சத்யன் சத்திய பூ பூ 01 இதழ் 03 14-01-2017
மாட்டு பொங்கல் !
நாளை மாட்டு பொங்கல்.
மாடை வழிப்படுவது தவறா ? பிற்போக்கானதா ??
நிச்சயம் இல்லை.
சமுதாய சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் தான் இந்தியை பற்று எழுதிய கட்டுரை
ஒன்றில் " இவர்கள் (இந்தியர்கள்) மாட்டையும், குரங்கையும் (அனுமன்) வழிபடுகிறார்கள்.
இவர்கள் எங்கே முன்னேற போகிறார்கள். இவர்களது கலாச்சாரத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்
அழித்துவருகிறது. இது விரும்பத்தக்க அழிவு" என எழுதினார். ஐரோப்பாவின் பாட்டாளி வர்க்க
நிலை குறித்து சிந்திப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்த மார்க்ஸ் இந்தியாவை பற்றி
சரியாக அறிந்து வைத்துஇருக்க வில்லை என்பதே உண்மை. மார்க்ஸ் இந்திய தத்துவம் , வேத ஞானம், மக்கள் (இந்திய) கலாச்சாரம் குறித்து ஆழ்ந்து சிந்திக்க வில்லை ...எழுத வில்லை
என்பதே முழு உண்மை.
நிற்க.
மாடை வழிபடுவது தவறா ?
நிச்சயம் இல்லை. நிலத்தை உழ மட்டும் அது பயன்படவில்லை. அதன் சாணம் கூட மிக
சிறந்த உரமாக உள்ளது. மேலும் வெறும் புல்லை தின்று அது பால், மோர் , தயிர் , நெய் மற்றும் வெண்ணை என்று அள்ளி அள்ளி கொடுக்கின்றது. பாட்டாளி வர்க்கமும், விவசாய வர்க்கமும்
விரும்பி குடிக்கும் "சாயா" (தேநீர்) மாடில்லாமல் இல்லவே இல்லை.
இப்படி மனிதனுக்கு அள்ளி அள்ளி தரும் மாட்டை, பசுவை அதன் உயர்ந்த பங்கிற்காக
மதிப்பு அளிப்பதும், ஏன் ? வழிபடுவதும் தவரே இல்லை. இதை நாம் நன்கு உணர்ந்து
கொள்ள வேண்டும்.
இது பிற்போக்கானது அல்ல.
இயற்கையை மதிப்பது மனித சுபாவம். இயற்கையை முதலாளி வர்கம் மதிக்காமல்
போனது தான் இன்று உலகம் சந்திக்கும் "வெப்பமயமாதல்"-க்கு காரணம். இது மனித இனத்திற்கே
அச்சுறுத்தும் விஷயமாக உள்ளது. இதை எதிர்த்து அனைத்து வர்க்கங்களும் போராட வேண்டிய
சூழ்நிலை உருவாகி உள்ளது.
எனவே இயற்கையை மதிப்பதும், அதை பாதுகாப்பதும் இந்தியர்களின், தமிழர்களின் கடமை.
பொறுப்பு. எனவே மாட்டு பொங்கலை கொண்டாடுவது பிற்போக்குத்தனம் அல்ல.
நன்றி மறப்பது நன்றன்று.
ஆம் !
பசு நிச்சயம் புனிதமானது தான்.
மதிப்போம்.
மாட்டு பொங்கலை கொண்டாடுவோம்.
தமிழக மக்கள் கலாச்சாரம் ஓங்குக !!! 14-01-2017
Please READ ! SHARE !! COMMENT !!!
ReplyDelete