Monday, 16 January 2017





சத்யன்          சத்திய பூ         பூ 01      இதழ் 06   17-01-2017

     ஓ ! ஓ !! தமிழகமே !!! சீறி பாய்ந்த தமிழக காளைகளே !!!!

ஓ ! இந்தியா !!
கட்டுரை நேற்று தான் ஆரம்பித்தேன். அதற்குள் நேற்று தமிழகத்தில் நடந்த சம்பவங்கள்
என்னை சில கருத்துக்கள் பதிவு செய்ய தூண்டி விட்டன.
ஓ ! ஓ !! தமிழகமே !!!
சீறி பாய்ந்த தமிழக காளைகளே !!!!
ஆம். நேற்று தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், அலங்காநல்லூரிலும் நடந்த
சம்பவங்கள் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
தென் மாவட்டங்களில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி பல இடங்களில் மஞ்சு விரட்டு
நடந்து உள்ளது. இதை விட பெரிய விஷயம் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில்
லட்ச கணக்கில் இளைஞர்களும், மாணவர்களும் ஒன்று சேர்ந்தது மிக பெரிய விஷயம்.
அவர்கள் தடியடிக்கும் பயப்படவில்லை. காவல் துறையின் கெடுபிடிகளுக்கும் அஞ்சவில்லை.
அவர்களது ஒரே கோரிக்கை ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதே.
ஜல்லிக்கட்டு நடைபெற வேணுமா அல்லது தடை செய்யப்பட வேண்டுமா என்ற நோக்கில்
நான் இந்த பிரச்னையை பார்க்கவில்லை.
எந்தவிதமான அரசியல் தொடர்பும் இன்றி, எந்தவிதமான சாதிய தொடர்பும் இன்றி
தன்னெழுச்சியாக லட்ச கணக்கில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தது மிக
முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நமது இளைஞர்கள் யாருக்கும் சளைத்தவர்கள்
அல்ல. தங்களுது கோரிக்கைக்காக அச்சமின்றி திரண்டது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஆனால் இத்தகைய இளைஞர்களுக்கு தலைமை தாங்க கூடிய நல்ல வழிகாட்டும் சக்திகள்
இல்லை என்பதே தெரிய வருகிறது.
ஆம் !
நமது மாணவர்கள், இளைஞர்கள் முற்போக்கு சிந்தனைய உள்ளவர்கள் தான் . ஆனால்
அவர்களுக்கு நல்வழி காட்ட சரியான சமூக தலைமை சக்தி இல்லை.
மாநில, மத்திய அரசின் தடையை மீறி, தடியடி, கைது எல்லாவற்றையும் மீறி போராட்டத்த்தில் ஈடுபட்டது புரட்சிகர அம்சம் உள்ளதை குறிக்கிறது.
இந்த நேர்மையான சக்தியை சமூக பிரச்சனைகளுக்கு  எதிராக அவர்கள் காட்ட வேண்டும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின்
தற்கொலைகளுக்கு எதிராக ஒன்றுப்பட்டு போராட வேண்டும். அல்லது கல்வி துறையில்
அனைத்து மட்டங்களிலும் இலவச கல்வி கோரி போராடலாம். கல்வி மிக முக்கியமான
பிரச்சனை. உயர்கல்வி என்பது சாதாரண மக்களுக்கு எட்டாமலே உள்ளது. இதை எதிர்த்து
போராட அவர்கள் முன் வர வேண்டும். இதுபோல நாட்டின் எந்த பிரச்சினை ஆனாலும் சரி,
அல்லது சமூக பிரச்சனையானாலும்  சரி இளைஞர்கள் முன்வந்து போராடினால் வெற்றி
நிச்சயம்.
மாணவர் சக்தி பெரும் சக்தி !
இளைஞர் சக்தி மாபெரும் சக்தி !!
இதை நேற்றைய சம்பவம் தெள்ளத்தெளிவாக காட்டிவிட்டது.
ஆம்.
நேற்று.....
தமிழகத்தில்.....
சீறி பாய்ந்த காளைகளே !
இளைஞர்களே !!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !!!

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!