Friday, 25 August 2023

 

    சிறுகதை 027/2023   வீதி நாடகம்                                            26-08-2023


1980-களில் மக்கள் கலை இலக்கிய மன்றம் ...மக்கள் கலாசார கழகம் 

ஆனது. தமிழகம் முழுக்க முக்கிய நகரங்கள் மட்டும் இன்றி பல்வேறு 

கிராமங்களில்-லும் வீதி நாடகங்கள் அரங்கேற்ற பட்டன . அதற்கு நல்ல 

வரவேற்பு இருந்தது . மக்களின் கரவொலி விண்ணை தொடும்படி 

இருந்தது .சினிமா மற்றும் மேடை நாடகங்கள் பூஷ்வா கலை என்று 

கூறி புறக்கணித்தனர் . அது தவறு .

                                      மேடை இல்லை.

                                      மைக் இல்லை.

                                     மைக் அப் இல்லை .

                                     வசனம் கம்மி .

                                     மைமிங் அதிகம் .

பல சமூக பிரச்னைகளை வைத்து நாடகம் போட்டோம் . வெற்றியும் 

கண்டோம் .

                                    தண்ணீர் பிரச்சனை 

                                    வரதட்சணை பிரச்சனை 

                                   வெட்டி வேலை -விவசாய பிரச்சனை 

                                   முதலாளி- நில உடைமையாளர் கூட்டு 

                                   அவசர அவசியம் ( காசு வாங்கும் பொது கழிவு )

                                   மசாலா பத்திரிகை-கள் 

                                  அரசியல் கட்சிகளின் ரெட்டை வேடம் 

                                  ஊழல் 

                                  போலீஸ் அடக்குமுறை 

                                  தர்ம ஆஸ்பத்திரி அவலம் 

                                 வேலை இல்லா திண்டாட்டம் 

                                --------------------------------------

இப்படி பல கருக்களை கொண்டு வீதி நாடகங்கள் போட்டோம் . இதில் 

பணிவுடன் சொல்கிறேன் என் பங்கு அதிகம் . நான் இயக்குனராகவே 

பணியாற்றினேன் . மற்றும் தமிழகம் முழுவதும் வீதி நாடக பயற்சி 

முகாம்களை நடத்தி உள்ளோம் . புரட்சிகர பாடல்களுக்கு நடனம் கற்று 

கொடுக்க பட்டது . இதிலும் என் பங்கு அதிகம் என்பதை பணிவுடன் 

சொல்கிறேன். நடிகர்கள் அனைவரும் நன்கு ஆதரவு தந்தன்ர் . நாடங்களுக்கு 

முடிவில் நடிகர்கள் ஸ்டீல் ஆக நிற்க அப்போது 2 அல்லது 4 வரி பாடல் 

பாடப்படும். இதில் " தீ " என்ற மக்கள் கவிஞர் பங்கு அபராம் . மேலும் 

நான் சினிமா ரசிகன். அதனால் எங்கள் நாடகங்களில் "ஸ்லோ மோஷன் "

டெக்னிக் நானே முதலில் கொண்டு வந்தேன் . மக்கள் இடையே நல்ல 

வரவேற்பு இருந்தது.


1986-ல்  கோவையில் பாசிச எதிர்ப்பு மாநாடு பிரமாண்டமாக நடந்தது .

மிக பெரிய மாநாடு . ஆயிர கணக்கில் மக்கள் . 2 நாட்கள் நடைபெற்ற 

மாநாட்டில் இரவு கலை நிகழல்ச்சி தான் . நானே அதன் பொறுப்பை

 ஏற்றுக்கொண்டேன். சில தோழர்கள் என்னை முன்மொழிந்தன்ர் .

இந்த மாநாட்டிற்கு நான் எழுதிய நாடகங்கள் ....


                                                   வீதி நாடகங்கள் மேடையில் போடப்பட்டன .

