Tuesday, 17 July 2018

காட்டு மிராண்டிகள் ...!!!





                                                  காட்டு மிராண்டிகள் ...!!!


            நேற்று சென்னை காவல் துறை 18 காட்டு மிராண்டிகளை 
            கைது செய்து உள்ளது.

            என்ன விஷயம் ?

            ஒரு 3௦௦ அடுக்குமாடி குடிஇருப்பில் ஒரு 11 வயது சிறுமி 
            கடந்த 6 மாதங்களாக கற்பழிக்க பட்டு இருக்கிறாள் .
            அந்த சிறுமி 7-ம் வகுப்பு படிப்பவள். காது கோளாறு உள்ள 
            ஒரு அப்பாவி சிறுமி.

            குடிஇருப்பு வாச் மேன், உள்ளிட்ட 18 பேர் கொண்ட கும்பல் 
            சிறுமியை 6 மாதங்களாக கற்பழித்து வந்து உள்ளனர். தினமும் 
            பள்ளி முடிந்து வரும் போது சிறுமியை, மொட்டை மாடி, காலி வீடு 
            அல்லது ஜிம் ரூமுக்கு அழைத்து சென்று கற்பழித்து உள்ளனர் .
            சில முறை கூட்டு (Gang Rape) கற்பழிப்பும் செய்து உள்ளனர் . அதை 
            வீடியோவில் பதிவு செய்து யாரிடமாவது உண்மையை சொன்னால்
            வெளியே காண்பித்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். 6 மாதம் 
            பொறுமையாக இருந்த சிறுமி கடந்த 13-ம் தேதி வயற்று வலி 
            தாங்காமல் தன் அக்காவிடம் சொல்ல அவள் பெற்றோடரிடம் 
            சொல்ல அவர்கள்  புகார் அளித்தனர் . இதன் 
            விளைவு தான் 18 பேர் கைது.

             ஆம் ...!
              இந்த 18 பெரும் வெறும் காட்டு மிராண்டிகள் தான் ...!
              பெண்ணுக்கும் சிறுமிக்கும் வித்யாசம் தெரியாத மிக பெரிய 
              காமுகர்கள். காட்டு மிராண்டிகள்...!

             பாலியல் பலாத்காரம் என்பதே மிக பெரிய கொடுரம் . வன்முறை.
             அதிலும் குழந்தைகளை கற்பழிப்பது மிக மிக மிக பெரிய 
             கொடுரம் ..! 

            நாம் அன்றாட நாட்டில் கற்பழிப்பு செய்தியை பார்த்து வருகிறோம் 
            அதிலும் குழந்தைகள் பலியாடு ஆவது ....

                           நெஞ்சு பொறுக்குது இல்லையே 
                            இந்த நிலை கேட்ட மிருகங்களை ...
                            நினைத்து  விட்டால் ....

           கற்பழிப்பு செய்வோருக்கு தூக்கு தண்டனை தர வேண்டும் ...!
           குழந்தைகளை கற்பழிப்பு செய்பவர்களை ....நாடு ரோட்டில் நிற்க 
           வைத்து ....நிர்வாணமாக ....அவர்களது ஆண் குறியில் துப்பாக்கி 
           வைத்து சுட்டு தள்ள வேண்டூம். 

           ஆம் ...! மிக கொடூர தண்டனை தான் ...!! வேறு வழியில்லை ...!!!

            பயம் வர வேண்டும்.

            மக்களும் , சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்களும் நினைத்தால் 
            இது சட்டம் ஆகும் .

            நினைப்பார்களா ?
            அரசு இந்த சட்டத்தை கொண்டு வருமா ?

            உண்மையுடன்,
            R.சத்திய நாராயணன்     ஸ்ரீ விவேக்      17-07-2018

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!