Friday, 6 October 2023

 


                        மணி ஆச்சு ...!

சிறுகதை 039/2023                                                                      07-10-2023


17--06-1911 

" நாதா ...!  ! "

"ம்ம் "

" மணி ஆச்சு ..."

"ம்ம் "

"நாதா ..அதை எடுத்து கொண்டாயா ..?"

" எடுத்து கொண்டு விட்டேன் "

" பின் ஏன் புறப்பட தாமதம் ...?"

" இதோ புறப்பட்டு விட்டேன் . நான் காளி மற்றும் பாரத மாதவை 

  வணங்க வேண்டும் ..."

" சரி ...நாதா ...பயப்படாதே..."

"   ம்ம் "

நாதன் கண்களை மூடிக்கொண்டு காளி தேவியை வணங்கினான்.

பிறகு ' பாரத மாதா " வை தியானித்தான்  .தியானதிற்கு பிறகு 

பாரத மாதாவின் கால்களை தொட்டு தன் கண்களில் ஒற்றி கொண்டான் .

" தோழர்களே ...நான் தயார் .நான் உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன் "

அங்கு 4 பேர் இருந்தனர் . ஒவ்வொருவராக நாதனை கட்டி பிடித்து 

பிரியாவிடை கொடுத்தர்கள் . 

" பாரத மாதாவிற்கு ஜெய் " என்று சொல்லி கிளம்பினான் .


மணி ஆச்சு ...! 

திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் மணியாச்சி ஸ்டேஷன் வந்ததது .

நாதன் மிக நிதானமாக நடந்தான் .

ரயில் மணியச்சியில் 10 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் . நாதன் 

மிக மிக பொறுமையுடன் முதல் வகுப்பு பெட்டி நோக்கி நடந்தான் .

கடைசி கோச் முன்பாக முதல் வகுப்பு பெட்டி இருந்ததது .

நாதன் வந்து விட்டான் .

மணி ஆச்சு ...!

நாதன் முதல் வகுப்பு பெட்டி கதவை திறந்தான் . ஒரு ஆங்கில துரை,

மற்றும் அவன் மனைவி இருந்தனர்.

ஆம் .

ஆஷ் துரை தான் .

வ.உ .சி மற்றும் சிவாவை சிறையில் அடைத்து பெரும் சித்திரவதை-க்கு 

காரணமான அதே ஆஷ் துரை தான் .

நாதன் தன் பாக்கெட்-லிருந்து துப்பாக்கியை  எடுத்து ஆஷ் துரையை 

சுட்டான் . ஆஷ் துரை இறந்தான் .

உடனே ...நாதன் பொது கழிப்பிடம் சென்று துப்பாக்கியால் தன் 

தலையில் சுட்டான். அவனது மூளை சிதறியது .

ஆம் ...!

நாதன் வேறு யாரும் அல்ல .

வாஞ்சிநாதன் தான் .

பயங்கர வாதம் தீர்வு அல்ல. ஆனால் தான் கொண்ட தேச பற்றின் 

காரணமாக அந்த வழியை தேர்ந்து எடுத்தான் .

ஆனால் அவனிடம்      

                                       தேச பற்று 
 
                                       தியாகம் 

                                      அற்பணிப்பு 

இவற்றிக்கு வாஞ்சிநாதனிடம் குறைவே இல்லை. இந்திய சுதந்திர 

போராட்டதில் இது போல் எங்கும் இந்த மாதிரி நிகழ்வு நடக்கவில்லை .

வ. உ. சி. யை செக்கு இழுக்க வைத்த , சிவாவிற்கு தொழுநோய் வர 

காரணம் ஆஷ் துரை தான் என முடிவு செய்து ஆஷ் துரையை 

கொன்றான். 

                            ஒரு வேளை ....இந்த தியாகம் , தேச பற்று மற்றும் 

அற்பணிப்பு இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு 

வருமே ஆனால் ...ஒரு எரிமலை வெடிக்கும் . 

                          அது ஆயிரக்கணக்கான  துப்பாக்கிகளுக்கு சமம் ...!

                          அது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளுக்கு சமம் ...!!

                          அதுஆயிரக்கணக்கான  அணுகுண்டுகளுக்கு சமம் ...!!!

நமக்கு சம தர்ம நாட்டை உருவாக்க பயங்கரம் அற்ற கோடிக்கணக்கான 

இளைஞர்கள் அவசியம் .

                          இதுவே நமது இன்றைய தேவை.
           
                          பயங்கரவாதம் அல்ல ...!

                          வாஞ்சிநாதனின் தியாகம் , அற்பணிப்பு உள்ள 

                          மக்களே தேவை...!! 

                          வாஞ்சிநாதனின் தியாகம் பரவட்டும்.

                           வாஞ்சிநாதனுக்கு வீர வணக்கம் ...!

                           வாஞ்சிநாதனின் அற்பணிப்பு பரவட்டும் ...!!

  வாஞ்சிநாதனின் தியாகம் 

                       
பரவட்டும்...!


R. சத்திய நாராயணன்    சின்ன சேவகன்           30-09-2023

                          

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!