தேச பற்று ...!
சத்யன் சத்திய பூ இதழ் 06 பூ 03 30-01-2017
ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்கள் .
ஆம். அது உண்மையே.
எழுதின கையும் சும்மா இருக்காது. ஆம். எழுதி எழுதி பழக்கப்பட்ட கை
சும்மா இருக்காது. மீண்டும் மீண்டும் எழுத தூண்டும். என்ன எழுதுவது
என்பது பிரச்சனை அல்ல. எதை முதலில் சொல்வது எதை பின் சொல்வது
என்பது தான் பிரச்சனை.
நான் முதலில் இந்திய பிரச்சனை பற்றி எழுதினேன். ஒரு புதிய இந்தியன்
உருவாக வேண்டும் என கூறினேன். (பார்க்க எனது பழைய வலை பூக்கள்...)
அவனை எப்படி உருவாக்க முடியும் என்பதை சொல்ல வில்லை. அனால்
இன்று எல்லாவற்றிக்கும் முதன்மையானது பற்றி பேச போகிறேன்.
ஆம்.
ஆம்.
முதலில் தேவை "தேச பற்று...!".
தேச பற்று என்றால் என்ன ?
கிரிக்கெட் மேட்சில் இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பதோடு நின்றுவிடும் போக்கு
அல்ல. தேச பற்று என்பது விரிந்த, விசலமான பார்வை. ஒரு ஒருமித்த உணர்வு.
தேச வரைப்படத்தை வைத்து வழிபடுவது அல்ல. அல்லது பாரத மாதாவின் புகைப்படத்தை
வைத்து வழிபடுவது அல்ல.
பின் தேச பற்று என்றால் என்ன ?
விடை காண்போம் !!
தேசம் என்றால் மக்கள். மக்கள் இல்லமால் தேசம் என்பது இல்லை.
எனவே தேச பற்று என்பது இந்திய மக்களின் மீது பற்று !
பற்று என்றால் என்ன ?
மக்களின் நலனில் அக்கறை கொள்வது. மக்கள் முன்னேற வேண்டும் என நினைப்பது.
மக்களின் நலன்களுக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என யோசிப்பது. இது மட்டுமல்ல.
தேவை என்றால் மக்களின் நலனுக்காக போராடுவது.
ஆம்.
ஆம்.
மக்களின் நலனுக்காக தன்னலமின்றி போராடுவது...
ஆம். இதுவே தேச பற்று. இன்றைய இளைஞர்களிடம் அரிதாகவே காணமுடிகிறது.
இளைஞர்களுக்கு தேச பற்று ஊட்ட ஒரு அமைப்பும் இல்லை. அவர்களுக்கு தலைமை தாங்க
எந்த சக்தியும் இல்லை. இதுவே நாட்டின் மிக பெரிய பிரச்சனை.
எனவே தேச பற்று மிக்க அமைப்புகள் ஒன்று பட வேண்டும். வெறும் குறுங்குழுவாதாம்
பேச கூடாது. மக்களின் நலனில் அக்கறை இருந்தால் மக்களுக்காக ஒன்று பட வேண்டும்.
தியாக உணர்வுடன் தலைமை தங்க வேண்டும்.
எனவே மக்களுக்கு இன்றியமையாத தேவை தேச பற்று.
ஆம். தேச பற்று மட்டுமே நம்மை நாமே காத்துக்கொள்ள உதவும்.
எனவே நாட்டின் பாட்டாளிகள், விவசாயிகள், கூலி விவசாயிகள் மற்றும் மாணவர்கள்
இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் நேசிக்க வேண்டும்.
வேறு வார்த்தையினால் அல்ல.
செயலில் காட்டவேண்டும் !
எனவே தேச பற்றுடன் இருப்போம் !!
மக்கள் நலனே நம் நலன் !!!
இந்தியா வாழ்க !
இந்தியர்கள் வாழ்க !!
ஜயது பாரதம் !
ஜயது மனுக்குலம் !!
தேச பற்று ...!

No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!