Thursday, 26 January 2017
சத்யன் சத்திய பூ பூ 03 இதழ் 03 27-01-2017
பத்ம ஸ்ரீ மாரியப்பன் !
நேற்று குடியரசு தினம். டெல்லியில் இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் 89 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. அதில் ஒருவர் தான் தமிழகத்தை
சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு.
பத்ம ஸ்ரீ விருதுகள் பலருக்கு வழங்கப்பட்ட போதிலும் அது மாரியப்பனுக்கு கிடைத்தது
ஒரு அரிய சம்பவம் .
யார் இந்த மாரியப்பன் ?
தமிழக்தின் சேலம் மாவட்டத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சிறு
வயதிலே ஒரு விபத்தில் காயம் அடைந்து நிரந்தர ஊனம் ஆனவர். மாற்று திறனாளியாக
இருந்தபோதும் அவர் மனம் தளர வில்லை. விளையாட்டில் தீவிர வேட்கை, கடின பயற்சி,
இடைவிடாத முயற்சி....பெற்றவர்.
ஆம். இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே ஒருவரால் சாதிக்க முடியும். ஏற்கனவே சாதாரண
குடுப்பதில் பிறந்து உலகின் உச்சிக்கு சென்ற சச்சின் டெண்டுல்கரை யாரும் எளிதில் மறந்து
விட முடியாது.
எந்த சமுதயமாக இருந்தாலும் தனி நபர் சாதனை என்பது இருக்கவே செய்யும்.
மாரியப்பனின் சாதனை என்ன ?
சென்ற வருடம் ரியோ நகரில் (2016) மாற்று திறனாளிகளுக்காக பாரா ஒலிம்பிக்ஸ்
நடைபெற்றது. அதில் உயரம் தாண்டுதலில் சாதனை செய்த மாரியப்பன் இந்தியாவிற்கு
மட்டுமில்லமால் தமிழகத்திற்கும் பெருமை தேடி தந்த வண்ணம், போட்டியில் முதல்
இடம் பெற்று தங்கம் வென்றார். இதில் முக்கியமாக கவனிக்க தக்கது ...அவர் ஒரு ஏழை !
ஆம் !
ஏழை !!
மாற்று திறனாளி !!!
தங்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார் .
அவர் பத்ம ஸ்ரீ விருதுக்கு முழு தகுதி பெற்றவர். அவர் இந்த விருதை தன்
தாயிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
இந்தியாவில் தாய்ப்பாசம் அதிகம். தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
அதை மீண்டும் நிரூபித்து உள்ளார் மாரியப்பன்.
பத்ம ஸ்ரீ மாரியப்பனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
தொடர்ந்து உலக போட்டிகளில் வெற்றி பெற்று நம் தாய்நாட்டிற்கு பெருமை
சேர்க்க நல்வாழ்த்துக்கள்.
சபாஷ் ! சபாஷ் !!
முன்னுதாரணமாக திகழும் மாரியப்பனுக்கு மேன்மேலும் பரிசுகளும் ,
பாராட்டுகளும் வந்து குவியட்டும் !
அவரது வெற்றி பாதை தொடரட்டும்.
சபாஷ் ! பத்ம ஸ்ரீ மாரியப்பா !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!