Friday, 4 August 2023

 


சிறுகதை 022/2023    ஒரு வக்கீலின் வாதம் ...!                                     05-08-2023


மாண்புமிகு ....

ஆனரபில் ...

உச்ச நீதி மன்ற தலமை நீதிபதி அவர்களே ...!

இந்த வழக்கு தன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது . எனவே என் இறுதி

 வாதத்தில்  என் கருத்துகளை அழுத்த திருத்தமாக பதிவு செய்ய

 விரும்புகிறேன் . 

ஆம். 

நம் அரசியல் அமைப்பு சட்டம் " வீ தி பீப்பிள் ஆஃப் இந்தியா " அதாவது 

" மக்களாகிய நாம் " என ஆரம்பித்து ஒரு நீண்ட அரசியல் அமைப்பு 

சட்டமாக பேர் பெற்று விளங்குகிறது . மேலும் ...

                   இந்தியா ஒரு முழு இறைமை உடைய  சமய சார்பற்ற 

                   சமதர்ம ....

என துவங்குகிறது . நான் எல்லா விஷயங்கள் விட்டுவிட்டு ஒன்றே மட்டுமே 

எடுத்து கொள்ள விரும்புகிறேன் . 

மதிபிற்கு உரிய நீதிபதியே ...!

இந்திய அரசியல் சட்டத்தின் முக உரையில் " இது சம தர்ம " நாடு என்று 

குறிப்பிட பட்டு உள்ளது . 

                                           இது தான் பிரச்சனை ...!

                                          இது தான் மையம் ...!!

                                          இது தான் என் கேள்வி ...!!!

                                          இந்தியா ஒரு சமதர்ம நாடா ...????

இல்லை. நிச்சயம்  இல்லை. நாட்டில் பெரும்பான்மை மக்கள் வறுமையில் 

தான் வாடுகின்றனர் . இந்தியாவின் முதுகு எழும்பு என்று சொல்ல படும் 

விவசாயிகள் வாழ்க்கையை பற்றி இந்த உலகமே அறியும் . அது மட்டும் அல்ல .

நகரத்தில் குடிபுங்குந்த தொழிலாளிகள் சுபிட்சமாக வாழ வில்லை . நான் 

புள்ளி விவரங்களை தர விரும்ப வில்லை. உலகே அறியும் . இப்படி

 தொழிலாளி - விவசாயி வறுமையில் உள்ள போது எப்படி நம் நாட்டை 

ஒரு "சமதர்ம " நாடு என்று சொல்ல முடியும் ?  மக்கள் சார்பாக நான் இந்த 

நீதிமன்றம் முன் சில கேள்விகளை வைக்க விரும்புகிறேன் ......

                1. இந்தியாவில் அனைத்து தொழிற்சாலைகளும் தேச உடமை 

                   ஆக்க பட்டு உள்ளதா ...?

               2. நாட்டின் பெரும்பான்மை மக்கள் பொருளாதார ரீதியில் 

                   " சமத்துவம் " பெற்று உள்ளனரா ...??

               3. கிராமங்களில் கூலி விவசாயிகள் நிலம் இல்லாமல் மூணு 

                   வேளை சாப்பிடுகிறார்களா ...??? பெரும்பாலும் காலை பழைய 

                  சோறு தான் . மூணு வேளை நல்ல உணவு என்பது வெறும் கனவு 

                  தான் 

               4. பிறகு ...மருத்துவம் ... இந்தியாவில் உள்ள பெரும் " பல்நோக்கு 

                   மருத்துவ மனைகள்" தனியரிடமே உள்ளது . இதை ஏன் தேசிய 

                  உடமை ஆக்க கூடாது ...???? சமதர்ம சமூகத்தில் எல்லா சிகிச்சைகள் 

                  இலவசமாகவே இருக்கும் . இது மக்களின் அடிப்படை உரிமை .

                5. கல்வி ...அம்மம்மா ...! எல்லா கல்வி நிறுவனங்கள் தனி

                    உடமையாகவே  உள்ளது .அனைவருக்கும் கல்வி ...அதுவும் 

                   பள்ளி - கல்லூரி - ஆராய்ச்சி வரை இலவசமாக இல்லையே ...??? ??

              6. தற்சமயம் இந்தியாவில் உள்ள பெண்கள் சமூகத்திலும் , வீட்டிலும் 

                  முழு சுதந்திரம் பெற்று உள்ளனரா ??? ??? பெண்கள் பாதுகாப்பு 

                  உள்ளதா ...??? ???   உ.ம் :     மணிப்பூர் வன்முறை .

              7. கடைசியாக ...இங்கு இன்று இந்தியாவில் " சுதந்திரம் , சமத்துவம் 

                  சகோதராத்துவம் " உள்ளதா ...??? ??? ?

              8.  ஆட்சி, நிர்வாகம் இவற்றில் மக்கள் பங்கு உள்ளதா ...??? ??? ??

             9.  அதிகார வர்கம் யாருக்காக உள்ளது .??? ??? ???

ஆனரபில் நீதிபதியே ...!

எப்படி பார்த்தாலும் இந்தியா ஒரு "சமதர்ம " நாடு இல்லை என்பது வெட்ட 

வெளிச்சமாக தெரிகிறது .இந்த நேரத்தில் நமது அரசியல் அமைப்பு 

" சமதர்ம " நாடு என்று பிரகடனம் செய்வது சரியா ...? 

இதற்கு 2 தீர்வுகளே உள்ளன .

                          1. அரசியல் சாசன முகவுரையில் " சமதர்ம "என்ற சொல் 

                              நீக்க பட வேண்டும் .

                          2. அல்லது இந்தியா மெய்யாகவே ஒரு " சமதர்ம " நாடக 

                              மாற வேண்டும் .

எனவே "சமதர்ம " நாடாக இந்தியா மாற வேண்டும் என சொல்லி என் 

வாதத்தை முடித்து கொள்கிறேன் .

தட்ஸ் ஆல் யுவர் ஆனர் ...!!!


நீதிபதி :    வாதங்கள் ஏற்று கொள்ள பட்டன . அரசியல் அமைப்பு  சட்டத்தின்

                     முகவுரையை மாற்றுவது சரி அல்ல. எனவே நிஜமாகவே பாரத 

                     நாடு " சமதர்ம " சமூகுமாக வேண்டிய கட்டயாம்  உள்ளது .

                     எனவே இப்போது தீர்ப்பு சொல்ல முடியாத நிலை . எனவே 

                     தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன் .

                     நல்லதே நடக்கும் என நம்புவோமாக .

                     ஜெய் ஹிந்த் ...!



                                                            சுபம் 

R.சத்ய நாராயணன்     ஸ்ரீ விவேக்     சத்யன்     சின்ன சேவகன் 

                                           05-08-2023


No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!