர்கள் வாழ்வு தான் என் வாழ்வு . 

எனக்கு ...

                                               ஜாதி இல்லை ...!

                                               மதம் இல்லை ...!!

இவைகளை வைத்து மக்களை பிரித்து ஆளும் சுழ்ச்சியில் தான் இவர்கள்  

கடை பிடிக்கிறார்கள் . இது பிரிட்ஷ் காட்டிய வழி . மிக மோசமானது .

. வெறும் 0.01% -தினர் மட்டுமே இந்த மாதிரி செயல்களில் 

ஈடுபாடு கொண்டு உள்ளனர். என் மூச்சு , உயிர் 99% உள்ள மக்கள் தான் .

உண்மையில் யார் இவர்களுக்காக சேவை செய்கிறார்களோ அவர்களை 

மட்டுமே நான் விரும்புகிறேன் .என் பாசம் , நேசம் , உயிர் எல்லாம் இந்த 

பெரும்பான்மை மக்கள் மீது தான் . 

" தாய் இல்லாமல் நான் இல்லை ." -என்று உணர்ந்தவர்களே என் மக்கள்.

தாய் ...தாய் ...தாய் ...!

ஆம் .

நான் பாரத மாதா ...!
\
எனக்கு பிடித்தது ....

எனக்கு உயிர் போன்றது ...

நான் வேண்டுவது ...

நான் எதிர்பார்ப்பது...

நான் நினைப்பது ...

நான் போற்றுவது...

                                             புரட்சி மட்டுமே....!
                                             ஆம் .
                                             பாரத புரட்சியே ...!!


R . சத்ய நாராயணன்      சத்யன்     ஸ்ரீ விவேக் 

              சின்ன சேவகன்      05-08-2023

                                           

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!