Sunday, 15 January 2017





சத்யன்            சத்திய பூ         பூ 01    இதழ் 05   16-01-2017

                            ஓ ! இந்தியா !!
இந்தியா எங்கு சென்று கொண்டிருக்கிறது ? சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஓடி
விட்டது. ஆனால் நாடு முன்னேறியுள்ளதா என்ற கேள்வி பிறக்கிறது. இந்தியாவில்
தொழிலும், விவசாயமும் எந்த நிலையில் உள்ளது ? மக்கள் நிம்மதியுடன் வாழ்கிறார்களா ?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கண்டுபிடிக்க முயற்சித்தால் நமக்கு மிகவும் சோகமான
முடிவுகளே வரும். இங்கு பெரும் முதலாளிகளும் , பெரும் நிலஉடமையாளரும் தான்
மக்களை சுரண்டி சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். மக்கள் நிலை ? ஐயோ ! பரிதாபம் !!
நகர்ப்புறங்களில் படித்துவிட்டு வேலை இல்லமால் தவிக்கும் இளைஞர்கள் ஏராளம். நகர்ப்புற
மக்கள்....நடுத்தர மக்கள் , கீழ்த்தட்டு மக்கள் , உதிரி பாட்டாளிகள் என அனைவரும் விலைவாசி
ஏற்றதால் , பணம் இன்றி தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள் ! கிராமப்புறம் எப்படி ?
ஐயோ ! ஐயோ !! விவசாயிகள் வறுமை தாளாமல் தற்கொலை செய்து  கொண்டு இருக்கிறார்கள்.
கூலி விவசாயி, சிறு விவசாயி மற்றும் விவசாயி ஆகிய அனைவரும் வாழ முடியாமல் தினமும்
ஒரு வேளை சோற்றுக்கே பரிதவிக்கின்றனர்.
மொத்தத்தில் பெரும்பான்மையான இந்திய மக்கள் வாழ்வு சொல்லும்படி இல்லை. மிகுந்த
சிக்கல்களுடன், பொறுமையுடன், சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
நகரம் ஆனாலும் சரி ...கிராமம் ஆனாலும் சரி ....மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
இது மறுக்கமுடியாத, மறைக்கமுடியாத உண்மை. மக்களுக்கு என்ன மற்றம் தேவை என்றுக்கூட
தெரிய வில்லை. ஆனால் கஷ்டங்களை தாங்கும் சக்தி குறைந்து வருகிறது. எதாவது செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். அவர்களுது கருத்தில் தவறே இல்லை.
நாட்டில் 50% மக்கள் வறுமையில் உள்ளனர். 30% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர்.
அதாவது ஒரே ஒரு வேளை சாப்பாட்டிற்கு தத்தளித்து கொண்டு  உள்ளனர். இது பரிதாப நிலை.
இந்தியாவின் அவலநிலை. இதற்கு யார் காரணம் ? அரசியல் சாசனத்தில் இந்தியா ஒரு
சோசியலிச நாடு என்று வேறு தம்பட்டம் அடித்து கொள்கிறது. இது வெட்கக்கேடு.

தொடர்ந்து இப்பிரச்சினைகளுக்கு விடை காண முயல்வோம் !
இந்தியா இப்படி இருக்க அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டு உள்ளன ?
சமூகம் மாற்றம் வேண்டுபவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ?
எல்லாவற்றையும் அலசுவோம்.
நாளை சந்திப்போம் !
ஓ ! இந்தியா !!

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!