Tuesday, 17 January 2017





        சத்யன்             சத்திய பூ     பூ 02    இதழ் 01       18-01-2017

              ஜனநாயகமும் இல்லை ! சோசியலிசமும் இல்லை !!

ஓ ! இந்தியா !!
நமது தேசம். நமது இந்தியா. நாம் நாட்டுப்பற்றுடன் தான் இருக்கிறோம்.
ஆனால் நாடு சாமான்ய மனிதனை பற்றி நினைக்கிறதா ?
இல்லை. இல்லவே இல்லை.
அரசியல் சாசனத்தில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு ...ஒரு சோசியலிச நாடு
என்று கூவுகின்றது .
ஆனால் இது வெறும் தம்பட்டம் தான் .
பெரும்பான்மை மக்கள் பொருளாதார ரீதியில் மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
வறுமை, வேலையில்லா திண்டாட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது.
நகர்புறத்தில் பாட்டாளி வர்க்கம், நடுத்தர தட்டு மக்கள், மாநில மத்திய அரசு ஊழியர்கள்
அமைப்பு சாரா தொழிலாளிகள், உதிரி பாட்டாளிகள், கட்டுமான தொழிளார்கள், கடை
சிப்பந்திகள், என அனைவரும் தத்தளித்து வருகின்றனர்.
கிராமப்புறத்தை எடுத்துக்கொண்டால் விவசாயிகள், சிறு விவசாயிகள், மற்றும் கூலி
விவசாயிகள் அன்றாடம் வாழ்வதே பிரச்சினை என்ற வண்ணம் பரிதவிக்கின்றனர்.
இது ஜனநாயகமா ? இது சோசியலிசமா ??
இல்லை. இல்லவே இல்லை.
இது பணநாயகம். இது பணக்காரர்களுக்கான அரசு.
ஆம்.
இந்திய அரசு மக்களுக்கு அல்ல. இந்திய பாராளுமன்றம் மக்களுக்கான அரங்கம்
அல்ல. வெறும் சட்டம்  அதிகாரம் மட்டுமே கொண்ட அமைப்பு. அதில் எந்த கட்சி
ஆட்சிக்கு போனாலும் மக்களுக்கான சட்டங்கள் போடுவது என்பது இல்லை. வெறும்
கண் துடைப்புக்காக சில சீர்திருத்த சட்டங்கள் போடலாம். ஆனால் உண்மையில்
மக்களுக்கான சட்டங்கள் போடுவதில்லை.
ஆனால் மக்கள் இந்த மன்றத்தின் மேல் தான் நம்பிக்கை வைத்து உள்ளனர் . இது
மறுக்க  முடியாத உண்மை. அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியை பிடிப்பது மட்டுமே
நோக்கம்.. மக்கள் மீது அக்கறை துளிகூட கிடையாது.
இப்படி......இருக்கும் போது ....
சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்கள் ....மக்களுக்காக உழைக்க விரும்புவார்கள் ...
என்ன செய்ய வேண்டும் ?
ஆம் !
என்ன செய்ய வேண்டும் ?                                     சத்யன் 18-01-2017

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!