மெரினா...!
நான் ஒரு பெண்.
இளம்பெண். இந்த
வருடம் தான் கல்லூரியில் சேர்ந்தேன்.
நான் எங்க அப்பா
அம்மாவிற்கு ஒரே பெண். அவர்களுக்கு
இப்போதே என் கல்யாண
பிரச்சனை பெரிதாக உள்ளது. ஆனால் எனக்கு கல்யாணத்தில் ஆர்வம் இல்லை. நன்கு
படித்து பட்டம்
வாங்கி குடும்பத்திற்கு வேலைக்கு சென்று
அப்பா அம்மாவை
காப்பாற்ற வேண்டும் என்பதே என் எண்ணம். எங்கள் குடும்பம் மிகவும் பின்தங்கிய
குடும்பம்.
என் பெற்றோருக்கு
வேறு குழந்தைகள் இல்லை. எனவே
என்னை போற்றி
வளர்த்தார்கள். என் கல்யாணம் மட்டுமே அவர்களுது குறிக்கோள். எனது எண்ணமோ படிப்பு
...படிப்பு ...படிப்பு மட்டுமே.
நான் முதலவது
செமஸ்டரில் எல்லா பாடங்களிலும் எண்பது சதவிதத்திற்கு மேலே தான். நான் தான்
கல்லூரியில் முதல் மாணவி. எனக்கு சந்தோஷமாக இருந்தது. என் பெற்றோரும் மகிழ்ந்தனர்.
நான் என் புத்தகங்கள், மற்றும் நோட்டு புத்தகங்களை கூட வெகு பத்திரமாக அட்டை
போட்டு பள்ளி மாணவி போல் புதிதாக வைத்துக் கொள்வேன். படிப்பு என்றால் எனக்கு
உயிர்.
கட் அடித்துவிட்டு
சினிமா செல்வது எல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அதே போல் ஸ்டிரைக் எல்லாம்
எனக்கு சுத்தமாக பிடிக்காது. முதல் செமஸ்டர் முடிந்து இரண்டவாது செமஸ்டர்
இப்போதுதான் கல்லூரி துவங்கி இருந்தது. எப்போதும் போல் கல்லூரிக்கு இன்றும்
சென்றேன்.
பொங்கல் முடிந்து
வகுப்புகள் ஆரம்பம் ஆகின. எனக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரியாது.
படிப்பை தவிர வேறு எதிலும் நான் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இன்று வகுப்பு
நடந்து கொண்டிருக்கும்போது சில சீனியர் மாணவர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள்
ஆக்ரோஷமாக இருந்தனர். பேராசிரியர் அவர்களை தடுக்க வில்லை. வந்திருந்த சீனியர்
மாணவர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான்.
“ மாணவர்களே ! நாம்
அனைவரும் தமிழர்கள். நமது கலாச்சாரத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும். நமது சக்தி
நமக்கே தெரியாது. மாணவன் நினைத்தால் நடக்காதது எதுவும் இல்லை. இப்படிப்பட்ட
சுழலில்
நேற்று முன்தினம்
மதுரை அலங்கானலூரில் நமது மாணவர்கள் மற்றும் தமிழக இளைஞர்கள் நமது வீரவிளையாட்டு ‘
ஜல்லிகட்டை’ நடத்தவேண்டும் என்று
அமைதியாக
போராடியவர்கள் மீது காவல் துறை தடியடி செய்தும் , கைது செய்தும் தனது அதிகார
திமிரை காட்டியுள்ளது. அப்பாவி மாணவர்கள் மண்டை பிளந்து, கை , கால்கள் , உடல்
என்று ஒரு இடம் பாக்கிவைக்கமால் தடியடி நடத்தி நமது தோழர்களை ரத்தவெள்ளத்தில்
மூழ்கடித்து உள்ளனர்.
இதை தட்டி கேட்க
வேண்டாமா ?
இதை எதிர்த்து
தைரியமாக நிற்க வேண்டாமா ?
இதை இப்படியே
விட்டுவிட்டால் நம்மை வருங்காலம் சபிக்கும் !
தோழர்களே !
நாம் எந்த அரசியல்
கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல !
நாம் எந்த சாதிய
அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல !!
நமது வீரவிளையாட்டு
!!!
நாம் ஒன்றுபட்டு நம்
சக்தியை இந்த உலகிற்கு காட்ட வேண்டும் !
நாம் தமிழர் என்ற
உணர்வு வேண்டும் !
புறப்படுங்கள் !
மாணவர் ஒற்றுமை
ஓங்குக !! “- என்று வீர ஆவேசமாக பேசியது என்னை என்னவோ செய்தது. அந்த சீனியர்
கூறியதில் உண்மை இருப்பதாக உணர்தேன். என் ரத்தம்
சூடு ஏறியது. நாடி
நரம்புகள் மெய்சிலிர்த்தன. எனக்குள் ஒரு ஆவேசம் பிறந்தது. வீடு, படிப்பு என்று
இருந்த நான் புறப்பட்டு விட்டேன்.
தெருவுக்கு
வந்துவிட்டேன் .
ஆம் !
‘ கைது செய்த
மாணவர்களை உடனே விடுதலை செய் ! ‘
என்ற கை அட்டையுடன்
புறப்பட்டு விட்டேன் ....
ஆம் !
‘ தமிழக மக்கள்
கலாச்சாரம் ஓங்குக ! ‘
என்று கக்திக்கொண்டே
புறப்பட்டு விட்டேன் !
எங்கு ? எங்கே ?
கோஷம் போட்டுக்கொண்டே முதன் முதலாக தெருவில் நடந்து போய்க்கொண்டு இருக்கேன்.
எதை நோக்கி ?
எதை நோக்கி ??
மெரினா !!!
சத்யன் சிறுகதை
18-01-2017
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!