சத்யன் பூ 001 இதழ் 001
ஜல்லிக்கட்டா ? சல்லிக்கட்டா ?
எல்லோரும் இதை பற்றி பேசியும் , எழுதியும் வருகின்றனர். நான் அந்த சர்ச்சைக்குள்
போக விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு அல்லது சல்லிக்கட்டு எது சரி ?
இதுதான் விஷயம். விடயம் அல்ல. புரிந்து இருக்கும் என நம்புகிறேன். முற்போக்குவாதிகள்
தமிழில் "ஜ "-வை பயன்படுத்துவதில்லை. சல்லிக்கட்டு என்று எழுதுகின்றனர். இது தமிழ் பற்று
என்று கேட்டால் சொல்லலாம். ஆனால் 'ஜ"-வுக்கு பதிலாக 'ச' பயன்படுத்துவது அல்லது 'ஷ'-வுக்கு
பதிலாக 'ச' பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது. இது தமிழகத்தின் 'ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்' தவறான விளைவு. தாய் மொழி பற்று இருக்கலாம். ஆனால் மொழி வெறி
இருக்கக்கூடாது. எந்த நல்ல சமூக சிந்தனையாளரும் ஒரு மொழியை எதிர்த்ததாக சரித்திரம்
இல்லை.
நான் நேராய் விஷயத்திற்கு வருகிறேன். விடயத்திற்கு அல்ல. விஷயம் என்று சொல்வதால்
தமிழ் பற்று பொய் விடுமா ? நிச்சயம் இல்லை. சம்ஸ்கிருத அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் தான்
இது போல் வாதிடுவார்கள். நான் தமிழ் பற்று மிக்கவன். சமஸ்கரித்ததை வடமொழி என
ஒதுக்குபவன் அல்ல. நம்மால் சமஸ்கரித்ததை முழுசாக நிச்சயம் ஒதுக்க முடியாது.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !
இது சமஸ்க்ரிதமா ? அல்லது தமிழா ? குழம்பி போகாதீர்கள். இது முழுக்க முழுக்க தமிழ்
வாக்கியம் தான். இது முழுக்க முழுக்க சமஸ்க்ரித வாக்கியம் கூட. 'ஜ'-வை 'ச'-வாகவும்,
'ஷ'-வை 'ச'-வாகவும் மாற்றலாம். ஆனால் தமிழில் அப்படியே பயன்படுத்தப்படும் சமஸ்க்ரித
வார்த்தைகளுக்கு என்ன செய்ய போகிறீர்கள் ? எண்ணற்ற சமஸ்க்ரித வார்த்தைகள் அப்படியே
தமிழில் பயன்பாடு வருகின்றன. கோபுரம், தரிசனம், கோடி, புண்ணியம் மட்டும் சமஸ்க்ரித
வார்த்தைகள் அல்ல. அதிகம், சீக்கிரம், புராதனம், நூதனம், அபிப்பிராயம், உபயம் ....இப்படி
சொல்லிக்கொண்டே போகலாம். சரி ....எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். 'லட்சம்' மற்றும்
'கோடி' முற்றிலும் சமஸ்க்ரித சொற்களே. லட்சம், கோடி இதற்கு தமிழ் சொற்கள் உள்ளனவா ?
லட்சம், கோடி என்ற சொற்களை பயன்படுத்திக்கொண்டு ஜல்லிக்கட்டை 'சல்லிக்கட்டு' என்றும்
'விஷயத்தை' 'விடயம்' என்றும் எழுதுவது சரியான சிந்தனைக்கு முரணாக உள்ளது.
தமிழ் பற்று சிந்தனையில் இருக்கவேண்டும். வடமொழி அல்லது சமஸ்க்ரித எதிர்ப்பு என்பது
தவறான ஒன்று. நான் உறுதியாக கூறுவேன் " நாம் சமஸ்க்ரித சொற்களை பயன்படுத்தாமல்
அன்றாட தமிழில் பேசவே முடியாது."
நான் தாய்மொழி தமிழை உயிராக நேசிக்கிறேன்.
சமஸ்க்ரிதம் முரணற்ற அறிவார்ந்த மொழி என்பதை உணர்ந்து உள்ளேன்.
சமஸ்க்ரித சொற்கள் தமிழில் தமிழ் சொற்களாகவே எண்ணற்ற எண்ணிக்கையில் பயன்
பட்டு வருகின்றன.
தயவு செய்து மொழி பற்று என்று கூறி மொழிவெறிக்கு ஆளாகாதீர்கள்.
சமஸ்க்ரித எதிர்ப்பு என்பது தமிழ் பற்று ஆகிவிடாது.
இது சத்யம்.
சத்யன் - 13-01-2017
Please READ ! SHARE !! Comment !!!
ReplyDeletePeasants Day !
contactsrivivek@gmail.com
15-01-2017
BEST WISHES. R. SATHIA NARAYANAN SRI VIVEK SATHYAN