என்ன செய்ய வேண்டும் ..?
12-08-2023 சிறுகதை 24/2023
அன்புள்ள தோழரே ...!
வணக்கம் .
தங்கள் கடிதமும் , புத்தகமும் கிடைத்தது. மிக்க நன்றி.
நீங்கள் உங்கள் புத்தகத்தில் குறிபிட்டுள்ள பெரும்பான்மை
விஷயங்களை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன் .ஆனால் சில
விஷ்யங்கள் என் மனதை வேதனையடைய செய்கிறது . என் மனதில்
தோன்றும் விஷயங்களை உங்கள் முன் வைக்க போகிறேன் . நான்
என்றுமே புரட்சிக்கு ஆதரவு கொடுக்கவே விரும்புகிறேன் .
நக்ஸல்பாரி இயக்கம் ...!
நீங்கள் நக்ஸல்பாரி இயக்கம் குறித்து மிக நன்றாகவே
எழுதி உள்ளீர்கள் . சீன வானொலி " இந்தியாவில் வசந்த்ததின் இடி
முழக்கம் கேட்கிறது " என்று அறிவித்தது மிக சரியே . ஆனால்
நக்ஸல்பாரி இயக்கதில் இருந்து தான் CPI (ML ) கட்சி துவங்கியது . பல
முடிவுகள் சரியாக இருந்த போதும் பெரும் தவறு செய்து விட்டார்கள் .
நக்ஸல்பாரி, சிலிகுரி ஆகிய பகுதிகளில் இருந்த நிலமை வேறு. அந்த
நிலை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. எனவே இயக்கம் தீவீர
வாதத்தில் வீழ்ந்தது அறிந்த ஒன்றே. நாட்டில் எங்கும் புரட்சிகர
நிலை இருக்க வில்லை . எனவே அந்த திட்டத்தை எல்லா இடங்களிலும்
நிறைவேற்றுவது என்பது மிக தவறான விஷயம்.
பின் என்ன நடந்தது...?
தொட்டதற்கு எல்லாம் கருத்து வேறுபாடு . விளைவு கட்சி பிளவு .
இன்று சுமார் 40 கட்சிகளாக இல்லை குழுக்களாக செயல் பட்டு
வருகின்றான்ர்.
இங்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் . சுதந்திர
போராட்ட காலத்தில் காந்தி-நேரு , காந்தி-ராஜாஜி . பட்டேல் -நேரு
போன்று எண்ணற்ற முரண்பாடுகள் கட்சிக்கு உள் இருந்தது . ஆனால்
யாரும் கட்சியை பிளவு செய்ய விரும்ப வில்லை . கட்சி ஒற்றுமை தான்
முக்கியம் என இருந்தனர் . ஒரு பூஷ்வா கட்சிக்கு தெரிந்த விஷயம்
கூட புரட்சியாளர்களுக்கு தெரிய வில்லை என்பது சாபக்கேடு .
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ...!
இதை CPI (ML) உணர வேண்டும். நக்ஸல்பாரி முடிந்து பல பத்தாண்டுகள்
ஓடிவிட்டன. பூஷ்வா காட்சிகள் கூட I .N.D .I .A என ஒன்று படுகின்றனர்.
இதை இந்திய புரட்சியாளர்கள் , இடது சாரிகள் , மக்கள் இயக்கங்கள்
அறிவுஜீவிகள் , மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர
வேண்டிய காலம் வந்து விட்டது . இப்போதும் நான் வைக்கும் திட்டம் தான்
சரியானது என்று இருப்போமே என்றால் வருங்காலம் நம்மை தூற்றும் .
1. ஏகாதிபத்திய எதிர்ப்பு
2. முதலாளிதத்துவ எதிர்ப்பு
3. நில உடமை எதிர்ப்பு
4. தொழிலாளர் நல்வாழ்வு
5. உலக அமைதி & நல்வாழ்வு
இந்த 5 அம்ச திட்டத்தை எல்லோரும் ஏற்று கொள்வார்கள் .இதை ஏற்று
கொள்பவர்கள் ஒன்றாக இணைந்து " என்ன செய்ய வேண்டும் " என
கூடி திட்டம் போட்டால் "இந்தியா விழித்து கொள்ளும் ". இது தான்
இன்றைய பிரதான திட்டம் ." சமதர்ம " சமூகம் அமைக்க என்ன செய்ய
வேண்டும் என்று ஒரு குறிப்பான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் .
தோழரே ...!
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன .
1. கட்சி /முன்னணி ரகசியமாக இருக்க வேண்டிய அவசியம்
இல்லை . ( 21-அம் ) நூற்றாண்டில் இது சாத்தியம் இல்லை .
2. கட்டாயம் ஆயுத புரட்சி தான் என்பதும் அவசியம் இல்லை.
இதை தன் மறைவுக்கு முன் கேஸ்ட்ரோ சொல்லி உள்ளார்.
3. மக்களை ஒரே அணியில் திரட்ட வேண்டும் .
4. பாராளுமன்ற பங்கு என்பது 2 காரணங்களுக்காக
அமைய வேண்டும் .
அ . சட்டம் இயற்றி நிர்வாகத்தை செயலுக்கு
கொண்டு வரவேண்டும் . இது சாத்தியமே ...!
ஆ. இல்லை என்றால் மக்கள் முடிவு செய்வார்கள்
5. "சமதர்ம " சமூகம் மட்டும் உலக அமைதி மற்றும் சமாதான
சகவாழ்வு -இதுவே நம் இலக்கு .
நான் என் எல்லா கருத்துகளையும் முன் வைக்க வில்லை . எது இப்போது
முக்கியமோ அதை மட்டுமே நான் கோடிட்டு காட்டி உள்ளேன்.
ஒற்றுமையே நமது பலம் ...!
நான் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் .
உங்கள் கருதுக்கள் மற்றும் விமர்சனங்களை ஆவலோடு எதிர்
பார்த்து உள்ளேன்.
இப்படிக்கு ,
புரட்சி தாசன்
தமிழ்நாடு - 2023-2024
R .சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
12-08-2023
அடுத்த வாரம் 2 காதல் கதைகள்
1. தீவிர "வாதம் "...!
2. இரு தார ம"ன"ம்....!!
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!