Friday, 20 January 2017




சத்யன்          சத்திய பூ       பூ 02      இதழ் 04    21-01-2017

              புரட்சிகர மாணவர் அமைப்பு உருவாகட்டும் !!!

      புரட்சிகர கருத்து இல்லமால்
      புரட்சிகர நடைமுறை இல்லை.
      ஆம் !
      புரட்சிகர அமைப்பு இல்லாமல்
      புரட்சிகர நடைமுறை இல்லை.
      உறுதியுடன் போராடும் மாணவர்களே !
      இளம் சிங்கங்களே !!
      புதிய தமிழர்களே !!!
      உங்கள் போராட்டம் வெற்றிப்பெறும் நிலைக்கு வந்துவிட்டது.
      உங்களது ஒன்றுபட்ட அறைகூவல் தமிழகத்தை குலுக்கிவிட்டது.
      தமிழ் மக்கள் கலாச்சாரம் காக்க அறைகூவியவர்களே !
      உங்கள் இலக்கு நிறைவேறப் போகிறது.
      அடுத்து என்ன ?
      அடுத்து என்ன ??
      ஜல்லிக்கட்டு நடந்தால் மட்டும் போதுமா ?
      உங்கள் இலக்கு இதுமட்டும் தானா ??
      யோசியுங்கள்.
      உங்கள் சக்தியை நீங்கள்  இப்போது உணர்ந்து இருப்பீர்கள்.
      அடுத்து நீங்கள் செய்ய வேண்டியவை ஏராளம் .
      முதலில் நீங்கள் உங்கள் கொள்கையை வரையறை செய்யுங்கள்.
      இந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நீங்கள் செய்ய வேண்டியவை
      ஏராளம். இந்த நாட்டில் பரவிவரும் அந்நிய கலாச்சாரத்தை அடியோடு
      வேரறுக்க வேண்டும்.
      தமிழக மக்களின்  நல்வாழ்வும் அவர்களது கோரிக்கைககளுக்கும் நீங்கள்
      தான் வழிகாட்ட வேண்டும்.
      இது மிக பெரிய பொறுப்பு.
      உங்களால் முடியும்.
      உங்களால மட்டுமே முடியும்.
      அதற்கு தேவை ஒரு புரட்சிகர மாணவர் அமைப்பு.
      எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு வைத்து கொள்ளாதீர்கள்.
      சுதந்திரமான சுயமாக சிந்திக்கும் அமைப்பாக இருக்கட்டும்.
      இது மிக மிக மிக அவசியம்.
      ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலைமை  தோன்றும்.
      அந்த புரட்சிகர தலைமையின் கீழ் தமிழகம் முழுவதும் ஒரு
      அமைப்பை கட்டுங்கள். அந்த அமைப்பு முழு  ஜனநாயக அமைப்பாக
      இருக்கட்டும்.
      இந்த பணநாயக சமுதாயத்தில் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாமல்
      உள்ளது. எல்லா தனியார் கல்வி நிறுவனங்களையும் தேசிய உடமை
      ஆக்கி உயர் மட்ட கல்வி வரை எல்லோர்க்கும் இலவச கல்வி என்பதை
      போராடித்தான் பெற்றாக வேண்டும்.
      ஆம்.
      இதுதான் உங்களது இலக்கு.
      இதை படிப்படியாக போராடி பெற்றே தீர வேண்டும்.
      கூடவே நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்.\
      எனவே....
      மாணவர்களே ....
      புரட்சிகர சிங்கங்களே .....
      புதிய புரட்சிகர அமைப்பை காட்டுங்கள்.
      ஆம்.
      தமிழகம் முழுவதும் பலமாக மிக பலமாக உயிரிய லட்சியத்துடன்
      மாணவர் அமைப்பை துவங்குங்கள் !
      இது காலத்தின் அறைகூவல் !!
      இந்திய சரித்திரத்தில் உங்களை, உங்களது போராட்டங்களை,
      உங்களுது லட்சியங்களை பதிவு செய்யுங்கள்.
      வாழ்த்துக்கள் !
      புரட்சிகர மாணவர் அமைப்பை துவங்குங்கள் !!
      புதிய தமிழகம் படையுங்கள் !!!
      புதிய இந்தியாவிற்காக போராடுங்கள் !!!
      வெற்றி நிச்சயம்.
      ஆம்.
      இது உறுதி. இது சத்யம். 
      

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!