                                                   நான் உருவாக்கிய நாடகங்கள் 


                                                  1. முன்பு ஒரு காலத்திலே 

                                                 2.  ஊர்வலம் 

                                                 3. "கை "ராசி ராஜூவ் ( ராஜிவ் பிரதமர்)...!

                                                4. மூவர்ண விலங்குடிப்போம் ...!!!


அம்மா ...!

அப்பா    !!

நான் என் மூளையை கசக்கி பிழிந்து 10 நாட்களில் முடித்து விட்டேன் .


                      1. முன்பு ஒரு காலத்திலே ....

                          இதில் சிறுவர்-சிறுமியர் நடித்தது . காட்டில் 

                         நடக்கும் கதை . எல்லோரும் மாஸ்க் போட்டு நடித்தார்கள்.

                        குட்டி முயலே புரட்சி தலைவன் . பிரமாதமாக நடித்தார்கள்,


                    2. ஊர்வலம் :   இது நாட்டிற்கு இப்போது தேவையான 

                        ஊர்வலம் எது என்று சொல்வது . சிறுவர்களே நடிதத்தார்கள் .

                       " புரட்சி ஓங்குக " ஊர்வலத்தையே  தேர்வு செய்வர் .

                    3. "கை " ராசி ராஜூவ் ...! இது வேலை இல்லா திண்டாட்டம் ,

                         வறுமை , ஊழல் , போன்ற பிரச்சனைகள் வைத்து கொண்டு 

                        மக்களை " 21-ம்  நூற்றாண்டுக்கு கொண்டு செல்வது "

                        நகைச்சுவை வடிவில் போட பட்டது .

                   4.  மூவர்ண விலங்கோடிப்போம் ...! ! !

                        இது மிகை இன்றி சொல்ல வேண்டும் என்றால் இது எனது 

                       " மாஸ்டர் பீஸ் ". சுமார் 3 மணி நேரம் நடக்கும் இந்த நாடகத்திற்கு 

                          கதை -வசனம்- மைமிங்- இயக்கம் எனது . ஆனால் ஒன்றை 

                      சொல்லியே தீர வேண்டும் . ஒவ்வொரு காட்சி முடியும் போதும் 

                      2 அல்லது 4 வரி பாடல் தேவை பட்டது . தீ தான் எல்லா பாடல்களும் 

                      எழுதினார் . இந்த நாடகத்தை வீடியோ எடுக்க வில்லையே என 

                      மிகவும் வருந்துகிறேன். இப்படி ஒரு இந்திய சுதந்திர நாடகம் 

                       நான் எழுதியது இல்லை . இனியும் அந்த வாய்பு கிடைக்குமா 

                       என தெரிய வில்லை. 


                                                 நடிகர்கள் சிறப்பாக நடித்தனர் .

                                                 காந்தி சைவ புலியாக நடித்தார்.

                                               சுதந்திர போராட்டம் துவங்கி அவசர நிலை 

                                               பிரகடனம் வரை கதை சொல்லபட்டது .

                                                நக்ஸல்பாரி இயக்கம் சிறப்பாக அமைந்தது .

                                               நான் இந்த கதையை எழுத பயன்படுத்திய ஒரே 

                                              புத்தகம்  ....

                                                                   இன்றய இந்தியா 

                                                                   ரஜினி பாம்தத் .-ஆசிரியர் 

நாடகத்திற்கு இப்படி ஒரு கை தட்டல் வரும் என்று நான் நினைத்து கூட 

பார்க்கவில்லை .எனது படைப்புகளில் இதுவே உச்சம் . இதை வீடியோ 

எடுக்காமல் இருந்தது மிக மிக பெரிய தவறு . இப்போது நான் உணர்கிறேன் 


                       வீதி நாடகம் என் உயிர்.

                       பல நுணுக்கங்களை புகுத்தி உள்ளேன் .


                      வீதி நாடகம் வாழ்க ....!
                      கலை மக்களுக்கே ...!!


R.சத்ய நாராயணன்      ஸ்ரீ விவேக்     சத்யன்      சின்ன சேவகன்    


                                                      26-08-2023


No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!