Friday, 13 January 2017





சத்யன்                          சத்ய பூ                   பூ 01   இதழ் 02

                            பொங்கலோ பொங்கல் !

பொங்கல்.
மக்கள் பண்டிகை. புரட்சி தான் மக்களது திருவிழா என லெனின் கூறினார்.
ஆனால் தமிழக பண்டிகளில் புரட்சிகர அம்சங்கள் நிரம்ப உள்ளன. பொங்கல்
எந்தவிதமான உருவ கடவுளை முன்னிறுத்தி கொண்டாட படுவதில்லை. எந்த
ஆண் அல்லது பெண் தெய்வத்தை வழிபாடும் நாள் அல்ல பொங்கல். சூரியன் !
ஆம். சூரியனை மட்டுமே நினைத்து அவனை கடவுளாக பாவித்து அவனுக்கு நன்றி
செலுத்தும் நாள் தான் பொங்கல்.
சூரியன் !
சூரியன் இல்லையேல் உயிர் இல்லை. பயிர் இல்லை. வாழ்வு இல்லை. இதை உணர்ந்து
மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள் தான் பொங்கல். எந்தவித சாதிய தொடர்பும்
இன்றி அணைத்து சாதியினரும் கொண்டாடும் பண்டிகை.
இதே போல தான் மாட்டு பொங்கல்.
மாடு இல்லையேல் உழவு இல்லை. சாணம் இல்லையேல் உரம் இல்லை. பசு
இல்லையேல் பால் இல்லை. மோர் இல்லை. தயிர் இல்லை. நெய் இல்லை. வெண்ணை
இல்லை. பாட்டாளி வர்க்கமும், விவசாயிகளும் அன்றாட குடிக்கும் "சாயா" இல்லை.
எனவே மாட்டை ஒரு புனித இடத்தில வைத்து பார்த்து நன்றி  தெரிவிக்கும் நாள்
தான் மாட்டு பொங்கல்.
நன்றி மறப்பது நன்றன்று !
ஆம் !
தமிழர்கள் உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள்.
அவர்களது கலாச்சாரத்தில் அர்த்தம் இல்லமால் இல்லை.
வர்க்க பேதமின்றி ஒட்டுமொத்த மக்களும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாள்
பொங்கல்.
ஆனால் வறட்சி காரணமாக இன்று  பல விவசாயிகள் தற்கொலை செய்து வருவது வருந்த தக்கது.
உடனே அரசு வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு நிவாரணம் அல்லது உதவி தொகை
வழங்க வேண்டும்.
இந்த துக்க செய்தியை தள்ளி வைத்து விட்டு நாம் அனைவரும் சந்தோசமாக பொங்கல்,
மாட்டு பொங்கல் கொண்டாடுவோம்.
பொங்கலோ பொங்கல் !
பொங்கலோ பொங்கல் !!
பொங்கலோ பொங்கல் !!!

1 comment:

  1. READ ! SHARE !! COMMENT !!!
    BEST WISHES.

    contactsrivivek@gmail.com

    ReplyDelete

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!