Saturday, 14 January 2017





சத்யன்             சத்திய பூ       15-01-2017      பூ 01     இதழ் 04

                                 உழவர் தினம்

சூரியனை கும்பிட்டாச்சு.
இன்று மாட்டை கும்பிட்டாச்சு .
நாளை மனிதனை நினைக்க வேண்டாமா ?
ஆம் !
உழவர் தினத்தை தான் கூறுகிறேன்.
இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களில் தான் உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மை
மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். உழவன் சேற்றில் காலை வைக்காவிடில்
நாம் சோற்றில் கை வைக்க முடியாது....இப்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டுரை எழுத
மட்டுமே நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். நகரங்களில் உள்ள படித்த வர்க்கங்கள் நமது
நாட்டின் கிராமங்களை பற்றி யோசிப்பது இல்லை. இந்தியாவில் 50% மக்கள் வறுமையில்
வாழ்கின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன அர்த்தம் ? 3 வேளை
சாப்பிட்டிற்கு வழி இல்லமால் இருக்கின்றனர். மேலும் 30% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழை
வாழ்கின்றனர். இதற்கு அர்த்தம் என்ன ? அதாவது ஒரே ஒரு வேளை சாப்பாட்டிற்கு தத்தளித்துக்கொண்டு இருப்பவர்கள். நாம் இவர்களை பற்றி மனதார யோசிப்பது உண்டா ?
இல்லை. இல்லவே இல்லை.
நிற்க.
தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமை என்ன ?
பத்திரிகைகளில் ஒரு ஓரத்தில் செய்தியை பார்க்கலாம்.
வாழ முடியாமல் அன்றாடம் பல தற்கொலைகள் ! ! !
மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போகிவிட்டது. விவசாயிகளின் தற்கொலைகள்
நாட்டிற்கு நல்லது அல்ல. இது கொடுமை. கொடுமையிலும் கொடுமை. சுதந்திரம் கிடைத்து
70 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றும் தமிழக்தில் மட்டும் அல்லாது தேசம் முழுக்க
விவசாயிகள் வாழ வழி இன்றி தற்கொலை செய்கின்றனர் என்றால் இந்தியா ஒரு
சோசியலிச நாடு என்று அரசியல் சாசனத்தில் தம்பட்டம் அடித்து கொள்வதில் அர்த்தமே
இல்லை.
நாட்டு மக்களின் வாழ்கை மீது அக்கறை வைத்துள்ள இயக்கம் நாடு தழுவி இல்லை.
எல்லாம் சுய நல கும்பல்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றாய் இல்லை. குழுவாதம்,
பிரிவினைவாதம், என்று பிளவுபட்டு உள்ளனர்.

விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு உள்ளது. ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர இயக்கம்
மட்டுமே இதை சாதிக்க முடியும். அந்த நாள் வரு வரை காத்துஇருப்போம்.
என்ன தீர்வு ?
என்ன செய்ய வேண்டும் ?
ஒரே பதில். ஆம்...ஒரே பதில்.
உழுபவனுக்கே நிலம் சொந்தம் !
ஆம் !
உழுபவனுக்கே நிலம் சொந்தம் ! !                          15-01-2017

1 comment:

  1. Please READ ! SHARE !! COMMENT !!!
    Best Wishes.
    contactsrivivek@gmail.com

    ReplyDelete

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!