Sathyan Sathia Poo Poo 02 Ithal 05 22-01-2017
மாணவர்களே ! அடுத்து
என்ன ?
வெற்றி ! வெற்றி !!
வெற்றி !!!
மாணவர் ஒற்றுமைக்கு
கிடைத்த வெற்றி !
மாணவர்களின் அமைதியான
போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி !!
மாணவர் சக்தி
மகத்தானது. இதை மாணவர்களே இப்போது தான் உணர்ந்து கொண்டு இருப்பார்கள்.
ஜல்லிக்கட்டு
போராட்டம் முடிவுக்கு வந்ததும் தயவுசெய்து வெற்றி பெருமிதத்தில் கலைந்து
விடாதீர்கள் . ஒரு உறுதியான வலுவான மாணவர் அமைப்பை தமிழகம் முழுவதும் கட்டுங்கள் .
இதுவே சமயம் . இதுவே தருணம் . சரித்திரத்தில் உங்கள் பெயர் நிலைக்கும். உங்களுக்கு
அடுத்து இலக்கு என்ன ?
தமிழகம் முழுவதும்
ஏழை மக்களுக்கு கல்வி என்பது எட்டாத ஒன்றாகவே உள்ளது. உங்களுக்கு தெரியாதது
ஒன்றும் இல்லை. உயர் கல்வி என்பது பணம் பறிக்கும் நிலையில் தான் உள்ளது. இந்தியா
ஒரு சோசியலிச நாடு என அரசியல் சாசனத்தில் தம்பட்டம் அடித்துகொள்கிறது. ஆனால்
நடைமுறையில் எவ்வாறு உள்ளது ? பெரும் கல்வி நிறுவனங்கள் மக்கிளிடம் பணம் பறிக்கும்
முதலைகள் ஆகவே உள்ளன. இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்.
இதை யாரால் சாதிக்க
முடியும் ?
சந்தேகம் இல்லை.
உங்களால் ...உங்களளால் மட்டுமே முடியும் !
ஆம் .
கல்வி நிறுவனங்களை
தேசிய உடமையக்குவோம் !
உயர் கல்விவரை
அனைவர்க்கும் இலவசக்கல்வி !!
இதுவே உங்களது
முழக்கமாக இருக்க வேண்டும் .
நீங்கள்
படித்துக்கொண்டு இருகின்றீர்கள். எனவே இந்த முழக்கங்களுடன் மெல்ல மெல்ல
போராடுங்கள். உங்களது கோரிக்கையின் நியாயத்தை எல்லோருக்கும் முக்கியமாக அரசுக்கு
புரிய வையுங்கள்.
உறுதியுடன் தொடர்ந்து
போராடினால் வெற்றி நிச்சயம் .
மாணவர் சக்தி எதையும்
சாதிக்கும் . உங்களுக்கு என்று கடமை
உள்ளது.
தமிழக மாணவர்களே !
அமைப்பாக
ஒன்றுபடுங்கள் !!
இலவசக்கல்வி என்று
முழக்கம் செயுங்கள் !!!
போராடுங்கள் !!!!
வெற்றி நிச்சயம். இது
உறுதி. வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!