இஸ்மாயில்
சிறுகதை 040/2023 07-10-2023
டீ கடை .
இது நூலகம் போல .
நல்ல புத்தகங்களுக்கு ஈடாக நல்ல நண்பர்கள் கிடைக்கும் இடம்.
சுமார் 10 ஆண்டுக்குக்கு முன் மெயின் ரோடில் ஒரு டீ கடை இருந்ததது.
தினமும் காலை மாலை இரு நேரங்களிலும் செல்வேன். மாலையில்
நண்பர்கள் வருவார்கள். சரவணன் , குமார். பூபதி , சுரேஷ், வினோத் என்று
ஒரு நீண்ட பட்டியல் . டீ கடை முதலாளி, மற்றும் டீ மாஸ்டர் எல்லாருமே
நண்பர்கள். நான் அவர்களிடம் அரசியலும் பேசுவேன் ...ஆன்மீகமும்
பேசுவேன். டீ கடைக்கு பக்கத்தில் ஒரு 10 அல்லது 15 கடைகள் . மேல்
தளத்தில் சில ஆபீசுகள் மற்றும் கடைகள்.
நவீனமயமாக்கம் இந்த பில்டிங்யை விடவில்லை . எல்லோர்
வயற்றிலும் அடித்து பில்டிங்யை இடித்து என்பிஎல்ட் ( இரு சக்கர வாகனம் )
பெரிய ஷோ ரூமை கட்டிவிட்டார்கள் .எனக்கு அந்த டீ கடை ரொம்ப
பிடிக்கும். அதிகாலை 3 மணிக்கே திறந்து விடுவார்கள் . ஒரு நாய்
பட்டாளம் என்னை விடவே விடாது . நான் பிஸ்கட் வாங்கி போடுவேன்.
சரி அந்த டீ கடையை பற்றி ஏன் எழுதுகிறேன் என்ற விஷயத்திற்கு
வருகிறேன்.
மாலை 5 மணி முதல் 7 மணி வரை பல டீ .+ தம் . மேல் தளத்தில்
வேலை செய்பவர் தான் இஸ்மாயில் . அவர் 5 மணிக்கு சிகெரேட் குடிக்க
வருவார். என்னிடம் தான் லைட்டர் வாங்குவார் . அதில் பழக பழக நாங்கள்
நல்ல நண்பர்கள் ஆணோம் . பிறகு 6 மணிக்கு வருவார். அப்போது ஒரு
தம். அவரிடம் நான் என்ன பேசினேன் என எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.
பொதுவாகவே பேசினோம் .
அவர் பார்பதற்கு 30 அல்லது 35 வைது போல் தான் இருந்தார்.
நிறம் மிக வெள்ளை. ஒல்லியான உருவம். சற்று குட்டை . ஒரு நாள் கடையில்
உள்ளே உட்கார்ந்து பேசும் போது அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ..?
மேலும் எத்தனை குழந்தைகள் என கேட்டேன். அவர் மீண்டும் ஒரு சிகெரேட்
பற்ற வைத்து விட்டு பேச ஆரம்பித்தார் .
" சார் ..எனக்கு இளம்வயதில் கல்யாணம் ஆகி விட்டது . எனக்கு
இரண்டு குழந்தைகள் ....பார்க்க மிக அழகு . நான் அப்போது தென்
ஆப்ரிகாவில் குடி இருந்தோம் . ஒரு நாள் ஷாப்பிங் செல்ல என் மனைவியும்
குழந்தைகளும் என் காரில் போனார்கள் . நான் அவர்களை உயிருடன்
பார்த்தது அதுவே கடைசி ...! "
என் மனம் சற்று பதறியது . மேலே அவரே சொன்னார்.
" அவங்க போன கார் மீது லாரி மோதி கார் சுக்கு நூறாக உடைந்தது .
மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். "
" சார் ....உங்க கஷ்டம் புரிகிறது . இது எப்போது நடந்ததது ..?"
" 25 வருடங்கள் ஆகிவிட்டது . ஆனால் அவர்கள் என் மனசில் தான்
குடி இருக்கின்றன்ர். "
" சார்...தப்பா எடுக்காதீங்க ...நீங்க ஏன் மறுபடியும் கல்யாணம்
செய்யவில்லை ...? "
" சார்..... என் மனைவியை நான் இப்போதும் காதலித்து கொண்டு
தான் இருக்கிறேன் . என் குழந்தைகள் என் நெஞ்சை விட்டு அகல வில்லை..."
இஸ்மாயில் பேசியது எனக்கு ஷாக் . அவர் எந்த பதட்டமும் இன்றி சர்வ
சாதாரமாக பேசினார்.
" சார் ...நான் சந்தோஷமாக வாழ்ந்த காலத்தை நினைத்தே என்
காலத்தை ஒட்டுகிறேன் ..."
" சார்....நீங்க மறுபடி கல்யாணம் செய்தால் வாழ்க்கை சற்று மாறுமே ..?"
" இல்லை சார். என் மனைவியை என்னால் மறக்க முடியவில்லை . இது
இப்படி இருக்க நான் எப்படி மறுகல்யாணம் செய்ய முடியும்... ? "
" சார் ...."
" ஆம் . சார் .நான் என் மனைவியை இப்போதும் காதலித்து கொண்டே
இருக்கிறேன் . மறு கல்யாணம் என் வாழ்வில் நினைத்து பார்க்கவே
முடியாது ...! "
இஸ்மாயில் எந்த வித வேதனை , துக்கம் எதுவுமே இல்லாமல் மெதுவாக
ஆனால் ஆணித்தரமாக பேசினார். அவர் பேச்சில் உண்மை இருந்ததது.
உறுதியும் இருந்ததது.
" சார் நீங்க ரொம்ப வித்யாசமானவர் ..."
" அப்படி எல்லாம் இல்லை. ...
நான் என் மனைவியை மிகுந்து காதலிதத்தேன் .
என் குழந்தைகள் மீது கொள்ளை பாசம் .
சார் ....நான் கிழம்புறேன் .....! "
அவர் சொல்லி விட்டு போய் விட்டார் . எனது லப் -டப் அதிகரித்தது .
இஸ்மாயில் மாமனிதர் ...!
அவரது காதல் அழிவு இல்லாதது ...!!
அவரது பாசம் எல்லை அற்றது ,,,!!!
அவருக்கு நிகர் அவர் மட்டுமே ...!! !!
இஸ்மாயில் என் உள்ளத்தை
உலுக்கியவர் ...!
R .சத்திய நாராயணன் சின்ன சேவகன் 07-10-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!