சத்யன் சத்திய பூ பூ 02 இதழ் 03 20-01-2017
புதிய தமிழன் உருவாகிறான் !!
நான் புதிய இந்தியனை உருவாக்க வேண்டும் என சத்திய பூ 02 இதழ் 02-ல் எழுதினேன் .
அது மிகவும் கடினம் என்றும் எழுதினேன்.
நிற்க.
இந்தியாவிற்கு பிறகு வருகிறேன்.
ஓ ! தமிழகமே !!
அப்பப்பா ! அம்மம்மா !!
தமிழகம் விழித்து கொண்டது. கொதித்து எழுந்துள்ளது .
ஆம் !
மாணவர்கள் ஒரு அமைதியான புரட்சியை செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டிற்காக மல்லுக்கட்டி தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.
அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. மதுரையில் காவல் துறை ஆர்பாட்டம், ஊர்வலம்
ஆகியவற்றிக்கு தடை விதித்து உள்ளது.
தடையாம் தடை !
மாணவர்கள் தடையை உடைத்து தொடர்ந்து போராடுவார்கள் ! அவர்களை நிறுத்தும் சக்தி
இந்த உலகத்தில் இல்லை. அவர்கள் ஒன்றுபட்டு உள்ளனர். தங்களது கோரிக்கையில் உறுதியாக
உள்ளனர். வெற்றி பெரும் வரை போராடுவார்கள். எனக்கு அந்த நம்பிக்கையுள்ளது. ஆனால்
மாணவர்கள் எச்சரிக்கையுடன் போராட வேண்டும். ஒன்று...அவர்கள் அரசின் அடக்குமுறைக்கு
ஆளாகலாம். ஒடுக்குமுறையை அரசு கட்டவிழ்த்து விடலாம். இதை கண்டு அஞ்சாமல் தொடர்ந்து
மனஉறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் .
போராட்ட களத்தில் உள்ள இளம் சிங்கங்களுக்கு எனது போராட்ட வாழ்த்துக்கள்.
மேலும் ஒரு விஷயம்....
மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயம்...
மிக மிக மிக முக்கிய விஷயம்....
எந்த அரசியல் கட்சியையும் உங்கள் போராட்டத்தில் தலையிட அனுமதிக்காதீர்கள்.
எந்த சாதிய அமைப்பையும் பக்கத்திலேயே அனுமதிக்காது போராட்டத்தை நடத்துங்கள்.
போராட்டத்தில் இருந்து தலைமை உருவாகும்.
ஆம் !
நான் மாணவ தலைமை பற்றி தான் கூறுகிறேன்.
ஒரு புதிய மாணவ அமைப்பை உருவாக்குங்கள் . இது காலத்தின் அவசியம்.
தமிழக மாணவர் பேரவை என்றோ புரட்சிகர மாணவர் மன்றம் என்றோ உங்களுக்கு
பிடித்த பேரை வையுங்கள். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களை அமைப்பு ரீதியாக
திரட்டுங்கள். இது தான் சமயம்.
மாணவ சமுதாயம் அமைப்பாக ஒன்று திரண்டு விட்டால் அதுவே புதிய தமிழகத்திற்கான
அடிப்படை. வேர். கரு. எல்லாம்.
எனவே மாணவர்களே !
ஒன்றுபட்டு முன்னேறுங்கள் !!
ஒரு புதிய மாணவர் அமைப்பை தமிழகத்தில் துவக்குங்கள் !!!
உங்களுக்கு எதிர்கால கடமைகள் ஏராளம் உள்ளன.
அது குறித்து பிறகு பேசுவோம்.
முதலில் தமிழக கலாச்சாரத்தை மீட்டு எடுக்கும் போராட்டத்தில் வெற்றி காணுங்கள் !
பின் தமிழக மாணவ அமைப்பை உருவாக்குங்கள் !!
இது மிக மிக மிக அவசியம். இதுவே தருணம். எந்த அரசியல், சாதிய தொடர்பும் இன்றி
முழுக்க முழுக்க மாணவ அமைப்பு சுதந்திரமாக உருவாக்குங்கள்.
மாணவர் ஒற்றுமை ஓங்குக !
மாணவர் போராட்டம் வெல்க !!
மாணவர் அமைப்பு துவங்குக !!!
அன்புள்ள சத்திக்கு,
ReplyDeleteசத்திய பூ வில் இது வரை வந்துள்ள அனைத்துக் கட்டுரைகளையும் வாசித்தேன். நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றி எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. ஒரு மார்க்சியர் அதை எப்படிப் பார்க்க வேண்டும் என என்னுடைய puvimainthan blog ல் எழுதியுள்ளேன். அது சென்ற வருடம் எழுதிய கட்டுரை. முடிந்தால் வாசியுங்கள்.