Saturday, 28 January 2017




             அந்தோ பரிதாபம் ! விவசாயிகளின் நிலை !!
        சத்யன்        சத்திய பூ      பூ 03    இதழ் 05     29-01-2017

நேற்று எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
சாராயம் விற்பவன் சக்கரவர்த்தியாக வாழ்கிறான்.
நமக்கு சாப்பாடு போடும் உழவன் சாகிறான் !
ஆம் ! இது முற்றிலும் உண்மை. சமீப காலமாக இந்தியா முழுவதும்
விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது.
       2015ல் மட்டும் ....
       சிறு விவசாயிகள்    8007
       கூலி விவசாயிகள்   4595
இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். மேலும் புள்ளிவிவரம்
வேண்டுவோர் நேற்றய இந்தியன் எக்ஸ்பிரஸ் (28-01-2017) பார்க்க.
கொடுமை ! கொடுமாயிலுக்கு கொடுமை !!
ஒன்று வறட்சியால் அறுவடை பாதிப்பு. பயிர் கருகி போகிறது. சில இடங்களில்
அதிக மழை ...பயிர்கள் அழுகி போகின்றன. விவசாயிகளுக்கு அரசு வழங்கும்
கடன்கள் முற்றிலும் பெரும் விவசாய்களுக்கே போய்  சேருகிறது. சிறு விவசாயிகள்,
கூலி விவசாயிகள் நிலை சொல்லி மாளாது. எந்த அரசிய கட்சியும் இந்த பிரச்னையை
முக்கியமாக கருதவில்லை.
       உச்ச நீதி மன்றம் இதை அவசர வழக்காக கருதி ஒரு உத்திரவு பிறப்பித்து உள்ளது.
எல்லா மணிலா அரசுகளும், மத்திய அரசும், யூனியன் பிரதேசங்களும் மற்றும் ரேசெர்வே வங்கியும்
இந்த விவசாய பிரச்சனை குறித்தும், அது குறித்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகள்
குறித்தும் 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இரு தினங்களுக்கு முன்
உத்திரவு பிறப்பித்து உள்ளது.
ஆம். வரவேற்கப்படவேண்டிய உத்திரவு.
மேலும் உடனடியாக விவசாயிகளை பாதுகாக்க ஒரு தேசிய கொள்கை திட்டமிடப் வேண்டும்
என வலியுறுத்தி உள்ளது.
       சட்டம் இயற்றும் பாராளுமன்றம் என்ன செய்து கொண்டு இருக்கிறது ? விவசாயிகள்
நாட்டின் உயிர்நாடி. இப்போது அது சாவை நோக்கி துடித்து கொண்டு இருக்கிறது. உச்ச
நீதி மன்றம் சட்டம் இயற்றுபவர்களுக்கு " தேசிய கொள்கை திட்டம்" விவசாயிகளை பாதுகாக்க

அவசியம் என்று வலியுறுத்தி உள்ளது.

      தூங்கி கொண்டுஇருக்கும் பாராளுமன்றம் விழித்து கொள்ளட்டும் !
      உடனே இறந்த விவசாய்களின் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் !
      அறுவடைக்கு தத்தளிக்கும் விவசாயிகளுக்கு நிவாரண/உதவி தொகை வழங்க வேண்டும் !!
      தேசிய விவசாய கொள்கை திட்டம் உடனே நிறைவேற்ற  வேண்டும் !!!
      இல்லையென்றால் ....
      மக்கள் விழித்து கொள்ளட்டும்.
      மாணவர்கள் விழித்து கொள்ளட்டும்.
      நாட்டின் உயிர்நாடி விவசாய்களுக்காக போராடுங்கள் !

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!