Monday, 23 January 2017






          சத்யன்      சத்திய பூ      பூ 02    இதழ் 07      24-01-2017

                         வருந்துகிறேன் ...!

மாணவர்களே !
நீங்கள் பல நாட்கள் மிகுந்த கட்டுக்கோப்புடன் போராடினீர்கள். சென்னையில்
மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் கண்ணியத்துடன் ஒழுங்குமுறை தவறாது
போராடினீர்கள்.
உங்கள் போராட்டம் வெற்றி பெற்றது. மகத்தான வெற்றி !!
வெற்றியை கொண்டாட வேண்டிய தருணத்தில் கோட்டை விட்டு விட்டிர்கள்.
பல ஊர்களில் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும்போது மெரினாவில் மட்டும்
ஒரு பகுதியினர் செல்ல மறுத்தனர். அதுகூட பரவாயில்லை.

ஆனால் கலவரம் வெடித்தது ஏன் ?
காவல் நிலையத்திற்கு தீ வைத்தது யார் ??
கட்டுக்கோப்புடன் வெற்றிபெறும் வரை போராடிய நீங்கள்...
கலவரத்திற்கு காரணமாக இருக்க முடியாது  என கருதுகிறேன் .
சில சமூக விரோத சக்திகள் உள்ளே நுழைந்து இதை செய்திருக்கலாம் .
அந்த சக்தியை நீதிக்கு முன் கொண்டு வர வேண்டும்.
நீஎங்கள் தான் உங்கள் மீது வீழ்ந்துள்ள பழியை துடைக்க வேண்டும்.
ஒரு வேளை ...
உணர்ச்சி பெருக்கில் மாணவர்களே  ஈடுபட்டிருந்தால்  அது  மிக மிக தவறு.
வன்முறையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் கட்டயாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
எனக்கு என்னமோ மாணவர்கள் இதை செய்து இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
சரி. சரி. சரி.
முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்.
நடந்த சம்பவங்கள் நடக்க கூடாதவை. இனி பேசி பயன் இல்லை.
உங்கள் போராட்டம் வெற்றியே !
இப்போது தமிழகம் முழுக்க ஒரு உறுதி வாய்ந்த மாணவர் அமைப்பை
துவக்குங்கள்.
அமைப்பு இன்றி எதையும் சாதிக்க முடியாது.
ஒற்றுமை மட்டும் போதாது, தலைமை வேண்டும். இந்த தருணத்தில் தான்
நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த அரசியல் கட்சி அல்லது
சாதிய அமைப்பு போன்ற பிற்போக்கு தலைமைகள் உங்களை அணுகுவார்கள்.
ஏமாந்து விடாதீர்கள் !
மறுபடியும் கூறுகிறேன் ஏமாந்து விடாதீர்கள்.
வெற்றி கொண்டாட்டத்தை ஒரு மாணவர் அமைப்பை உருவாக்கி
கொண்டாடுங்கள்.
உங்கள் சக்தி அபாரமானது . மகத்தானது . நாட்டிற்கு தேவையானது !
மாணவர்களே !
மாணவர் சங்கம் துவங்குங்கள்.
வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!